logo
home ஆன்மீகம் ஜூன் 11, 2016
நினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை ஜெபமும் ருத்ராட்ச மாலையை கையாளும் வழிமுறைகளும்
article image

நிறம்

இதுவரை பல்வேறு வகையில் ருத்ராட்சத்தின் அருமை, பெருமை, பலன்களை பார்த்திருப்போம், ஆனால் அந்த ருத்ராட்சத்தை மாலையாக்கினால் அதற்கென்று தனிப்பட்ட அதி அற்புத பலன்களும் உள்ளன. 108 கொட்டை கொண்ட ருத்ராஷ மாலை அணிந்தால் அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். 54 கொட்டை கொண்ட ருத்ராஷமாலை அணியலாம். இந்த மாலையின் நடுவில் மேடு என்றப் பெயரில் பெரிய ருத்ராஷம் இருக்க வேண்டும். ஜெபம் செய்யும் போது இந்த மேரு என்ற இடம் வந்தவுடன் பின்பக்கம் திருப்பி ஜெபம் பண்ண வேண்டும். ருத்ராஷ மாலையில் ஜெபம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேரும். ஜெபம் செய்யும்போது மாலை இருக்கவேண்டிய நிலை: காலையில் ஜெபமாலை நாபிக்கு சமமாக இருக்க வேண்டும் நடுபகல் மார்புக்கு சமமாக இருக்க வேண்டும். மாலையில் நாசிக்கு நேராக இருக்க வேண்டும். சர்வதானம் செய்தால் கிடைக்கும் பலனை விட ருத்ராஷமாலை அணிந்தால் அதிகமாக பலன் கிடைக்கும் காசியில் உயர்ந்த ருத்ராஷம் கிடைக்கும். அந்த ருத்ராஷத்தை சுத்தி செய்ய வேண்டும். முதலில் சந்தன நீரில் கழுவி, பிறகு நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஜெபம் செய்ய வேண்டும். மேற்கண்டவாறு ஜெபம் செய்தால் நினைத்த காரியம் எந்த தடங்கலுமின்றி உடனே கை கூடும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com