logo
home ஆன்மீகம் நவம்பர் 05, 2018
கெடுதல் செய்யும் அனைவரும் நரகாசூரன்தான்...
article image

நிறம்

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிட்டான். அதனை மீட்டெ டுக்க மகா விஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான். பிற்காலத்தில் அந்த அசுரன் மனிதர்களுக்கு எதிராக கொடுமைகள் செய்து மனிதர்களுக்கு பல இன்னல்களை கொடுத்தான், நரன் என்று மனிதர்களை அக்காலத்தில் அழைப்பார்கள். நரன் களுக்கு துன்பம் கொடுத்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். தேவர்கள், மனிதர்கள், மற்றும் பிற உயிரினங்களுக்கு நன்மை செய்பவர் கள் அனைவரும் தேவர் என்றும், மேற்கண்ட வர்களுக்கு துன்பம் விளைவிப்பவர்கள் அசுரர் கள் என்றும் வரையறுக்கப்பட்ட காலம்தான் புராண காலம். புராணக்காலப்படி மகாவிஷ்ணுவுக்கு பூமா தேவிக்கும் பிறந்த அவன் மேற்கண்டவர் களுக்கு தீமைகளை மட்டும் செய்ததால், இறைவனுக்கு பிறந்தவனாக இருந்தாலும், அசுர குலத்தில் சேர்க்கப்பட்டான். (தற்போது ஒரு கூட்டம் அசுரர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று வீணாக விதன்டாவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். புராணக்காலத்தில் இது போன்று எந்தவித பாகு பாடும் கிடையாது. நன்மை செய்பவர்கள் தேவர்களாகவும்,தீமை செய் பவர்களை அசுரர்களாகவும் வரையறுக்கப்பட்டது அக் காலத்தில்) மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்ய பாமா விற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந் திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற் போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்யபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார். நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ் ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார். (அவதாரம் வேறாக இருந்தாலும், உண்மையில் விஷ்ணுவுக்கு, மகாலட்சுமிக்கும் பிறந்த நரகாசுரனை தற்போது தமிழனாக மாற்றம் செய்து தீபாவளியை தமிழர்கள் கொண்டாடக் கூடாது என்று ஒருசிலர் அரசியல் செய்கின்றனர். புராணகாலத்தில் உலகம் முழுவதும் இந்துக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர், மற்ற எந்த ஜாதியும் கிடையாது, எந்த நாடும், பிரிவினையும் கிடையாது. நரகாசுரன் தமிழன் என்றால் அவனை பெற்றவர்களும் தமிழர்களாகத்தானே இருக்கவேண்டும்) நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம்... “இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக் கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும்.” “ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும்.” “இன்றைய தினத்தில் செய்யப்படும் எண் ணைக் குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும்.” “இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண் ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும்” என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண் டார்கள். தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் வீடு தோறும் விளக்கேற்றி கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும். பட்டாசு என்பது பண்டிகையின் இடையில் வந்த ஒரு குதுகலமாக இருந்தாலும், அதையும் நம் மதப் பண்டிகையுடன் இணைந்துக்கொண்டு மற்றபடி தீபாவளியை வைத்து அரசியல் செய்யாமல், தீமைக்கு விடை கொடுத்து, நன் மைக்கு ஒளியைக் கொடுத்து வரவேற்கும் மிகப்பெரிய பண்டிகையாக ஒற்றுமையுடன், குழந்தைகள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியுடன் நன்மையை வரவேற்போம்.