logo
home பலன்கள் ஏப்ரல் 20, 2016
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம் ஏன்?
article image

நிறம்

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இந்த சம்பிரதாயம் உருவாகியதன் காரணம் கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே. உருவாக்கப்பட்ட சம்பிரதாயமாகும். வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். கால மாற்றத்தால் தற்போது இது மருவி விட்டாலும், நாம் நமது பழக்க வழக்கங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதற்காகவே இதை சம்பிரதாயமாக மாற்றினர் நமது முன்னோர். இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com