logo
home வழிபாட்டுத் தலங்கள் ஜனவரி 15, 2019
விபத்துகளிலிருந்து காப்பாற்றும் சென்னை பாடிகாட் முனீஸ்வரர்
article image

Color
Share

இந்துமதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் ஆதியும் அந்தமுமாக விளங்குவது சிவபெரு மான்தான். அந்த சிவ ரூபங்களில் பல தெய்வங் கள் அடக்கம். புகழ்பெற்ற சிவரூபங்கள் பல வடிவங்களில் திகழ்ந்தாலும் ஒவ்வொரு ரூபங் களின் வழிபாடு அந்த அந்த பகுதி மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றியிருக்கும்.

வழிபடும் முறையில் வேறுபாடு ஒவ்வொரு இடத்திற்கு மாறினாலும். கடைசியில் அடைவது சிவத்தை என்பதை மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

இதுபோன்ற பகுதிவழிபாடுகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பெரும்பாலான இடங் களில் பின்பற்றப்படுகிறது. அந்த வழிபாட்டை தமிழகத்தில் கிராம தெய்வ வழிபாடு என்று அழைக்கின்றனர். குறிப்பாக கிராம தெய்வ வழிபாட்டை குறிப்பிட்ட கிராமத்தின் தெய்வத் தையே தங்களது குலதெய்வமாக வைத்துக் கொண்டு வழிபாடும் செய்வார்கள்.

குலதெய்வத்துடன் சேர்த்து மற்ற தெய்வங் களை வழிபட்டாலும், வழிபடுபவர்களின் குடும்பத்தில் குலதெய்வம் என்பது தலைமை உறுப்பினராகவே விளங்கும். அந்த குடும்பத்தில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்சிகளுக்கும், முதன்மையாக குலதெய்வம் என்ற தலைமை உறுப்பினருக்கு முக்கியத்துவம் தந்து, துவங் கும் வழக்கம் தமிழகத்தில் பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளாகும்.

மனிதர்கள் வாழும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழும் இடத்தில் கிடைக்கும் உணவுகளையும், பழக்கவழக்கங்களையும் மாற் றாமல் அந்த பழக்கவழக்கத்துடன் இறைவனை இணைத்து செய்யப்படும் வழிபாட்டு முறை, என்றும் இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு சிறப்பு உண்டு. இந்த குலதெய்வ வழிபாட்டை கடைபிடிக்கும் ஒருகுறிப்பிட்ட சமுதாயமக்கள், சைவமாகவும், அசைவமாகவும் இருந்தாலும், அந்த உணவு முறையை தங்களது தெய்வத்திற்கு படையலிட்டு வழிபடுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொண்ட பின் பொதுவாக உள்ள தெய்வ வழிபாட்டையும் கடைபிடிப்பார்கள்.

இதில் துரதிஷ்டவசமாக தங்கள் குலதெய்வம் யார் என்று தெரியாதவர்களும் உண்டு. அவ்வாறானவர்கள் பொதுவான தெய்வவழிபாட்டை மேற்கொள்வது வழக்கம்.
இதுபோன்ற வழி பாட்டு முறையின்படி சில தெய்வங்களுக்கு சக்தி அதிகம் உண்டு, அதுபோன்ற தெய்வங் களை மற்ற குலத்தாரும் வேண்டி வணங்குவார்கள். அந்த வகையில் தோன் றியதுதான் கிராமத்து தெய்வங்கள்.

கருப்பண்ணச்சாமி
ஒண்டிவீரன்
அய்யனார்
சுடலைமாடன்
கருப்புசாமி
மதுரை வீரன்
இடும்பன்
காத்தவராயன்
பேச்சியம்மன்
மதுரை பாண்டி முனிஸ்வரன்
காத்தவராயன்
பதினெட்டாம்படி கருப்பண்ணச்சாமி
ஒண்டிவீரன்

போன்ற இன்னும் பல கிராமத்து தெய்வங்களை ஒருசில குலத்தார் தெய்வமாக இருந்தாலும், பேய், பிசாசுகளை விரட்டுதல், நோய்நொடி தீர்த்தல், குடும்ப பிரச்சனைகளை தீர்த்தல், தொழில் சிறப்பு அடையவைத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை மேற்கண்டதெய்வங்கள் தீர்க்கும் சக்தி வாய்ந்ததால், மற்றவர்களும் இத் தெய்வங்களை வழிபடுகின்றனர்.

அந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் பயத்தை போக்கும் சக்தியும், தீமைகளை அகற் றும் ஆற்றலும் படைத்த, முனி, முனி யாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர் களாலும் அழைத்து வழிபடுவர் முனீசுவரர் ஆவார்.

முனி என்ற சொல் ரிக் வேதத்தில் ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்றும், பயமற்றவர் என்றும் பொருள் கொள்ளப் படுகின்றது. உபநிடதம், பகவத்கீதை என்பவற்றில் உலக வாழ்க்கையை வெறுத்து ஞான வரம்பாகிய மௌனத்தைக் கடைப்பிடித்து பரமதியானத்தில் ஆழ்ந்து தட்பவெப்ப, சுகதுக்கம் தாக்கப்படாமல் விருப்பு - வெறுப்பு, கோபதாபம் முதலியவை அறவே நீக்கியவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

கிராம மக்கள் மத்தியில் தவறு செய்தால் தலையில் அடிப்பவர், நம்மோடு ஒரு மனிதராகவே வருவார், வானுக்கும் பூமிக்குமாக ஒளிப்பிழம்பாகக் காட்சி தருபவர் என்று பல வாறு நம்பிக்கைகள் காணப் படுகின்றன.

இவரையேபெரும் பாலான கிராமங்கள் தங்களது எல்லைச்சாமி யாகவும் வழிபடுகின்றனர்.
தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் முனீசுவரர் வழிபாடு சிறப் படைந்து காணப்படுகின்றது.

அந்தவகையில் சென்னையில் மிகவும் பிர சித்தி பெற்றவராக விளங்குபவர் பாடிகாட் முனீசுவரர் ஆவார்.

கடந்த, 1860ம் ஆண்டு, தமிழகத்தில், சென் னையில் தற்போதைய தலைமை செயலக இடத் தில், கோட்டை சாமியாக அருள் பாலித்து வந்தார் முனீஸ்வரன்.

வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து சென் னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குல தெய்வமான முனீஸ்வரன் சிலையை தங்க ளுடன் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். அதன்பின் சில பல காரணங்களால் 85 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவன் பணிமனையின் முன்பக்கம் (சென்ட்ரல் ரயில்நிலையத்தின் எதிரில் உள்ள பாலத்தின் இறக்கத்தில்) பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

அந்த காலகட்டத்தில், பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு, “பாடி கட்டும்‘ வேலைகள் நடந்தன. அதே போல், ரயில் பெட்டிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் நடந்து வந்தது. இரண்டு இயந்திர வாகனங்களுக்கும், பாடி கட்டும் இடத்தில் இருந்ததால், முனீஸ்வரனுக்கு, பாடிகாட் முனீஸ்வரன் என்ற பெயருடன் அழைக் கப்பட்டுவந்தார்.

முனிஸ்வரர்களில் இவர் வாகனங்களில் செல்லும்போது வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பாக இருந்து எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் சக்தி வாய்த்வர் என்பதாலும், பக்தர்களுக்கு பாடி கார்டாக இருப்பதால் பாடிகாட் முனீஸ்வரன் என்றும் தற்போதைய தலைமுறையினர் உறுதி யாக நம்புகின்றனர்.

சென்னையில், புது வாகனம் வாங்கியோர், ஆர்.டி.ஓ., அலுவலகம் போவதற்கு முன்பாக, சென்னை, பல்லவன் இல்லத்தின் அருகில் உள்ள, பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

புது வாகனம் வாங்கிய பின், இங்கு பூஜை செய்தால், வாகனத்திற்கு விபத்தே ஏற்படாது என்பது, சென்னைவாசிகளின் நம்பிக்கை மட்டு மல்ல. உண்மையுமாகும்.

குழந்தைகளுக்கு எந்தவித தீய சக்திகளின் தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதற்காக இங்கு மொட்டை அடித்து காது குத்தும் சம்பி ரதாயங்களும், புதுவீடுகட்டும்போது எந்த தடை யும் ஏற்டாமல் இருக்க பொங்கல் வைப் பதும், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியில் எந்த தடங்களும் ஏற்படக் கூடாது என்பதற்கான வேண்டுதல்களிலும் சிறப்பு வாய்ந்தது இத்திருக் கோயில்.

எலுமிச்சையும், சுருட்டும் இவருக்கு உகந்தது. ஒருசிலர் வேண்டுதல்களுக்கு ஏற்ப மதுபானங்களும் படைக்கப்படுகிறது. மொத் தத்தில் சென்னையின் காவல் தெய்வமாகவும் விளங்குபவர் இந்த பாடிகாட் முனீஸ்வரன் ஆவார்.