logo
home பலன்கள் மார்ச் 02, 2019
கிழமைகளுக்குரிய சிவராத்திரி விரதம் இருந்தால் ஏற்படும் பலன்கள்
article image

Color
Share

திங்கள்:
சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள்.சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்:
அரசாங்க வேலை கிடைக்கும்;சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

புதன்:
திருமாலை பார்த்த பலன் கிட்டும்; அதாவது, திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்:
குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்;சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

வெள்ளி:
ஆத்மவிசாரம் செய்வார்கள்;தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்; வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்.

சனி:
சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்; சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்.