logo
home ஆன்மீகம் ஜனவரி 23, 2016
ஆன்மிகத்தில் எங்களது புதிய முயற்சி... இலவச e-book சேவை....
article image

நிறம்

ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் ஆன்மிகமலர்.காம் சார்பாக சிரம்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்....
இந்து மதம் என்பது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உருவான ஒரு “வாழ்வியல் மதம்” என்பதை தற்போது உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் உள்ளது. இதற்கு காரணம். எந்தவிதமான கட்டுப்பாடும் இந்து மதத்தில் கிடையாது.
“இப்படித்தான் வழிபட வேண்டும்” என்ற கட்டுப்பாட்டையும் ஏற்கிறது. “இப்படித்தான் வழிபட வேண்டும் என்பது அவசியம் இல்லை” என்ற சுதந்திரத்தையும் ஏற்கிறது இந்து மதம்.
மேற்கண்ட, “அளவுக்கு மீறிய சுதந்திரத்தை சுவாசித்த நாம், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்ற பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்காததால் தான், தற்போது பல்வேறு சிக்கலை அனுபவித்து வருகிறோம்” என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை தற்போது மக்கள் உணரத் துவங்கியதால்தான். குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி, அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி போன்ற விஷேச நாட்களில் கோயில்களில் கூட்டம் வழிந்து கொண்டிருக்கிறது. “பொருளாதாரமும், ஆடம்பரமும் மக்களை ஆக்கிரமித்ததால்தான், நமது முன்னோர்களின் வழிமுறைகளை மக்கள் மறந்து தற்போது அவதிப்படுகின்றனர்” என்று பல்வேறு மகான்கள் கூறுவதை மறுக்க முடியாது.
பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதிலேயே, மனித ஆயுளில் முக்கால் பாகம் செல்வதால், இந்து மதம் என்ற கடலில் உள்ள அமிர்தத்தை மக்கள் சுவைக்க முடியாமல் துன்பப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையை உணர்ந்துதான், தற்போதைய டெக்னாலஜிக்கு ஏற்ப கணினி, செல்போன், டேப்லெட் போன்றவற்றின் உதவியால் படிக்கக்கூடியவகையில் “ஆன்மிகமலர்.காம்” aanmeegamalar.com என்ற இணைய தளத்தை துவக்கி, கடுகை கோடிக்கணக்கில் உடைத்தால் வரும், மிகச்சிறிய அளவிலான துகளைப் போன்று, ஆன்மீக சேவையை, அணிலாக மாறி செய்து வருகிறோம்.
இந்து மதத்தைப்பற்றியும், இந்துக் கடவுள்களின் சிறப்புகளைப் பற்றியும், இந்திய இயற்கை மருத்துவத்தையும், ஆன்றோர் சான்றோர் போன்றவர்களின் தத்துவங்களையும், ஒரு சில செயலால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றியும் எளிய முறையில், சிறிய அளவில் “ஆன்மிகமலர்.காம்” ("aanmeegamalar.com'') என்ற இணைய தளத்தின் வாயிலாக மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றோம் என்பதை நமது வாசகர்கள் நன்கு அறிவர்.
இந்த வகையில் எங்களின் புதிய முயற்சியாக, உலக அளவில், இதுவரை வெளிவராத வகையில் நமது ‘ஆன்மிகமலர் மெயில் புக்’ சேவையைத் துவங்கி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டுவருகிறோம். இந்த சேவையின் மூலம் புத்தகம் பெற விரும்பும் அன்பர்கள், தங்களின் இ-மெயில் முகவரியை 07299992699 என்ற வாட்சப் எண்ணிற்கு (அல்லது) aanmeegamalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு தெரியப்படுத்தினால், அவர்களின் இமெயில் முகவரிக்கு மாதம் இரண்டு ஆன்மிகமலர்மெயில் புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைக்கும் சேவையை வழங்கிவருகிறோம். இதுவரை பல ஆயிரம் வாசகர்கள் நமது சேவையை ஆதரித்து இலவச புத்தகத்தை பெற்று வருகின்றனர். (சேவை பெறாத வாசகர்கள் உங்கள் இமெயில் முகவரியை மேற்கண்ட வாட்சப் எண் அல்லது இமெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும்).
எங்களின் இந்த சேவையை ‘ஆன்மிகமலர்டிரஸ்ட்’ (Tamilnadu Government redg.304/2016) என்ற டிரஸ்ட் மூலம் செய்து வருகிறோம். ஒருசில அன்பர்களின் உதவியினால் எங்கள் சேவை தற்போது இன்னும் விரிவு படுத்த விரும்புகிறோம். இதுவரை இமெயிலில் வெளிவந்து கொண்டிருக்கும் இதழின் முந்தைய பிரதிகளை, நமது இணையதளத்திலும் வெளியிட விரும்புகிறோம். இதற்கான பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. விரைவில் இணையதளத்திலும் நமது ‘ஆன்மிகமலர் மெயில் புக்’ படித்து மகிழலாம். எங்களது முயற்சி வெற்றி பெற ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் தாராளமாக எங்கள் சேவைக்கு உதவி புரியலாம்.
AANMEEGAMALAR TRUST Vijayabank (Kodambakkam Branch) account No.310601011001269 ifsc code: VIJB0003106 micr code: 600029043
நமது இந்த சேவையை உங்கள் நலன் விரும்பிகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி நமது இலவச புத்தகத்தின் வாசகர்களாக மாற உதவுங்கள்.

நன்றி ஆசிரியர் ச.நாகராஜன், மேலும் தொடர்புக்கு 07299992699/08825844033 aanmeegamalar@gmail.com

முகவரி: ஆன்மிகமலர் டிரஸ்ட், 16 பாரதீஸ்வரர் காலனி, 4வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 600024.