logo
home பலன்கள் மார்ச் 24, 2019
சந்திராஷ்டம நாட்களும் கணக்கிடும் எளிய முறைகளும்
article image

Color
Share

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பேப்பர் படிக்கும் பொழுதும் சரி, காலையில் தினசரி காலண்டரை காணும்போது சரி, அதில் ராசிபலன் பக்கத்தில் கீழே இன்று சந்திராஷ்டமம் பெறும் ராசி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் நமக்கு அதைப்பற்றி தெரியாத தால் பெரும்பாலானோர் அதை பொருட் படுத்துவது இல்லை.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண் டால் மிக முக்கியமாக இருப்பது லக்ன மாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். பிறந்த ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும்.
சந்திரன் எந்த இடத்தில் இருக்கி றதோ அதைத்தான் நாம் ராசி என்கி றோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிட மான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.

சந்திராஷ்டமம்=அஷ்டமம்+ சந்திரன்
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத் தில் இருக்கும் இரண்டேகால் நாட் களைத்தான் ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப் படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள்.

மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்,
பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,
புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள்.

முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.

குடும்ப விஷயங்களையும் பேச மாட்டார்கள்.
ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண் டாகின்றன.
எதிர்மறையான எண்ணங்கள் தோன்று கின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங் களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும்.
17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன். உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் அருகில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத் திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் குறித்து விளக்கமாக பெட்டிச் செய்தி தரப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நட்சத்திர வரும் நாட்களில், நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.