logo
home பலன்கள் செப்டம்பர் 18, 2018
புரட்டாசி மாத ராசிபலன்கள் (மேஷம் முதல் கன்னி வரை)
article image

Color
Share

மேஷம் :
காலையில் கை தட்டியா கதிரவனை எழுப்புகிறார்கள்? காற்றை யாராவது கைப்பிடித்தா அழைத்து வருகிறார்கள்? இருட்டில் நிலவை எந்த நிலவை வைத்துப் பார்க்கிறார்கள்? நட்சத்திரங்களை யார் வந்து வானத்தில் விதைக்கிறார்கள்? இது நடக்குமா? அடுக்குமா? தடுக்கத்தான் முடியுமா? நீங்களும் அதுபோல்தான்.யாரும் உங்களை வந்து தட்டி கொடுத்த பின்பு தான் சாதிக்க ஆசை பட்டால் இந்த ஜென்மத்தில் அது நடக்காது.உங்களை உறுவாக்கும் சிற்பி உங்களுக்குள் தான் இருப்பதை கண்டு கொள்ளும் மாதம் இது.அடுத்தவர்களுக்கு உதவுவதில் அலாதி பிரியம் கொண்ட மேஷ ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் அகலும். மாதம் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் விதத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறப் போகின்றது. தொடக்க நாளில் சந்திரபலம் நன்றாக உள்ளது. எனவே சுகங்களும், சந்தோஷங்களும் பெருகும். ஆரோக்கியத் தொல்லை அகலும், ஆதாயம் அதிகரிக்கும். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தவிடுபொடி யாக்கும் தன்மை குருவின் பார்வைக்கு உண்டு.பிள்ளைகள் வழியில் உத்தியோகம், படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அதில் அனுகூலம் கிடைக்கும்.நேர்முகத் தேர்வு வரை சென்றும் வேலை கிடைக் காமல் வேதனைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். பணியில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு தானாக வந்து சேரும். உங்களை விட்டு விலகியிருந்த உடன்பிறப்புகள் இப்பொழுது சமரசமாகி உங்களோடு வந்திணைவர். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பர். அஷ்டமத்துச் குருவின் ஆதிக்கம் புரட்டாசி மாதம் 18ம் தேதி முதல் இருக்கின்றது. அது விலகுவதற்கு ஓர் ஆண்டுகளாக உங்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளைக் கொடுத்தாலும் குருவின் பார்வைகளின் மூலம் நன்மைகள் சில நடக்க தான் போய்கிறது. ஒன்பதில் அம்ர்ந்த சனி பகவானை நன்மைகள் செய்யக் காத்திருக்கும் நேரம் அந்த அடிப்படையில் உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எதை இழந்திருந்தாலும், அதை மீண்டும் பெறும் யோகம் உண்டு. நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கலந்து கொண்டு விஜயதசமியன்று பராசக்தியையும் வழிபட்டு வருவது நல்லது.
பரிகாரம் : நவராத்திரி நாட்களில் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அஷ்டமத்துச் குருவுக்கு பரிகாரமாக முருகனையும்,குருபகவானையும் வழிபட்டு வருவது நல்லது.

ரிஷபம்:
நீங்கள் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. உங்களது பெயரில்தான் இனி உலகத்தின் விலாசம் எழுதப்படும். உங்களது சாதனைகள் தான் உலக அதிசயங்களாக எண்ணப்படும். உங்களுக்குள் தூங்கிக்கிடக்கும்.திறமைகளை எல்லாம் துணிவுடன் எழுப்புங்கள், சாய்ந்து கிடக்கிற தளர்ச்சிகளையெல்லாம் சரியாய் நிறுத்துங்கள் இந்த மாதம்.நல்ல காரியங்களுக்குப் பிள்ளையார் சுழி போடுவதில் முதன்மையாய் நிற்கும் ரிஷப ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு தனாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிக்கின்றார்கள்.எனவே தனவிரயங்கள் அதிகரிக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். எதை எந்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.நீண்ட நாட்களாக நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு, அது கைகூடும் விதத்தில் கிரகங்கள் சாதகமாக விளங்குகின்றன. கட்டிய வீட்டைப் பழுதுபார்க்க முடியவில்லையே என்றும், கையில் பணம் புழங்கவில்லையே என்றும் கவலைப்பட்டவர்களுக்கு, அந்த பணியைத் தொடரும் விதத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகப் போகின்றது.இனிய பலன்கள் ஏராளமாக நடைபெறும் இம்மாதத்தில், குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படாது. நோய்க்கான அறிகுறி தோன்றாது.சூரியபலம் 5-ம் இடத்தில் இருப்பதால் படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சியான விதத்தில் நல்ல தகவல் வந்து சேரப்போகின்றது. அரசு வேலைக்காக முயற்சி செய்திருந்தவர்களுக்கு அதுவும் கைகூடி வரலாம்.3-ல் ராகு இருப்பதால் வழக்குகள் சாதகமாக முடியும். முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும். சகோதர வர்க்கத்தினரின் சச்சரவுகள் அகலும். உங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களும் முன்வருவர்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் திட்ட மிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திடீர், திடீர் என தனலாபம் வந்து கொண்டே இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு தனித்து இயங்க முன்வருவீர்கள். குரு பகவானை முறையாக வழிபட்டால் முன்னேற்றப் பாதையை நோக்கி நீங்கள் அடியெடுத்து வைக்க இயலும்.இம்மாதம் வளர்ச்சி கூடும் மாதமாகும். அக்கறை காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள், வீடு கட்டும் யோகம், கட்டிடத் திறப்புவிழா நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வாகன யோகம் உண்டு. தங்கம், வெள்ளி வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானை வழிபடுவதோடு நவராத்திரி நாட்களில் ஆலயம் சென்று அம்பிகையை வழிபட்டு வருவதன் மூலம் வாழ்வில் வசந்தம் உருவாகும்குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்க்கும் சூழ்நிலை உண்டு. குரு வலிமையுடன் சஞ்சரிப்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும்.
பரிகாரம் : அமாவாசையன்று முன்னோர் வழிபாடும், சனிக்கிழமையன்று அனுமன் வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

மிதுனம்:
எதிர்காலத்தின் நான் எப்படியிருக்கவேண்டும், எதிர்காலம் எனக்கு எப்படி அமையவேண்டும் என்று இலக்கினை நிர்ணயிக்கவும் அதற்குச் சரியான வழிகாட்டிகள் மூலம் தனக்குத் தானே பாதை அமைத்துக்கொள்ளும் தளமே இந்த மாதம்.உங்களுடைய எதிர்காலத்தை எப்படி கையாள வேண்டும் என்று நிர்னயம் செய்து கொள்ளும் இந்த மாதம்.:நாட்டுப்பற்று மிக்கவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு தைர்யம் ஸ்தானதிபதி மற்றும் பஞ்சம ஸ்தானாதிபதியான சுக்ரனும் பலமாக ஆட்சியாக இருக்கின்றார்.இணைந்திருக்கும் பொழுது விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டே இருக்கும். வீண் விரயம் ஏற்படாமல் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.குருவின் அருட்பார்வை உங்கள் ராசியில் பதிவது மிக மிக யோகமாகும். குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். துயரங்கள் எல்லாம் ஓடி ஒளியப்போகின்றது. விவகாரங்கள் தீரும். தகராறுகள் தானாக விலகும். தக்க விதத்தில் நண்பர்களும், உறவினர்களும் ஒத்துழைப்புச் செய்வார்கள்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் கொஞ்சம் சரியில்லை ஆகையால் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும்.மங்கலச் சத்தம் மட்டுமல்ல, மழலையின் ஓசையும் மனம் மகிழும் விதத்தில் இல்லத்தில் கேட்கும். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வசூலாகும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும். சரிந்திருந்த வாழ்க்கை சமநிலைக்கு வந்து விடும். புரிந்து கொண்டு செயல்பட்டு புகழைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதே நேரத்தில் 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும்,செவ்வாயும் சஞ்சரிப்பதால் சர்ப்ப தோஷத்தை வலுப்படுத்துகிறார்கள். எனவே ராகு திசை, கேது திசை, ராகு புத்தி, கேது புத்தி போன்றவை நடப்பவர்கள் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை அவசியம் செய்து கொள்வது நல்லது.6-ல் குரு வரும்பொழுது இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். அவ்வாறு வரும் மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றமும், உன்னதமான வாழ்க்கையும் அமையும். கைநிறையச் சம்பாதிக்கும் யோகம் இப்பொழுது வந்து சேரப்போகின்றது. பை நிறையப் பணம் குவியும் என்றாலும் உறவினர்களையும் அனுசரித்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு முல்லைப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.அதுமட்டுமல்லாமல் துர்க்காஷ்டமி அன்று துர்க்கையையும், சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதியையும், விஜய தசமியன்று லட்சுமியையும், ஆதிபராசக்தியையும் வழிபட்டு முப்பெருந்தேவியரைக் கொண்டாடினால் ஒப்பற்ற வாழ்க்கை அமையும்.இம்மாதம் மனக்கசப்புகள் மாறும் மாதமாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்லவிதமாக முடியும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் உறு துணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இலாகா மாற்றங்களைக் காண்பர். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. மாதத்தின் பிற்பாதியில் பயணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர்
பரிகாரம் :குரு வழிபாட்டை முறையாக மேற்கொள்வதோடு, குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்கும் யோகபலம் பெற்ற நாளில்சென்று வழிபட்டு வருவது நல்லது. ராகு-கேது வழிபாடு தடைகளை அகற்றும்.புதன்கிழமை தோறும் பெருமாளையும், லட்சுமியையும் வழிபட்டு வருவது நல்லது.

கடகம்:
உங்களது சிந்தனை வானம் சிறகடித்துப் பறக்கவே பாருலகம் பார்க்கத் துடிக்கிறது. உங்களை உசுப்பிவிட உங்கள் கையில் கொடுத்த அட்சய பாத்திரமே இந்த புத்தகங்களை. அதனை புரட்டிப்பாருங்கள், அறிவோடு புரண்டுபாருங்கள். அன்னைத் தமிழ் தனது கருத்து மார்பிலிருந்து அறிவு அமிழ்தத்தினை உங்களை அணைத்து அருந்தக் கொடுப்பாள் .புத்தகங்கள் மூலம் புத்தியில் புத்துனர்ச்சி பெற்று வாழும் மாதம் இது.பணிவு மட்டுமல்லாமல் துணிவும் கொண்டு செயலாற்றும் கடக ராசி நேயர்களே!புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தி சஞ்சரிப்பது யோகம்தான். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். ராசியிலேயே ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் செவ்வாயும் இருப்பதால் ஒருசில நேரங்களில் மனக்கலக்கத்திற்கு ஆளாக நேரிடும். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு அது சரியாக முடிவடையாத பட்சத்தில், ‘ஆகா இப்படிச் செய்து விட்டோமே?’ என்று நினைப்பீர்கள். அர்த்தாஷ்டம குருவாக 4-ம் இடத்தில் குரு சஞ்சரிக்கின்றார். எனவே ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். இடம், பூமி விற்பனையில் ஏமாற்றங்களைச் சந்திக்காமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தாய், தந்தையரின் உடல்நலப் பாதிப்பின் காரணமாக மனக்கலக்கம் ஏற்படலாம்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வருவது எல்லா வகையிலும் நன்மையே நடக்கும்.பஞ்சம ஸ்தானத்தில் குருசஞ்சரிப்பது நன்மை தான். நீண்ட நாட்களாக முடிவடையாத பிரச்சினைகள் இப் பொழுது முடிவடைந்து நிம்மதியை வழங்கும். வாங்கல் கொடுக்கல்களில் யாருக்கேனும் பொறுப்புகள் சொல்லி இருந்தால் அவர்களால் பகை உணர்வை வளர்த்திருக்கலாம். இப்பொழுது நாணயப் பாதிப்பிலிருந்து விடுபடும் விதத்தில் அவை ஒழுங்காகும்.ஜென் மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே காலசர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ஜாதகம் செயல்படப் போகின்றது.ஆகையால் கால சர்ப்ப தோஷ்த்திற்க்கு சாந்தி செய்து கொள்ளவும்.பாம்பு கிரகங்கள் பலன் தரும் என்றாலும் சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. வெளிநாட்டு முயற்சி வெற்றிகரமாக முடியுமா? என்பது சந்தேகம் தான். வியாபார விரோதங்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள் பகை உணர்வை வளராமல் பார்த்துக் கொள்வது நல்லது. திடீர், திடீர் எனப் பொறுப்புகள் மாற்றப்படலாம்.ஜென்ம ராகுவால் நன்மைகள் நடக்கவும், சப்தம கேதுவால் தடைகள் விலகவும், நாகசாந்திப் பரிகாரங்களை உங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் அனுகூலம் தரும் ஸ்தலங்களை உங்கள் சுயஜாதகத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துப் பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நேரமிது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவிக் குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளை உங்களுடைய கவனத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். கன்னி ராசியில் புதன் ,சூருயன் சஞ்சரிக்கும் நேரத்தில் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் உருவாகலாம். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். ஒவ்வொரு வியாழக் கிழமையும் விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஈடேறும்.
பரிகாரம்: வியாழன் தோறும் குரு பகவானை வழிபடுவதோடு செவ்வாய் தோறும் முருகப்பெருமானையும் வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி நாட்களில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரை வழிபட்டு துயரங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்.

சிம்மம்:
பட்டம், பதவி, பணம் எல்லாம் மறையக்கூடியதுதானே இதற்குள்தான் எத்தனை முட்டல்கள், மோதல்கள், சிலருக்கு பதவியே இல்லையென்றால் நிர்வாணமாக நிற்பதுபோல் அவ்வளவு சங்கடப் படுவார்கள், ஆனால் நிர்வாணம் தானே நிஜம் ஆனால் அதை ஏன் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். அன்பு தான் உலகிலே அனைவரையும் வெல்ல கூடிய அன்பு ஆயுதம் இந்த ஆயுதத்தை பயன் படுத்தி பலன்களை பெற்று கொள்ளும் மாதம் இது.மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். தனாதிபதி புதன் உங்கள் ராசிக்கு 2ல்சஞ்சரிக்கின்றார். சூரியனும், புதனும் ஒரே நேரத்தில் புதன் வீட்டில் புதனும், புதன் வீட்டில் சூரியனும் சஞ்சரித்து யோகத்தைக் கொடுக்கின்றார். யோகங் களில் சிறப்பான யோகமாகும்.இதன் விளைவாக பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்போகிறீர்கள். உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும். குருவும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகற்கள் எல்லாம் அகலும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடையிடையே ஸ்தம்பித்திருந்த தொழில் இனி சீராக நடைபெறும். குடும்பத்தில் நடைபெற இருந்த சுபகாரிய நிகழ்வுகளில் ஏற்பட்ட தாமதங்கள் அகலும். கல்யாணமாக இருந்தாலும், காதணி விழாவாக இருந்தாலும், கட்டிடத் திறப்புவிழாவாக இருந்தாலும் இனி துரிதமாக நடைபெறும். வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் குருவின் மிக லாபங்கள் அள்ளி தர கூடிய பார்வைகள் மூலம் நல்ல அரிய வாய்ப்புகள் நடந்தேறும்.அர்த்தாஷ்டமச் குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படுமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். குருவின் அருளால் தொல்லைகள் விலகும் நேரம் வந்து விட்டது.இனி மன நிம்மதி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டுத் தனித்து இயங்க முற்படுவீர்கள். வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன்கருதி நீங்கள் செய்யும் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாகச் செயல்படுவர்.புரட்டாசி 16ம் தேதி முதல் துலாத்தில் புதன் சஞ்சரிக்கும் பொழுது மாமன், மைத்துனர் வழியில் உதவிகளும், ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.பணக்கவலை தீரும். பாராட்டும், புகழும் கூடும். மனதளவில் செய்ய நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங் கள் வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். கடன்சுமை குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பராசக்தி வழிபாடு அனைத்து நலன்களையும் வழங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மூலம் சங்கடங்களை அகற்றிக் கொள்ள இயலும். மகாளய அமாவாசை அன்று முன்னோர் வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது.

கன்னி:
அறிவியல் பாடமே வராது என கல்வி நிலையத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட மாணவன் ஐன்ஸ்டின் அறிவியல் பாடமாகவே வந்தார். பள்ளிக்கூட வாசைன அறியாத எடிசன் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை இந்தப் புவிக்குத் தந்தார். இப்படி எண்ணற்ற பெயர்களைப் படித்தும் கேட்டும் காது புளித்துப்போய்விட்டது.இனி புதிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். அதில் உங்களது பெயர் பதிக்கப்படவேண்டும் என்று ஆசை உள்ளது என்றால் முயன்று தான் பார்க்கனும் இந்த மாதம்.உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உன்னத குணம் பெற்ற கன்னி ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லக்கினத்தில் ஆட்சி ஸ்தானத்தில் இருக்கின்றார். விரயாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். எனவே குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். கொடுக் கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. கடுமையாக முயற்சி செய்தே ஒருசில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும்.வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் செலவைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எனவே தனாதி பதி சுக்ரன் 2-ல் ஆட்சி வீட்டில் இருந்து நற்பலன் களை அதிகம் வழங்கப் போகின்றது. 2-ல் வந்த குரு திரண்ட செல்வத்தைக் கொடுப்பார். திட்டமிட்ட காரியங் களைத் திட்டமிட்டபடியே நடத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டாலும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும்.உங்களுக்கு குரு பகவானின் புரட்டாசி மாதம் 18ம் தேதி பெயர்ச்சியால் 3ம் இடம் செல்கிறார் அவர் பெயர்ச்சி சற்று சரி இல்லாமல் போனாலும் குருவின் அருள் பார்வைகளின் மூலம் நல்லதே நடக்கும்.7.9.11 இடத்தை குரு பார்க்க போய்கிறார் ஆகையால் அதன் மூலம் நல்லதே நடக்கும்.சில எதிர்பாராத திருப்பங் களும் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு, ஊதியத்தில் வராமலிருந்த சம்பளப் பாக்கிகள் கைக்கு வரும். சகோதர விரோதம் விலகும். நிரந்தர வேலைக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வீடு தேடிவரும். குணம் மாறி நடந்த பிள்ளைகள் மனம் மாறுவர்.இம்மாதம் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் சேமித்த சேமிப்புகள் கரையலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உறவுகள் பகையாகலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும்.வீடு வாங்கும் யோகம் ஒருசிலருக்கு உண்டு.
பரிகாரம் : புதன்கிழமைதோறும் பெருமாளையும், லட்சுமியையும் வழிபாடு செய்வதோடு, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வருவது நல்லது. நவராத்திரி நாட்களில் தொடர்ந்து அன்னை பராசக்தியை வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.