logo
home பலன்கள் டிசம்பர் 16, 2018
மார்கழி மாத ராசி பலன் (துலாம் முதல் மீனம் வரை)
article image

Color
Share

துலாம் : சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை மங்கள ஓசை கேட்கும் நேரம்!
அணுகு முறையின் மூலமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் துலாம் ராசி நேயர்களே!உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே ராசிநாதன் சுக்ரன் 1-ம் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.எனவே அரைகுறையாக நின்ற பணிகள் நடைபெறும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து, உங்கள் திட்டங் களை வெற்றி பெறச் செய்வர்.உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சி பெற்று இருப்பது மிகவும் சிறப்பு.இனிவரும் காலங்களை இனிய காலங்களாக மாற்றுவார். புதிய திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த தடைகள் அகலும். உயர் பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு, அது கைகூடும்.இம்மாதம் வரும் ஆருத்ரா தரிசன நாளில் சிவனையும், நடராஜப்பெருமானையும் வழிபாடு செய்யுங்கள். மார்கழி அஷ்டமி அன்று படியளக்கும் திருநாள் என்பதால், அன்றைய தினம் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது சிறந்த பலனை வழங்கும்.விருச்சிக ராசியில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். விரயாதிபதி 2–ல் சஞ்சரிப்பதால் விரயத்திற்கேற்ற தனலாபம் வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றம், நாடு மாற்றம் உறுதியாகலாம். பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். சொந்த பந்தங்களால் ஏற்பட்ட பகை விலகும். கடன் சுமை குறையும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறவில்லையே என்ற கவலை அகலும்.இந்த காலம் ஒரு இனிய காலமாகும். ஆதாயம் தரும் தகவல் அடுக்கடுக்காக வந்து சேரும். போதிய பணம்இருந்தால் இதைச் செய்திருக்கலாமே என்று நினைத்தவர்கள் இப்பொழுது செய்து முடிப்பர். மேலதிகாரிகளின் பாராட்டுகள் உத்தியோகஸ்தர்களை மகிழ்விக்கும். நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துகளைப் பிரித்துக் கொள்வதில் இருந்த தகராறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. வேலைவாய்ப்பிற்காக எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டுவிலகுவர்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் மாதம் இது. பக்கத்து வீட்டாரின் பகை மாறும். தக்க சமயத்தில் தாய்வழி ஆதரவு கிடைக்கும். பக்கபலமாக உடன்பிறப்புகள் வந்திணைந்து உதவி செய்வர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்–மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட வாக்குவாதங்கள் அகலும். விண்ணப்பித்த வேலை கிடைக்கலாம். பிள்ளைகளின் வழியாக பெருமை வந்து சேரும். இடம், பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.நடராஜர் வழிபாடு நலம் சேர்க்கும்.
பரிகாரம் :சனிக்கிழமைதோறும் வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது.தினமும் அதி காலையில் சூர்ய நமஸ்காரம் செய்யுங்கள்.
--------------------------


விருச்சிகம்: விசாகம் 4–ம் பாதம், அனுஷம், கேட்டை வரை தொட்டது துலங்கும் நேரம்! நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்று கூறும் விருச்சிக ராசி நேயர்களே!உங்களது மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக் கிறார். தனாதிபதி குருவும் ,லாபாதிபதியாக விளங்கும் புதனும்,1-ம்ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானாதிபதியாக விளங்கும் சூரியனுடன் இணைந்து சனி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தொட்ட காரியங்கள் வெற்றியாகும். தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும்.தன லாப ஸ்தானம் நன்றாக இருக்கும் பொழுது, நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர் கள் எண்ணிக்கை உயரும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட யோகங்கள் ஏற்படும். தொழிலை விரிவு செய்ய அரசு வழியிலும், நண்பர்களின் மூலமும் உதவிகள் கிடைக்கலாம்.
ஜென்மச் குருவால் ஆதிக்கத்தால் இதுவரை ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் தீரும். நன்மைகள் நாடி வரும். சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சென்ற மாதத்தில் கரைந்த சேமிப்புகளை இனி ஈடுகட்டுவீர்கள். வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் கவுரவிக்கப்படுவர். அரசு வழி விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கலாம். ஆற்றல் பளிச்சிடும் இந்த நேரத்தில் கூட்டுத்தொழில் புரிவோர் தனித் தொழில் புரிய முன்வருவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும். ஜென்மச்குருவுக்கு பரிகாரமாக அரச மர விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.
இந்த மாதம் இறைவன் படியளக்கும் திருநாள் வருவதால், அந்த நாளில் சிவபெருமானையும், உமையவளையும் வழிபட்டு வருவது நல்லது.அஷ்டமாதிபதியும், லாபாதிபதியுமாக விளங்கும் புதன், உங்கள் ராசியில் உலாவருவதால் உறவினர் பகை விலகும். வங்கிச் சேமிப்பு உயரும். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.
ஆரோக்கியம் சீராகும். உல்லாசப் பயணங்கள் அதிகரிக்கும். சொத்துகள் வாங்க, விற்க உகந்த நேரமாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையால் வரவு உண்டு.வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வருங்கால நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொதுநலத்தில் உள்ளவர்களுக்கு பொன்னான மாற்றங்கள் வந்துசேரும்.இம்மாதம் நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும். ஆஞ்சநேயர் வழிபாடு ஆனந்தம் தரும்.
பெண்களுக்கான சிறப்பு வழிபாடு!
குடும்பப் பெரியவர்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உறவினர்களால் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். வாழ்க்கைத் துணை வழியே எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். சொத்துகள் உங்கள் பெயரில் வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படும். பிள்ளைகள் வளர்ச்சி யில் பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் எதிர்பார்த்தபடி வந்துசேரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலத்தை சீராக்கிக் கொள்வீர்கள். நடராஜர் தரிசனம் நன்மையை தரும். ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று அனுமனை வழிபாடு செய்யுங்கள்.
பரிகாரம் :இம்மாதம் சனிக்கிழமை தோறும் பெருமாள், லட்சுமி, அனுமன் ஆகியவர்களின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
--------------------------


தனுசு : மூலம், பூராடம், உத்ராடம், 1–ம் பாதம் வரை இனிமை தரும் இடமாற்றம்!தெய்வ பக்தியோடு தேச பக்தியையும் கொண்டு செயல்படும் தனுசு ராசி நேயர்களே!உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே 1,4,7,10 ஆகிய இரண்டு இடங்களுக்கும் அதிபதியான குருவும் புதனும் இணைந்து உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.சுகரன் 11-இடத்தில்.3.ல் செவ்வாய் இருப்பதால் வருமானம் போதுமானதாக அமையும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு, ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். கடந்த இரண்டு மாதங்களாக ஸ்தம்பித்து நின்ற தொழில் இப்பொழுது வெற்றி நடைபோடும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட முன்வருவீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்– வாங்கலில் இருந்த மந்தநிலை மாறும். கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே, வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். எதிர்பாராத தொகை கிடைத்து இனிய பலன் காணப்போகிறீர்கள்.ஏழரைச் சனியின் ஆதிக்கம் இன்னும் இருக்கிறது. இப்பொழுது ஜென்மசனியின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கிறது. குருபார்வை 4,6,8,–ம் இடத்தில் பதிவதால் வீண் விரயங்கள் அதிகம் ஏற்படாது. ஆயினும் சுபச்செலவுகள் கூடிக்கொண்டே செல்லும். ஒரு சில நேரங்களில் ஒரு முறைக்கு இருமுறை செலவு செய்ய நேரிடும்.உங்கள் சுயஜாதகத்தைப் புரட்டிப் பாருங்கள். ஏழரைச் சனியில் எத்தனையாவது சுற்று நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். சனிக்கிழமைதோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது. முதல் சுற்று நடப்பவர்கள் அதற்குரிய யோகச் சனியையும், மறுசுற்று நடப்பவர்கள் அதற்குரிய யோகச் சனியையும், மூன்றாவது சுற்று நடப்பவர்கள் முன்னேற்றத்திற்கு இடையூறு வருவதை நீக்கும் திருத்தலங்களுக்கும் சென்று வழிபட்டு வருவது அவசியமாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி தன ஸ்தானத்திற்கும், சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். அவர் உங்கள் வரவு–செலவிற்கு உறுதுணையாக இருப்பவர். வழக்குகளில் வெற்றிதர வைப்பவர். அவர் சன்னிதியில் கவசம் பாடி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.ஆருத்ரா தரிசனத்தன்று ஆலயம் சென்று கூட்டு பிரானைக் கும்பிட்டு வாருங்கள். கங்கையை முடியில் சூடிய சிவபெருமானை, படியளக்கும் திருநாளில் வழிபட்டு வருவது நல்லது.புதன் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கும், 10–ம் இடத்திற்கும் அதிபதியான புதன் 12–ல் சஞ்சரிப்பது யோகம்தான். மறைந்த புதன் நிறைந்த தன லாபத்தைத் தருவார். எனவே பொருளாதார பற்றாக்குறை அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும். சிலருக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அழைப்புகள் வரலாம். உத்தியோக முயற்சிகளில் வெற்றிகிடைக்கும்.உங்கள் ராசிக்கு 6,11–க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 11–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். உடன்பிறப்புகள் வழியில் உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடல் தாண்டி வரும் செய்தி காதுகளை இனிக்க வைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்போடு சில காரியங்களைச் செய்வீர்கள். நின்றுபோன கட்டிடப் பணிகள் இப்பொழுது தொடரும்.
குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
உங்களின் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பூமி யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்துசேரும். உறவினர் பகை மாறும். உங்களை விட்டுவிலகிச் சென்ற வர்கள் உறவாட முன்வருவர். கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரும் தகவல் வந்து சேரும். 2–ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். குடும்ப உறப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். நடராஜர் வழிபாடு நன்மைகளை வழங்கும். வியாழக்கிழமை விரதமும், குரு வழிபாடும் மனக்குழப்பத்தை அகற்றும்.
பரிகாரம் : விநாயகப் பெருமான் வழிபாடு வெற்றிகளை வழங்கும். வடக்கு நோக்கிய விநாயகர் வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
--------------------------


மகரம் : உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை கனவுகள் நனவாகும்!
துணிந்து செயல்படுவதோடு மட்டுமல்லாமல் பணிந்தும் நடந்துகொள்ளும் மகர ராசி நேயர்களே!
உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் புதன்,குரு சஞ்சரிக்கிறார். சுக்ரன் பஞ்சமாதிபதி மட்டுமல்லாமல் 10–ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர். எனவே தொழில் மேன்மை, லாபம், ஆடை, ஆபரண சேர்க்கை, இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு, புதிய தொழில் தொடங்கும் சூழல், அரசியல் போன்றவற்றில் அனுகூலம் உண்டு. அக்கறை காட்டக் கூடிய செயல்களில் எல்லாம் ஆதாயம் கிடைக்கக் கூடிய மாதமாக இம்மாதம் அமையப் போகிறது.உங்கள் கனவுகள் நனவாகும். கடந்த சில மாதங்களாக எடுத்த முயற்சியில் இருந்த தடை அகலும். பெண்களால் பெருமை சேரும். பிற மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறதே என்ற கவலை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனு கூலம் கூடுதலாக கிடைக்கும். மேலிடத்து ஆதரவோடு மிகச்சிறந்த பலனைக் காண்பீர்கள்.எனவே, நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்ய இயலும். பணப்புழக்கம் அதிகமாகவே இருக்கும். பட்டும் படாமலும் பழகிய செல்வந்தர்கள் இப்பொழுது உங்களுக்குப் பக்கபலமாக வந்திணைவர். 2–ல் செவ்வாய் இருப்பது ஒருவகையில் நன்மைதான். 4,11–க்கு அதிபதி தன ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பார்த்த இடத்திலிருந்து தொகை கிடைக்கும்.காதுகுத்து முதல் கல்யாணம் வரை பணப் பிரச்சினை காரணமாகத் தாமதித்து வந்த சுபகாரியங்கள் இம்மாதம் நடைபெற வழிபிறக்கும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பும், உறவினர்களின் ஆதரவும், நண்பர்களின் இனிய உதவியும் உங்கள் கவலைகளைப் போக்கும். கையில் பணம் புரளும்.
1–ல் கேது, 7–ல் ராகு இருப்பதால் சர்ப்ப கிரகத்தின் பிடியில் இருக்கிறீர்கள். எனவே நாக சாந்திப் பரிகாரங்களை யோக பலம் பெற்ற நாளில் செய்து கொள்ளவேண்டும். தேகநலன் சீராக சனிக்கிழமைதோறும் சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது. அனுமன் ஜெயந்தி அன்று அருகிலிருக்கும் விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று அனுமனையும் வழிபட்டு வாருங்கள். அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.புதன் உங்கள் ராசிக்கு 6,9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார்.விருச்சிகத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாகப் பெற்றோர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். வாங்கிய இடத்தை விற்று விட்டுப் புதிய இடம் வாங்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உத்தியோகத்தில் வழக்கமாகக் கிடைக்க வேண்டிய பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவை இப்பொழுது கிடைக் கும்.
இந்த காலம் ஒரு பொற்காலமாகும். குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும் வாய்ப்பு உருவாகும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக விலையுயர்ந்த பொருட்கள், மடிக்கணினி போன்றவற்றை வாங்குவதில் அக்கறை செலுத்துவீர்கள்.உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுப்பர்.இம்மாதம் நடராஜர் தரிசனம் நன்மையை வழங்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் மாதம் இது. தகராறு செய்தவர்கள் தானாக விலகுவர். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பர். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். வாழ்க்கைத் துணை உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்துசேரும். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு கூடுதல் மதிப்புக் கொடுப்பர். பிள்ளைகளால் பெருமை வந்துசேரும். ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜப் பெருமானை வழிபடுவது நல்லது. அனுமன் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.
பரிகாரம் :இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை வழிபட்டால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.
--------------------------


கும்பம் : அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை வழிபாட்டால் வளர்ச்சி கூடும்!
சொந்த காலில் நிற்க வேண்டும் என்று விரும்பும் கும்ப ராசி நேயர்களே! உங்களின் மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் தைரியகாரகன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு அதிகரிக்கும். தன்னிச்சையாகச் செயல்பட்டு சில காரியங்களில் வெற்றி காண்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடுவர்.சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் கொடுக்கப் போகிறார். வாங்கல்–கொடுக்கல்கள் ஒழுங்காகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, வாங்கவேண்டியதை வாங்க வேண்டுமென்ற கவலை இனி அகலும். உடன்பிறப்புகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.குருவின் பரிபூரண பார்வை 2,4,6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் வந்துகொண்டேயிருக்கும். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்போடு சேமிப்பு உயரும்.சப்தமாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சனியோடு இணைந்திருக்கிறார். புதன் உங்கள் ராசியைப் பொறுத்த வரை பஞ்சம அஷ்டமாதிபதியாவார். எனவே அந்த புதன் 10-ல் இடம் பெற்றிருப்பது ஒரு வழிக்கு யோகம் தான். பிள்ளைகளின் கல்வி நலன் கருதியும், கல்யாண வாய்ப்புகளை முன்னிட்டும் நீங்கள் எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மங்கள ஓசை மனையில் கேட்க உறவினர்களின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும்.சந்திர பலம் நன்றாக இருப்பதாலும், சூரிய பலம் லாப ஸ்தானத்தில் இருப்பதாலும் அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். இம்மாதம் வழிபாட்டால் வளர்ச்சியைக் கூட்டிக்கொள்ள இயலும். ஆனைமுகப் பெருமான் வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜப்பெருமானை வழிபட்டு வாருங்கள். அனைத்து நலன்களும் வந்துசேரும்.10-ல் குரு , புதன் வரும் பொழுது தொழில் மாற்றுச் சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் மங்கள நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவர். பூர்வீகச் சொத்துகளை விற்பதில் இருந்த தகராறுகள் அகலும்.வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல்கள் அகலும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய நல்ல தகவல் வந்துசேரும். பல பணிகள் பாதியில் நிற்கிறதே என்ற கவலை இனி அகலப் போகிறது. திடீர் தனலாபம் உண்டு.பூர்வீகச் சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்ல முடிவிற்கு வரும். பலமுறை பஞ்சாயத்துகள் வைத்தும், காரியம் கைகூடவில்லையே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது மகிழ்ச்சி காண்பர். சூரிய பலத்தின் விளைவாக அரசியல்வாதிகளுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
வளர்ச்சி கூடும் மாதமாகக் கருதலாம். குரு அஷ்டமத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டே இருக்கும். பயணங்களால் பலன் உண்டு. ஜென்மத்தில் செவ்வாய் இருப்பதால் ஒரு சில சமயங்களில் முன்கோபம் அதிகரிக்கலாம். முன் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. கணவன்–மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்லவும். வீடு மாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உன்னத உயர்வு காண்பர். சலுகைகள் எதிர்
பார்த்தபடி வந்து சேரும். நடராஜர் தரிசனம் நன்மையை தரும்.
பரிகாரம் : இம்மாதம் மஹாலக்ஷ்மியை வெள்ளிகிழமை தோறும்,சனிகிழமை தோறும் விநாயகப் பெருமானையும் வழிபடுவது நல்லது.குரு பகவானை வியாழன் அன்று வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேரும்.
--------------------------


மீனம் : பூரட்டாதி 4–ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய குழப்பங்கள் அகலும்!எதிர்காலம் இனிமையாக யோசித்துச் செயல்படும் மீன ராசி நேயர்களே!உங்களது மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ரசிநாதன் குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்க்கிறார். எனவே பார்க்கும் குருவால் பலன்கள் அதிகமாகவே கிடைக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். காரியத் தாமதங்கள் அகலும். பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் பலவும் காணப் போகிறீர்கள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வழிபிறகும்.
மாதத் தொடக்கத்தில் 5–ல் ராகு நின்று குரு 9-ல் இருக்கிறார்.கேது 11-ல் இருக்கிறார் எனவே அஷ்டலட்சுமி யோகம் செயல்படப் போகிறது. 8 லட்சுமிகளும் இல்லம் தேடிவந்து அருள் வழங்கப் போகும் இந்த நேரத்தில், வங்கிச் சேமிப்பு உயரும். கொடுக்கல்– வாங்கல் ஒழுங்காகும். தங்கு தடைகள் தானாக விலகும். மங்கள ஓசையும், மழலையின் ஓசையும் மனையில் கேட்க வழிபிறக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். உடன்பிறப்புகள் உங்கள் கரத்தை வலுப்படுத்துவர். கடன் சுமை குறைந்து கவலைகள் தீரும்.சனி 10–ல் சஞ்சரிப்பது ஒரு வகைக்கு நன்மைதான். உங்கள் ராசிக்கு 11,12–க்கு அதிபதியானவர் சனி பகவான். லாபாதிபதியான சனி 10–ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பெற்றோர் வழியில் பிரியம் கூடும். அவர்கள் மூலமாக புதிய தொழிலுக்கு மூலதனம் கிடைக்கலாம். செய்யும் தொழிலை விரிவுபடுத்திப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள முன்வருவீர்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் கிடைக்கும்.5–ல் ராகு இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆலய வழிபாட்டில் அக்கறை செலுத்துவீர்கள். திருப்பணிகள் செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பொதுவாக இம்மாதம் வியாழக்கிழமைதோறும் விரதம்இருந்து குருபகவானை வழிபடுவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வண்ணத்தில் வஸ்திரம் அணிவித்து வந்தால், நெஞ்சம் மகிழும் சம்பவம் நிறையவே நடைபெறும்.குறிப்பாக இம்மாதம் இறைவன் படியளக்கும் திருநாள் வருவதால், அன்றைய தினம் சிவாலயம் சென்று சிவபிரானையும், உமாதேவியையும் வழிபட்டு வருவது நல்லது. ஆருத்ரா தரிசன நாளில் நடராஜப்பெருமானை வழிபாடு செய்யுங்கள். நலம் யாவும் வீடு வந்துசேரும்.நல்ல ஏற்றங்களும் வந்து சேரப் போகின்றது. 4,7–க்கு அதிபதியான புதன் 9–ல் சஞ்சரிக்கும் பொழுது, பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். ஒரு சிலருக்கு கடல் தாண்டும் முயற்சி வெற்றிபெறும். வெளிநாட்டில் உத்தியோகம் பார்க்கவேண்டும் எண்ணியவர்களுக்கு, பணிபுரியும் இடத்திலிருந்து அனுப்பி வைப்பர். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும்.
சந்தோஷங்களும் அதிகரிக்கும் ஒரு சிலருக்கு வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். அந்த ஆவல் பூர்த்தியாகும் நேரமிது. அஞ்சல் வழியில் மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டு. தந்தை வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் தானாக விலகும். தங்கம், வெள்ளி வாங்கி மகிழ உகந்தநேரமிது.மாத கடைசியில் தனுசு ராசிக்கு, புதன் செல்கிறார். இதன் விளைவாகப் பத்திரப் பதிவில் இருந்த தாமதங்கள் அகலும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து ஆனந்தப்படுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். குடும்ப வருமானம் உயர பிள்ளைகள் வழியிலும் உதிரி வருமானங்கள் கிடைக்கும். பெற்றோர்களின் மணிவிழா மற்றும் பவளவிழாக்களை நடத்திப் பார்க்க முன்வருவீர்கள்.இம்மாதம் அனுமன் ஜெயந்தியன்று அனுமனை வழிபட்டு ஆனந்தம் காணுங்கள்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்!
இம்மாதம் நினைத்தது நிறைவேறும் மாதமாகும். பணக்கவலை தீரும். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. சகோதரர்களால் விரயம் ஏற்படும். கணவன்–மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. மக்கள் செல்வங்கள் மாலை சூடி மகிழும் வாய்ப்பு உருவாகும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.
பரிகாரம் : வியாழன் தோறும் குருவை வழிபடுவது நல்லது. ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை வழிபட்டால் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் கிடைக்கும்.