logo
home ஆன்மீகம் ஜூலை 10, 2016
இந்துமதத்தில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான ஒருசில தகவல்கள்
article image

நிறம்

● விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளல் கூடாது. கருமம் சார்ந்தவை செய்யும்போது மட்டும் நீரில் குழைத்துப் பூசிக்கொள்ள வேண்டும்.

● புண்ணிய தீர்த்தங்களில் சென்று நின்றவுடன் காலை நனைப்பது கூடாது. முதலில் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டபின் காலைக் கழுவலாம்.

● மயானம் சார்ந்த சடங்குகளுக்குச் சென்று வந்தபின் வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சோப்பு, ஷாம்பு போன்ற வாசனைப் பொருட்களை உபயோகிக்க கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், தலையில் சிறிது தண்ணீரைத் தெளித்தபின் போகலாம்.

● ஆண்கள் தான் பிறந்த நட்சத்திர நாளில் மருந்து உட்கொள்ளல், தாம்பத்தியம், திருமணம், பயணம் புறப்படுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதுத் துணி உடுத்துதல், பெரியவர் களுக்கு திதி கொடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்த் துக் குளித்தபின் வெளியூர் பயணம் செய்வது கூடாது.

● பெண்கள் தலையில் எண்ணெயை வைத்துக் கொண்டு யாரையும் வழியனுப்பக் கூடாது. கணவன் வெளியூர் சென்றபின் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

● தெய்வ காரியங்களுக்கு கணவன் முதலில் செல்ல வேண்டும். இறப்பு, தீட்டு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு மனைவி முதலில் செல்வது நல்லது.

● உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம் ஆகியவற்றின்மீது உட்காரக்கூடாது.

● சாப்பாடு, உப்பு, நெய் ஆகியவற்றை கண்டிப்பாக கையால் பரிமாறக்கூடாது. கரண் டியை உபயோகப்படுத்த வேண்டும். சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீர் அருந்துதல் கூடாது.

● கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தான- தர்மம், விரதம் கடைப்பிடித்தால், கணவனின் ஆயுளில் ஒருநாள் குறையும்.

● குரு, ஜோதிடர், நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் உதவ வேண்டும்; புண்ணியம் பெருகும்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
                                            

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com