logo
home பலன்கள் ஜூன் 02, 2018
ஜூன் மாத ராசி பலன் (மேஷம் முதல் கன்னி வரை)
article image

Color
Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றிபெறும் மேஷராசியினரே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் சஞ்சாரத்தால் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை.
தொழில் ஸ்தானாதிபதி செவ்வாயும் கேதுவும் இருக்கிறார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மாதத்தின் மத்திய பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியில் இருக்கும் புத்திகாரகன் புதனால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.
அரசியல் துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.
மாணவ,மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது.
அஸ்வினி:
அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். செலவு அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
பரணி:
அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. புதிய நட்பு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்:
வியாபாரம் தொடர்பான அலைச்சலும் புதிய ஆர்டர் பற்றிய கவலையும் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சனை தீரும்.
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.



ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிக்கும் ரிஷபராசியினரே உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். மாத தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். சுகாதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் வசதிகளுக்குக் குறைவிருக்காது.
பாக்கிய ஸ்தானத்தை உச்ச நிலையில் இருக்கும் செவ்வாய் இருக்கிறார். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். குடும்பாதிபதி புதன் விரையஸ்தானத்தில் இருப்பதால் சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும்.ஜூன் 5 முதல் புதன் ராசிக்குள் வருவதால் சுப விரையம் கட்டுக்குள் வரும்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங் களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.
மாணவ , மாணவிகளுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும்.நனபர்கள் மூலம் சில நன்மைகள் நடந்தேரும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரோகிணி:
எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வீண்பகை உண்டாகலாம். எனவே கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும்.
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண் மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.



மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)
திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான மிதுன ராசியினரே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த மாதம் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.லாபஸ்தானாதிபதி செவ்வாய் 2ம் வீட்டை பார்ப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில் ஸ்தானாதிபதி குரு பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது நல்லது.
பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
அரசியல் துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம்.
மாணவ , மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
திருவாதிரை:
தொழிலில் சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.



கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்கும் கடகராசியினரே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்குகள் சார்ந்த எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.வீடு மனை ஆகியவற்றில் முதலீடு செய்யும் போது கவனம் தேவை.
தொழில் ஸ்தானத்தில் புதன் இருக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது.
குடும்பாதிபதி சூரியன் லாபஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயனங்கள் ஏற்படும்.
அரசியல் துறையினருக்கு உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரத்து இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.
மாணவ , மாணவிகளுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
புனர் பூசம் 4ம் பாதம்:
பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். காரிய தாமதம் உண்டாகும். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.
பூசம்:
வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது.
ஆயில்யம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.
பரிகாரம்: வராகியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.



சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
அதிகார தோரணையுடன் காணப்படும் சிம்மராசியினரே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். இந்த மாதம் ராசிநாதன் சூரியன் சஞ்சாரத்தால் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் இருப்பதன் மூலம் தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பண உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பாதிபதி புதன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.
பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும். இதுவரை இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.
அரசியல்துறையினருக்கு புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். ராசிநாதன் சூரியன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.
மகம்:
வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
பூரம்:
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.
உத்திரம் 1ம் பாதம்:
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.



கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் கன்னிராசியினரே இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. ராசிநாதன் புதன் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பாதசார சஞ்சாரம் மூலம் எல்லா காரியங்களிலும் அனுகூலத்தை தருவார். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக் கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான விஷயங்கள் நன்மை தரும்.ஜூன் 5ம் தேதிக்கு மேல் புதன் பாக்கிய ஸ்தானத்தி சஞ்சரிப்பது எல்லா வகையிலும் நன்மையை தரும்.
தொழில் ஸ்தானத்தை சனி பார்க்கிறார். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.
குடும்பாதிபதி சுக்கிரன் பத்தாம் ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு ராசிநாதன் புதனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.
அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
மாணவ , மாணவிகளுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அஸ்தம்:
மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2, பாதம்:
டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
பரிகாரம்: புதன்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.