logo
home பலன்கள் ஏப்ரல் 22, 2018
செவ்வாய் தோஷம் உள்ளதா? நாமே அறிந்து கொள்ள எளிய ஜோதிட வழிமுறை
article image

நிறம்

ஜோதிடத்தில் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தி விடுவது செவ்வாய் தோஷம். அதைப் பற்றி நாம் அறிவோமெனில் அச்சப்பட அவசியமில்லை. சிவனை மதியாது யாகம் வளர்த்த தட்சனின் தலைக்கனத்தைத் தவிடு பொடியாக்க, சிவனால் சிருஷ்டிக்கப்பட்டவர் தான் வீரபத்திரர். அவர் தட்சனின் யாகத்தை நிர்மூலமாக்கி அழித்து தனது கடமையை நிறைவேற்றினார். அத்தகைய போர்க்குணம் கொண்ட வீரபத்திரரே மறுஜென்மம் கொண்டு சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட மாமுனிவரின் பேரனாக அவதரித்தார். மிக இளம் வயதிலேயே ஆனைமுகக் கடவுளை நோக்கி அருந்தவம் புரிந்தார். இவரின் கண் முன்னே தோன்றிய விநாயகப் பெருமான், ‘என்இளவல் கந்தகடவுளை உன் சொந்த கடவுளாகக் கொண்டு, நவகிரக நாயகர் களில் ஒருவராக வலம் வருவாயாக ‘ என்று ஆசிவழங்கினார். அவரவர் செய்த கர்ம வினைகளுக்கேற்ப அதன தன் இராசிகளில் அமர்ந்து, அதற்குரிய பலன் தந்து நவக்கிரக பரிபாலனம் புரிந்து வருகிறார். அத்தகைய மாமுனியை வணங்கி அவர்தரும் தோஷம் பற்றிப் பார்ப்போம். செவ்வாய் லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ , சுக்கிர னுக்கோ 2,4,7,8,12,ல் அமர்ந்தால் தோஷம் செய்வார். செவ்வாய் ராகு அல்லது கேதுவுடன் இணைந்து இருப்பின் தோஷத்தை அதிகம் செய்வார். செவ்வாய், மேஷம், விருச்சிகம் மற்றும் கடகம், மகரம் வீடுகளில் அமர்ந்திருந்தால் தோஷமில்லை. மேலும் செவ்வாய், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இராசிகளில் அமர்ந்தால் தோஷம் இல்லை. செவ்வாயுடன் சனியோ அல்லது குருவோ இணைந்தாலோ, பார்த்தாலோ தோஷம் இல்லை. ஒரு ஜாதகருக்கு அவர் (ஆணோ அல்லது பெண்ணோ)செவ்வாய் தோஷம் இருக்கிறது எனில் அவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள சாதகரையே திருமணம் செய்விக்க வேண்டும். செவ்வாய் தோஷம் மில்லாத ஜாதகருக்கு மணம் செய்து வைத்தால், தம்ப தியர் கடுமையான துன்பம் துயரங்களுக்குள்ளாவர். கருச்சிதைவுகள் அல்லது புத்திர தோஷத்தை கூட ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் விபத்து யோகமும் உண்டு. செவ்வாய் தோஷப் பரிகாரம்: செவ்வாய் தோஷம் உடைய அன்பர்கள் வாரம் இருமுறை முருகன் கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்து வந்தால் செவ்வாய் மனமகிழ்ச்சியுடன் வரம் தருவார். செவ்வாய் உடன் இராகு இணையப் பிறந்வர்கள், செவ்வாய் கிழமை இராகு வேளைகளில் துர்க்கையின் பாதங்களில் விளக்கு ஏற்றி பூஜை செய்தால் தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு கிடைக்கும். ஸ்ரீசெவ்வாய் மந்திரம்: ‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி அங்கா ரகனே அவதிகள் நீக்கு” ஸ்ரீ செவ்வாய் காயத்ரி மந்திரம்; “ஓம் அங்காரகாய வித்மஹே பூமி பாலாய தீமஹி தந்நோ குஜ:பிரசோதயாத் “ வரம் தந்து வாழ வைக்கும் செவ்வாய் பகவான் தாள் பணிந்து நலம் பல பெற்று வாழ்வோமாக! நர்மதா மணிவண்ணன் லட்சுமிபுரம், தேனி மாவட்டம்.