logo

கெடுதல் செய்யும் அனைவரும் நரகாசூரன்தான்...

ஆன்மீகம்

தீபாவளிக்கு முந்தைய நாள் யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டுங்கள்

பலன்கள்

முக அழகை அதிகரிக்கும் பிராணாயாமம்

உடல் நலம்

இதயத்தை காக்கும் கட்டிப்பிடி வைத்தியம்

மருத்துவம்

திருமண தோஷம் என்பது உண்மையா? தோஷத்தால் விளையும் செயல்கள் என்ன?

ஆன்மீகம்

பலவகையான தீபாவளி இரண்டுவிதமாக கொண்டாடும் அதிசயம்

பலன்கள்

நோய் தீர்க்கும் தெய்வங்களும் நோய்தீர்க்கும் கிழமைகளும்

ஆன்மீகம்

ஐப்பசி மாத ராசி பலன் (மேஷம் முதல் கன்னி வரை)

பலன்கள்

ஐப்பசி மாத ராசி பலன் (துலாம் முதல் மீனம் வரை)

பலன்கள்

பெருமாளும் நம்முடன் சேர்ந்து முன்னோருக்கு திதி கொடுக்கும் தலம்

ஆன்மீகம்

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆடி, புரட்டாசி, தை அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும்

பலன்கள்

பல நோய்களை தீர்க்கும் ஒரே மந்திரம் கூறிய அகத்தியப் பெருமான்

ஆன்மீகம்

பிரச்சனை தீர, அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் உடனடி பலன் கிடைக்கும்

ஆன்மீகம்

சனிதோஷத்தால் அவதி ஏற்படுகிறதா? புரட்டாசி சனி விரதமும் கடைபிடியுங்கள்

ஆன்மீகம்

அர்ஜுனனின் தேர் கொடியில் அனுமன் தோன்றிய கதை

ஆன்மீகம்

இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய யாகங்கள்

ஆன்மீகம்

பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் மாகாளய அமாவாசை, விரதம் கடைபிடிக்க உகந்த நாட்கள்

ஆன்மீகம்

ஒவ்வொரு ராசிக்கும் உரிய சிவஸ்தலங்கள்

ஆன்மீகம்
ராசிபலன்கள்

கார்த்திகை மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியைக் சுக்கிரபகவான் பார்க்கிறார். அவரோடு தைர்ய ரோகாதிபதியான புதனும்,கூடியிருக்கிறார்கள். எனவே சுகங்களும், சந்தோஷங் களும் அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். பகல்- இரவு பாராமல் பாடுபட்டதற்கேற்ற பலன்கள் இப்பொழுது கிடைக்கும். சில எதிர்பாராத நல்ல தகவல்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

செய்யும் தொழிலில் உயர்வு, செயல்பாட்டில் வெற்றி போன்றவை ஏற்படும். வருமானம் வருவதற்கான வழியைக் கண்டு கொள்வீர்கள்.அஷ்டஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் 7ல் இருக்கும் குரு,சூரியனோடும், இணைந்து சஞ்சரிக்கிறார்.குரு,சூரியன் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை, பெரியோர்களின் தொடர்புகளாலும், பஞ்சாயத்துகளாலும் தீர்த்துக் கொள்வது நல்லது.

தொட்டது துலங்கும். தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பட்ட கஷ்டங்கள் தீர்ந்தது என்று பலரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும்.மங்கல ஓசை, மனையில் கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். வாசல் வரை வந்து திரும்பிய வரன்கள் கூட மீண்டும் வரலாம். வியாபாரப் போட்டிகள் விலகும்.

குரு- சூரியன்ஐந்தில் யோகத்தை உருவாக்குகிறார். தனாதிபதி சூரியன் பாக்கிய, ரோகாதிபதி குருவுடன் கூடி 5-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குரு பார்வை 1,9,11 ஆகிய 3 இடங்களில் பதிகின்றது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்புகள் வந்து சேரும்.

பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். எந்தக் காரியத்தையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம்.. என்று செய்து முடிப்பீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்து கொண்டேயிருக்கும்.புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்புலமாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் யோகம்தான்.உங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து, அதற்குரிய வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வது நல்லது.உத்தியோகம் சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அது உடனடியாக கைகூடும். கடன் சுமை குறைய பூர்வீகச் சொத்துகளை விற்க நேரிடும். எதிர்பாராத சுப விரயங்கள் வரலாம்.

தனவரவு திருப்திகரமாக இருக்கும். தக்க விதத்தில் குடும்ப முன்னேற்றம் கூடும். தொழில் வளர்ச்சி உண்டு. நண்பர்களின் நல் ஆதரவோடு வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள்.குறிப்பாக மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தென்படும். மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது.

தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், குடும்பம் மற்றும் பஞ்சமாதிபதி குருவும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். எனவே தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானம் இருமடங்காகும். வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பர். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீண்டும் தொடரும்.

உத்தியோக முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். பதவி உயர்வு வரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.இல்லம் கட்டிக் குடியேறுவதா? அல்லது வீடு வாங்கிக் குடியேறுவதா? என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள், சுய ஜாதகத்தில் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கு செவ்வாய் பலம் பெற்றிருக்கிறதோ அதைப் பொறுத்து முடி வெடுத்துக் கொள்ளலாம். ஏழரைச் சனியில் ஜென்மசனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும் எதிர்பாராத லாபங்கள் வந்து சேறும்.சூரிய,குரு சேர்க்கை இருப்பது நல்லது.எண்ணங்கள் நிறைவேறுவதில் சில இடையூறுகளும் ஏற்படலாம். எனவே ராகு-கேது பிரீதி செய்வதும், சனிக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதும் நற்பலன்களை வழங்கும். பதவி உயர்வில் இதுவரை இருந்த தடைகள் அகலும். சக பணியாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்புச் செய்வர்.

தொழில் வெற்றிநடை போடும். பங்குதாரர்களால் ஏற்பட்ட பணப் பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்த இடையூறுகள் அகலும். அதே நேரத்தில் கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

குடும்பச்சுமை கூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்.பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே பிள்ளைகளால் சில விரயங்கள் ஏற்படலாம். வெளியூரில் வசிக்கும் பிள்ளைகளாக இருந்தால், அவர்களின் முன்னேற்றத்தில் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது.

ad
ஆன்மீகமலர் இ-புத்தகம்
16-30 நவம்பர் 2018
1-15 நவம்பர் 2018
16-31 அக்டோபர் 2018
1-15 அக்டோபர் 2018
16-30 செப்டம்பர் 2018
1-15 செப்டம்பர் 2018
16-31 ஆகஸ்ட் 2018
1-15 ஆகஸ்ட் 2018
16-31 ஜூலை 2018
1-15 ஜூலை 2018
ad