logo
home பலன்கள் செப்டம்பர் 18, 2018
புரட்டாசி மாத ராசிபலன்கள் (துலாம் முதல் மீனம் வரை)
article image

Color
Share

துலாம் :
யாருக்காகக் காத்திருக்கிறாய்? யாருக்காகப் பார்த்திருக்கிறாய்? நீங்கள் தான் உலகம். நீங்கள் தான் உதயம். உங்களைத் தவிர யாரால் முடியும்? எவரால் விடியும்? முயற்சி செய்யுங்கள். பயிற்சி செய்யுங்கள். முழு வீச்சில் பணியைச் செய்யுங்கள். அணியணியாய் உங்களை அணைத்துக் கொள்ள அகிலமே திரண்டு வரும் மாதம் இது.கவர்ச்சியாகப் பேசிக்காரியங்களைச் சாதித்துக் கொள்வதில் வல்லவர்களாக விளங்கும் துலாம் ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் அந்தந்த இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் எல்லாம் நல்லவிதமாக நடைபெறும். எனவே பிள்ளைகளின் படிப்பு அல்லது பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை, கல்யாணம் தொடர்பாக நீங்கள் ஏதேனும் புது முயற்சிகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக் கும்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் குருவின் பலனால் சங்கடங்கள் தீரும். சார்ந்து இருப்பவர்களால் நன்மை கிட்டும். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறிகுறிகள் தென்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும், பணிபுரிய வேண்டும் என்று விரும்பியவர் களுக்கு இப்பொழுது அவர்கள் விருப்பங்கள் நிறைவேறப்போகின்றது.2-ம் இடம் குரு வருவதால் பொருள் சேர்க்கை ஏற்படும். புகழ் கூடும். பண்புள்ள மனிதர் களின் தொடர்பால் பல நாட்களாக நடைபெறாத ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாகும். இடையூறுகளை வெல்லக் கூடிய ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு என்பதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நீங்கள் விரதமிருந்து குருபகவானை வழிபடுவது நல்லது.இந்த மாதத்தில் நவராத்திரி விழா வருகின்றது. எனவே ஒன்பது நாட்களும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் சனிப்பெயர்ச்சிக்கு பிறகே உங்களுக்குச் சாதகமான பலன்கள் ஏராளமாக நடைபெறும்.கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம். சகோதரர்களால் விரயம் உண்டு. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் உருவாகலாம்.இம்மாதம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்கள் ஸ்தம்பித்து நிற்கலாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் ஏற்படாமல் இணக்கம் ஏற்பட, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்வதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வழிநடத்துவது உகந்தது. உத்தியோக மாற்றம் உருவாவதை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். திசாபுத்தி வலுவிழந்தவர்களுக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். பெற்றோர் வழி ஆதரவு ஓரளவு உண்டு. விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள்.
பரிகாரம்: வியாழன்தோறும் குருவை வழிபடுவதோடு சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபாடு செய்யுங்கள். அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.


விருச்சிகம்:
நமக்கேன் வம்பு என ஒதுங்காதீரகள். நம்மால் ஒன்றும் முடியாது எனத் தயங்காதீர்கள். சிறகு முளைத்த பறவையை கூட்டுக்குள்ளேயே வைத்திருப்பது மிக பெரிய குற்றம். உங்களது சிந்தனைக்குத் தகுந்த வாய்ப்புகளை நாமே தராததும், பெறாததும் மன்னிக்க முடியாத குற்றமே விரைந்து செயல் புரிந்து வீர நடை போடும் மாதம் இது வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். மேலும் 10-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன் 11-ம் இடமான லாப ஸ்தானத்திலும், 11-ம் இடத்திற்கு அதிபதியான புதன் 11-ம் இடமான லாப ஸ்தானத்திலும் சஞ்சரித்து யோகம் பெறுகிறார்கள். இந்த யோகம் மிகச்சிறப்பான யோகமாகும்.நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக முடிவடையும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். இனி விரைய விலகப் போகின்றது.குருவிலகுவதற்கு முன்னதாகவே நன்மைகளைச் செய்யத் தொடங்கும். குறிப்பாக 1 மாத காலத்திற்கு முன்னரே குருபகவான் தனது ஆதிபத்யங்களுக்குரிய பலன்களை நல்ல விதமாக அள்ளி வழங்குவார்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் ஜென்ம குருவாக வர போகிறார் அது அவ்வளவு நல்லது இல்லை என்றாலும் அவரின் பார்வை மூலம் முக நல்ல நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி தர போய்கிறார் அவரு பார்வை 5.7,9,இடத்தில் படுவதால் நன்மைகள் சிலது நடந்தே தீரும்.அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். எனவே தடைகற்கள் எல்லாம் படிக்கற் களாக மாறும். தானாக வந்த துன்பம் தவிடு பொடியாகும். உடல் ஆரோக்கியம் சீராக உற்சாகப்படுத்தும். இம்மாதம் உங்களுக்கு இனிய மாதமாகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். நவராத்திரி நாயகியை கொண்டாடுங்கள். விஜயதசமியன்று வெற்றிக்குரிய சக்தியை வழிபடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.இம்மாதம் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச்செல்லும் மாதமாகும். அஷ்டமத்தில் ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் உண்டு. 1-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு திடீர் மாற்றங்கள் உருவாகலாம். மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
பரிகாரம் : மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும்.


தனுசு :
நீங்கள் காண்பதெல்லாம் கல்வியே! படிப்பதெல்லாம் பாடங்களே! முதல் இடம் கடைநிலை என்பதெல்லாம் மனசக்தியே தவிர, மனதின் சக்தி கிடையாது. உலகம் எடைபோடுவது உனக்குத் தடைபோடுகிறது என்றால் அதனை உடைத்துவிட்டு வெளியே வாருங்கள்! வரலாற்றைப் புரட்டிப்பாருங்கள் அது உங்களைப் புரட்டிப்போடும்.எழுங்கள் வானமும் தொட்டுவிடும் தூரம்தான். இமயத்தை மீது ஏறிய பின்பு பார்த்தால்,இமயம் கூட உங்கள் காலடியில்தான் இந்த மாதம்.பாசத்தோடு பழகியவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் தனுசு ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதனுக்கு லாப வீடான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பொருளாதார நிலை உயரும். சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான மாதமாக அமையும். தொழில் முன்னேற்றம் உண்டு. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பணிபுரியும் இடத்தில் இருந்த பகை மாறும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் தற்சமயம் பெயர்ச்சியான குரு பகவானும் 12-ம் இடத்தில் சஞ்சரித்து அதன்பார்வையை 4-ம் இடத்தில் பதிக்கின்றது. சுக ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் சுகங்களும், சந்தோஷங்களும் கூடுதலாக இருக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பால்ய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன்பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். உயர்மட்ட அதிகாரிகளின் நெருக்கத்தால் சம்பள உயர்வோடு கூடிய சந்தோஷமான மாற்றம் வந்து சேரும். ஏழரைச் சனியில் ஜென்ம சனி ஆதிக்கம் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் தன ஸ்தானம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாகச் சனி விளங்குவதால் வரவைக் கொடுத்தே உங்களுக்குச் செலவுகளையும் வழங்குவார். எனவே எந்தக் காரியத்தையும் நீங்கள் செய்யத்தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங்க வேண்டியதில்லை. காரியத்தைத் தொடங்கிவிட்டால் பணம் தானாக வந்துசேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.அரசியல் மற்றும் பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். மேலிடத்து அனு கூலத்தோடு மேன்மை பெறுவீர்கள். 9-ம் இடத்திற்கு அதிபதியான புதனும், 10-ம் இடத்திற்கு அதிபதியான சூரியனும் நல்லயோகம் பெற்றிருக்கிறார்கள். ஒருசிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். எதிரிகள் விலகுவர். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. ஆரோக்கியத்திற்காக செலவிட்ட தொகை குறையும். ஆதாயம் தரும் தகவல் அன்றாடம் வந்து கொண்டேயிருக்கும்.உறவினர்கள் மனக்கசப்பு மாறி உங்களோடு இணைந்து செயல்படுவர். நிலையான வருமானத்திற்கு வழி யமைத்துக் கொள்வீர்கள். கூட்டு முயற்சிகளின் மூலம் பலனடைந்தவர்கள் இப்பொழுது தனித்து இயங்க முன்வருவர். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். கவலை என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியில் இருந்து விலகப் போகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மகாளய அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்னேற்றப் பாதையிலிருந்த முட்டுக்கட்டைகள் விலகும். மேலும் நவராத்திரி விழா இம்மாதம் வருகின்றது. அதில் கலந்து கொண்டு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வதோடு அம்பிகை வெற்றிபெற்ற நாளான விஜயதசமியன்று ஆலயவழிபாட்டை மேற்கொண்டால் நல்ல தகவல்கள் நாளும் வந்து கொண்டேயிருக்கும்.நடக்கும் தொழிலோடு கூடுதலாக ஏதேனும் செய்யலாமா? என்று யோசிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.புதன் தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உருவாகும். வாடகைக்கு உள்ள இடத்தில் தொழில் நடத்துவோர் அந்த இடத்தை விலைக்கு வாங்க முற்படுவர். உன்னதமான நேரம் இது.இம்மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாகும். பாராட்டும், புகழும் கூடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் கூடும். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில்லாப் பட்டதாரிகளாக விளங்கிய பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அவர்கள் மணமாலை சூடும் வாய்ப்பும் உருவாகும். உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சம்பள உயர்வோடு கூடிய சந்தோஷத் தகவல் வந்து சேரும்.
பரிகாரம் : வியாழன் தோறும் குருவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முல்லைப்பூ மாலை சூட்டினால் நல்ல பலன் கிடைக்கும். அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவது நல்லது.


மகரம் :
உங்களால் முடியாது என்று உலகம் சொல்லியிருக்கலாம். சொன்னால் விளங்காது என உன்னைத் தாழ்த்தியிருக்கலாம். இதெல்லாம் தேறாது என் ஏளனம் செய்திருக்கலாம், இருப்பினும் சிறு விதைக்குள் ஆலமரம் விருட்சத்தோடு இருக்கிறது என யாருக்குத் தெரியும்,உங்களில் உள்ள முழு திறமைகளையும் கான்பிக்கும் ஒரு அற்புதம் நிறைந்த மாதமாக மாற்றி கொள்ளும் மாதம் இது.எடுத்த லட்சியம் நிறைவேறும் வரை இரவு-பகல் பாராமல் பாடுபடும் மகர ராசி நேயர்களே!புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 9ம் ஆட்சியாக உள்ளது. 5.10 பத்தாம் இடத்திற்க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் ஆட்சி பெற்று இருப்பது பல வழிகளில் ஆபத்துகள் விலகி அதிர்ஷ்டம் மேலோங்கும்.ஜென்மத்தில் கேது செவ்வாய் சஞ்சரிக்கும் பொழுது ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வைத்தியச் செலவுகள் உருவாகலாம். வீண் விரயங்கள் கூடும்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் லாபம் அதிகரிக்கும்.ஒவ்வொரு சனிக்கிழமையும், காகத்திற்கு அன்னம் வைப்பது நல்லது. குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வந்தால் 11-ம் இடத்து குருவால் முத்தான பலன்கள் கிடைக்கும். நவராத்திரி விழாக் காலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வந்த துயரங்கள் வாயிலோடு நிற்கும்.கன்னி ராசிக்குப் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். 6, 9-க்கு அதிபதி உச்சம் பெறும் பொழுது ஜீவன ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும், நேர்முகத் தேர்விற்குச் சென்றும் இதுவரை பலன் கிடைக்கவில்லையே என்று நினைத்தவர்களுக்கு இப்பொழுது அழைப்பு வரப்போகின்றது. பயணங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் மணிவிழா, பவளவிழா, முத்துவிழா போன்றவற்றை நடத்தி மகிழும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட அரசல் புரசல்கள் இணக்கமாக மாறி பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துக் கொள்வீர்கள். பங்காளிப் பகை மாறும்.வெல்லம் போல் இனிமையாக பேசியவர்களில் ஒருசிலர் விலகிச் சென்றிருக்கலாம். அவர்கள் மீண்டும் வந்திணைய வாய்ப்பு உண்டு. 10இடத்து குருவின் ஆதிக்கத்தால் பலவிதக் கஷ்டங்களையும், நஷ்டங் களையும் எதிர்கொண்டு வந்த நீங்கள் இப்பொழுது இஷ்டம் போல் வாழ்க்கை நடத்த எல்லா வழிகளிலும் உதவி கிடைக்கப் போகின்றது. மற்றவர்களைப் போல இல்லாமல் நாம் ஒரு புது முறையைக் கையாள வேண்டுமென்று நினைப்பவர்கள் நீங்கள். அதற்கு இதுவரை இடையூறு சக்திகள் இருந்திருக்கலாம். இனி உங்கள் நோக்கங்கள் நிறைவேறும். தாக்கங்கள் அகலும்.
பரிகாரம் : வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். பவுர்ணமி கிரிவலம் வருவதும் பலன் தரும்.முன்னோரகள் வழிபாடு செய்தால் பல வழிகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.


கும்பம் :
நீங்கள் மனதுவைத்தால் அவற்றிலிருந்து நிரூற்றை அழைத்து வந்து நீரை அள்ளிப்பருகலாம். எல்லாத்திறன்களும் உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் போது நீங்கள் ஏன் உலகைக் கண்டு மயங்கிக் கிடக்கிறீர்க்லள் உங்களது சாதனையைத் தொடராமல் தயங்கிக் கிடக்கிறது.தொடருங்கள் உங்கள் சக்தி இவ்வளவு பெரியாதா என்று உனரும் மாதம் இது. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லும் கும்ப ராசி நேயர்களே!புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரப்போகின்றது. கூட்டு முயற்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாய் மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும்.‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் இனி படிப் படியான முன்னேற்றம் பல வழிகளிலும் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நிறைய நடைபெறப் போகின்றது. தள்ளிப்போன சுபகாரியங்கள் தானாக நடைபெறும்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் 10-ல் குரு வந்திருக்கின்றார். ‘10-ல் குரு வந்தால் பதவியைப் பறிப்பார்’ என்பார்கள். எனவே உத்தியோகம் மற்றும் உயர்பதவியில் இருப்பவர்கள் மேலிடத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இல்லையேல் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்யும். தாய்நாட்டில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் அமைப்பும், வெளிநாட்டில் இருப்பவர்களுக்குத் தாய்நாடு திரும்பும் அமைப்பும் உருவாகும்.இருப்பினும் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கின்ற குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் குடும் பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலவும், மறைமுக எதிர்ப்புகள் மாறவும் குருவிற்குரிய சிறப்புப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. மேலும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருத்துவச் செலவுகள் கூடும்.6-ல் ராகு, 12-ல் கேது சஞ்சரிக்கின்றார்கள். 6-ல் ராகு இருப்பதால் உத்தியோகத்தில் உயர்வும், ஊதியத்தில் எதிர்பார்த்தபடி சலுகைகளும் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். அதே நேரத்தில் 12-ல் கேது இருப்பதால் ஒருசில சமயங்களில் நீங்கள் எடுத்த முடிவால் அவதிப்படவும் நேரிடலாம். அதிக விரயங்களையும் அது கொடுக்கும். எனவே சான்றோர்களின் ஆலோசனை களையோ, ஆன்மிகம் சார்ந்தவர்களின் ஆலோசனை களையோ கேட்டு நடப்பது நல்லது.சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசியல்வாதிகளால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் வந்தடைவதிலும் தாமதம் ஏற்படலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். மதிநுட்பத்தோடு நடந்துகொள்வது நல்லது. இம்மாதம் நவராத்திரி விழா வருகின்றது. உங்கள் ராசிக்குச் சுக்ரன் நன்மை செய்யும் கிரகமாகும். எனவே பெண் தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு கைகொடுக்கும். அந்த அடிப்படையில் நவராத்திரி விழாக் காணும் அம்பிகையை 9 நாளும் சென்று வழிபட்டு வருவதோடு அம்பிகை வெற்றி பெற்ற நாளான விஜய தசமியிலும் அம்பிகையை வழிபட்டு வந்தால் வெற்றிச்செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம் : செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவதன் மூலம் சுபகாரியத் தடைகள் அகலும்.


மீனம் :
உங்னை இந்த உலகம் உற்றுப் பார்க்கிறது. உங்களிடம் மட்டுமே உலகை எதிர்பார்க்கிறது. பரீட்சைகள் பாடங்கள், பயிற்சிகள் இவையெல்லாம் உங்களுக்கு படிக்கட்டுகளாகப் பார்க்கிறது. நீங்கள் தாண்டும்போது கைதட்டுகிறது. தடுக்கும்போது, தவறும்போது தலையில் கொட்டுகிறது. ஆனால் அவர்கள் தீர்ப்பல்ல. ஒரு திறனாய்வு. உங்களால் எதுவும் முடியும். நீங்கள் தாண்ட முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை இதை மட்டும் அறிந்து செயல் படுங்கள் இந்த மாதம். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் மீன ராசி நேயர்களே! உங்கள் ராசிநாதன் குருபகவான் இப்பொழுது அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதியான சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். எனவே புரட்டாசி மாதம் முழுவதும் நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாகவே அஷ்டமத்திற்கு சனி வந்தாலும், குரு வந்தாலும், செவ்வாய் வந்தாலும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் பிறருக்கு நன்மை செய்ய முயற்சி செய்து, அது தீமையில் முடியலாம். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்க்கை அமையலாம். இரவு, பகலாக நீங்கள் அரும்பாடுபட்டு மேற்கொண்ட காரியங்களுக்கு பலனில்லாமல் போகலாம். பொதுவாகவே மாபெரும் கிரகங்கள் 8-ம் இடத்திற்கு வரும்பொழுது வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படத்தான் செய்யும். அவற்றை ஈடுகட்ட நீங்கள் வழிபாட்டில்தான் முழுக் கவனமும் செலுத்த வேண்டும். எனவே இந்த மாதத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருபகவானை வழிபட்டு, அர்ச்சனைகள் செய்து வருவது நல்லது. உங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொல்லி அர்ச்சனைகள் செய்யும் பொழுது முழுமையான நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். சோதனையான காலம் கூட இனிமையான நேரமாக மாற இறைவழிபாடு ஒன்றுதான் கைகொடுக்கும். உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி குரு பெயர்ச்சியால் இருக்கும் பொழுது சுபவிரயங்கள் அதிகரிக்கும். கல்யாண காரியங்களை துரிதமாக பேசி முடிக்கவும் இயலும். பிள்ளைகள் வெளிநாடு சென்று படிக்கவோ, வேலை பார்க்கவோ, நீங்கள் எடுத்து வந்த முயற்சியில் இதுவரை எதிர்கொண்டு வந்த தாமதங்கள் இனி அகலும். முன்னோர்கள் கட்டமைத்த ஆலயங்களை முழுமையாக பராமரித்து முறையாக திருப்பணிகள் செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகும். புதிய வேலையில் சேர்ந்து அதில் திருப்தியில்லாமல் வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இது அனுகூலம் தரும் நேரமாகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமும் ஏற்படும்.ராகு-கேதுக்களுக்குப் பிரீதி செய்வது நல்லது. பிரதோஷ நேரத்தில் நந்தியெம்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நவராத்திரி நாட்களில் மகிஷாசுர மர்த்தினியாக அம்பிகை அவதாரம் எடுத்து அசுரனை வெற்றி பெற்ற நாளான விஜயதசமி அன்று முறையாக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தடைகள் அகலும். தன வரவு திருப்தி தரும். வாழ்க்கை பயணம் நல்ல விதமாக அமையும்.அங்கு புதன் உச்சம் பெறுவதால் திருமண காரியங்கள் கை கூடும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். அயல்நாட்டுத் தொடர்பு அனுகூலம் தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். தாயார், தந்தையாரின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். அவர்களின் உடல்நலம் தேறும். உங்கள் தொழிலுக்கான மூலதனத்தைப் பெற்றோர்களே தரலாம்.


பரிகாரம்: செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும், வியாழன் தோறும் குருபகவானையும் வழிபாடு செய்யுங்கள். சிவன் உமையவள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், பவுர்ணமி கிரிவலம் வருவதன் மூலம் பலன் அதிகம் கிடைக்கும்.