logo
home தத்துவம் பிப்ரவரி 20, 2016
அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும்: வள்ளலார்
article image

நிறம்

இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்புதான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும். அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும். பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் பெருங் கருணையாளர்கள் என்றால் மிகையில்லை. பெரியவர்களைக் கண்டால் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். தவறு செய்தால் அதனைத் திருத்திக் கொள்ள முயலுங்கள். நற்குணங்களை பின்பற்றி நல்லவர்களாக வாழுங்கள். ஆன்மீக உணர்வுடன் ஆண்டவனின் சரண டைந்தால் நம் மனம் தூய்மை பெறும். தூய மனம் பேரின்பத்தில் வாசலைத் திறந்துவிடும் சக்தி படைத்தது. மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரலாம். மனிதர்கள் நம் நிலையாமை தன்மையை உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர். அதனால் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை கொண்டு அலைகிறார்கள். மனம் என்னும் கடிவாளத்தை உறுதியாகப் பிடித்தால்தான் நம் புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.