logo
home ஆன்மீகம் ஜனவரி 26, 2019
பிறவிச்சுழற்சிகளில் இருந்து விடுபட்டு மோட்சத்தைப் பெற உதவும் ஏழு கோயில்கள்
article image

நிறம்

ஏழு மோட்சத் தலங்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் புராணங்கள் கூறுகின்றன. “அயோத்தியா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகை ஆகியவை ஏழு மோட்ச தலங்கள்” – கருட புராணம் 16.14 மாயா என்பது ஹரித்வாரையும் அவந்திகா என்பது உஜ்ஜைனையும் குறிக்கும். இந்த ஏழு மோட்ச தலங்களையும் தரிசிப்பதால் ஒருவர் பிறவிச்சுழற்சிகளில் இருந்து விடுபட்டு மோட்சத்தைப் பெறுவர் என்பது ஐதீகம். அயோத்தியாவும் மதுராவும் உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஹரித்வார் உத்தரகாண்டில் அமைந்துள்ளது. காசி (வாரணாசி) உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது. காஞ்சி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. உஜ்ஜைன் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது. துவாரகை குஜராத்தில் அமைந்துள்ளது. இந்த ஏழு தலங்களும் பல புராண இதிகாச நிகழ்வுகளுடனும் தொடர்புடைய தலங்கள் மட்டுமல்லாது நிறைய கோவில்களும் நிறைந்த தலங்களாக திகழ்கின்றன. இத்தலங்களில் இஸ்லாமிய படையெடுப்பின் போது பல கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.