logo
home ஆன்மீகம் ஆகஸ்ட் 24, 2017
அற்புதம் வாய்ந்த விநாயகர் சதுர்த்தியின் தோற்றமும் கொண்டாடும் வழிமுறைகளும்
article image

நிறம்

சதுர்த்தி வரலாறு:- எந்த நாளன்று கணேசனின் அதிர்வுகள் முதன் முதலாக பூமியில் வந்தனவோ, அதாவது, எந்த நாளில் கணேசனின் பிறப்பு ஏற்பட்டதோ அந்த நாளையே மாசி மாத சதுர்த்தி என்கிறோம். அன்றிலிருந்து தான் கணபதிக்கும் சதுர்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு கணேச சதுர்த்தி ஆவணி மாதம் 9 ஆம் நாள் சுக்ல சதுர்த்தி 25----&08&2017 அன்று வருகிறது. சந்திர தரிசனத்தை தவிர்க்க வேண்டும்: சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்க கூடாது. மனோ செயல் பாட்டிற்குக் காரணமானவன் சந்திரன். ஆனால் ஒரு சாதகன் மனதைக் கரைத்து, நிர்விசார நிலையை அடைய வேண்டும். கிரகங்களில் சந்திரன் சஞ்சலமானவன். அவன் வளரும் மற்றும் தேயும் தன்மை கொண்டவன். அதைப் போல உடலில் மனம் சஞ்சலமானது. மனதைத் தாண்டிச் செல்லும்போதுதான் துரீய நிலை கிடைக்கிறது. (துரீய நிலை என்பது விழித்திருத்தல், கணவு காணுதல், சுஷீப்தி (ஆழ்ந்த உறக்கம்) என்று மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்டது) சங்கடஹர சதுர்த்தியன்று பூஜைக்குப் பிறகு சந்திரனைப் பார்க்கிறோம். ஆன்மீக சாதனைக்குப் பிறகு, மனம் சாதாரண நிலைக்குத் திரும்ப, இந்த சந்திர தரிசனம் ஏதுவாகிறது. புராணங்களில் இதன் தொடர்பாக கூறப்படும் கதை: ஒரு நாள் சந்திரன் கணபதியைப் பார்த்து “கணபதி! உன்னுடையது பெரிய வயிறு, முறம் போல் காது, பெரிய துதிக்கை, சின்னச் சின்ன கண்கள்!” என்று கேலி செய்தான். இதைக் கேட்டு கணபதி, “இன்றி லிருந்து, உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள், தப்பிப் போய் பார்த் தால், அவர் மீது திருட்டுப்பழி (வீண் அபவாதம்) வரும்” என்று சந்திரனுக்கு சாபமளித்தார். இதற்குப் பிறகு சந்திரனை யாரும் அருகில் நெருங்க விடுவதில்லை. அதனால் சந்திரனால் எங்கும் நடமாட முடியவில்லை. வாழ்க்கை மிகவும் கடினமாயிற்று. சந்திரன் தவமிருந்து, கணபதியை மகிழ்வித்து, சாப விமோசனம் வேண்டினான். கணபதி யோசித்தார், சாபத்தை பூரணமாக திரும்பப் பெற முடியாது, சாபத்தின் உணர்வும் இருக்க வேண்டும், சாபமும் விலகாமல் பரிகாரமும் இருக்குமாறு செய்ய வேண்டும் எனத் தீர்மானம் செய்தார். “கணேச சதுர்த்தியன்று மட்டும் உன்னை யாரும் பார்க்கமாட்டார்கள் ஆனால் தேய்பிறையில் வரும் ‘சங்கடஹர’ சதுர்த்தியன்று, உன்னைப் பார்க்காமல் யாரும் உணவு உண்ண மாட்டார்கள்”, இவ்வாறு சாப விமோசனம் அளித்தார் கணேசர். கணேச சதுர்த்தி: குடும்பத்தின் எந்த நபர் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்? கணேச சதுர்த்தி விரதம் சித்தி விநாயக விரதம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த விரதத்தை குடும்பத்திலுள்ள எல்லோரும் அனுசரிக்க வேண்டும். எல்லா சகோதர்களும் ஒரே வீட்டில் ஒரே இரும்புப் பெட்டி, ஒரே சமையல் என்று இருக்கும் போது எல்லோரும் சேர்ந்து ஒரே உருவத்திற்கு பூஜை செய்யலாம். ஆனால் பணப்பெட்டியும் சமையலும் தனித்தனியே இருந் தால், தங்களுக்குரிய வீட்டில், சுதந்திரமாக தனியாக கணேச விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பண்டிகையின் முக்கியத்துவம்: அழிவைத் தரக்கூடிய தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள் பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை 12 நாட்கள் அதிக அளவில் வருகின்றன. இந்தக் காலத்தில் அந்த அதிர்வுகள் அதிக தீவிரமாகவும் உள்ளன. இந்தக் கடுமையான காலத்தில் பாத்ரபத சுத்த சதுர்த்தியிலிருந்து அனந்த சதுர்தசி வரை, கணேசனின் அதிர் வலைகள், பூமிக்கு அதிக அளவில் வரும் காரணத்தால் யம அதிர்வுகளின் தீவிரம் குறைவதற்கு உதவி செய்கிறது. புது கணேச மூர்த்தியின் அவசியம்: பூஜை அறையில் கணபதியின் உருவம் இருந் தாலும், கணேச சதுர்த்தியன்று எதற்காக புதிதாக கொண்டு வந்த உருவத்தை பூஜை செய்கிறோம் என்பதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம். கணேச சதுர்த்தி சமயத்தில் பூமியில் கணேசனின் அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த அதிர்வுகள் பூஜை அறையில் இருக்கும் கணேச வடிவத்தில் ஆவாஹனம் செய்தால் அது அதிக சக்தி உள்ளதாக ஆகிவிடுகிறது. இப்படி அதிகமான சக்தி உடைய மூர்த்திக்கு உற்சாகத்தோடு விஸ்தாரமான பெரிய அளவில் பூஜை அர்ச்சனையை ஆண்டு முழுவதும் செய்வது கடினமாகி விடும். அதற்காக கர்மகாண்டத்தில் கூறியுள்ள கடுமையான நியமங்களை அனுசரிக்க வேண்டி இருக்கிறது. அதனால் கணேச அதிர்வுகளை ஆவாஹனம் செய்ய புதிதாய் கொண்டு வந்த உருவத்தை உபயோகித்து, அதற்கு பிறகு அதை விசர்ஜனம் செய்து விடுகிறோம். மூர்த்தியின் சிதைவு: ப்ராணப்பிரதிஷ்டைக்கு முன்னே அல்லது அட்சதை போட்டு மூர்த்தியானது தெய்வீகத் தன்மை நீங்கிய பின் விசர்ஜனதிற்கு முன்போ, உடைந்தால் கவலைப்படத் தேவையில்லை. பிராணப்பிரதிஷ்டையின் முன் மூர்த்தியின் எந்த பாகமாவது குறைப்பட்டால் புதிய மூர்த்தியில் பூஜை செய்யவும். மூர்த்தியில் தெய்வீக தன்மை நீங்கிய பின், எந்த பாகமாவது சிதைந்து விட்டால் முறைப்படி நீரில் கரைக்கவும். ப்ராணப்ரதிஷ்டைகுப் பிறகு மூர்த்தியின் எந்த பாகமாவது சிதைந்து விட்டால் மூர்த்தியின் மேல் அட்சதை போட்டு விசர்ஜனம் செய்யவும். இந்த மாதிரி ஒரு சம்பவம் கணேச சதுர்த்தியன்றே ஏற்பட்டால், புதிய கணபதி உருவத்தை வாங்கி வழிபட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு இப்படி ஏற்பட்டால் புது வடிவத்தை பூஜை செய்வதற்காக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கணபதி உருவமானது பூர்ணமாக உடைந்துவிட்டால், வீட்டு புரோகிதரின் ஆலோசனைப் படி அத்புத தர்ஷன சாந்தி செய்யவும். விளக்கு அணைதல், பீடம் உடைதல், உருவம் உடைதல், போன்ற அதிர்ச்சி சம்பவங்களால், அந்த குடும்பத்தில் திரவிய நாசம், கொடிய நோய் அல்லது அகால மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் வரலாம். இதற்காக பரிகாரங்களைச் சிரத்தையோடு செய்யவும். நாம ஜபம்: கலியுகத்தில் எல்லா தெய்வ வழிபாட்டு முறைகளைக் காட்டிலும் நாம ஜெபமே சிறந்தது; சுலபமானது; எளிமையனது; இறைவனோடு ஒன்றறக் கலக்க உதவுவது, ஆன்மீக சாஸ்திரத்தின் படி, இறை தத்துவத்தை நம்முள் கொண்டு வர இறைவனுடைய நாமத்தை சரி வர உச்சரிப்பது மிகவும் அவசியம். ஆன்மீக சாஸ்திரப்படி கணபதியின் நாம ஜபமான, “ஓம் கங் கணபதயே நமஹ:” மற்றும் “ஸ்ரீ கணேசாய நமஹ:” ஆகிய கணேசனின் நாமஜபத்தை தொடர்ந்து சரியானபடி உச்சரிப்பதால் பெரும் நன்மை அடைய முடியும். ஸர்வஜன கணேச உத்சவம் : பொது ஜனங்களால் கொண்டாடப்படும் முக்கிய ஹிந்து பண்டிகைகளில், கணேச உற்சவமும் ஒன்று. தர்மத்தின் மீது பற்று, தேச பக்தி மற்றும் ஹிந்துக்களின் ஒற்றுமை ஏற்பட வேண்டும். என்ற உயர்ந்த நோக்கத்தோடு, லோகமான்ய திலகர், கணேச உத்சவத்தை ஆரம்பித்தார். ஆனால் உத்சவத்தின் போது நடைபெறும் பல தவறான காரியங்களால், அந்த உயர்ந்த நோக்கமும் பண்டிகையின் புனிதத் தன்மையும் மறைந்து போகிறது. உத்சவத்தில் செய்ய வேண்டியவை: மூர்த்தி சாஸ்திரத்தின் படி மூர்த்தி அமைத்தல் பூஜை நடைபெறும் இடம் மற்றும் உத்சவ மண்டபத்தில் தூய்மை மற்றும் ஒழுக்கம் கடை பிடிக்கப்பட வேண்டும். ஆன்மீக சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டு, தர்மவிதிப்படி சேவை மனப்பான்மையோடு இதில் பங்கு கொள்ள வேண்டும். சமூக மேம்பாடு, தர்ம விழிப்புணர்வு மற் றும் தேச விழிப்புணர்வைத் தூண்டும் படி நிகழ்ச் சிகள் அமைய வேண்டும். வசூலிக்கப்படும் பணம், தர்ம பிரசாரம், தர்ம, சமூக,தேச மேம்பாடிற்காக செலவழிக்க வேண்டும். இதில் பங்கு கொண்டவர்கள், ஆண்டு முழு வதும், தர்ம பிரசாரம் மற்றும் வேறு பல தர்ம நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி தொலைபேசி: -9444278471 குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.