தாய்மை போன்ற அன்பானவர்கள், உணர்ச்சிவசப்படுபவர்கள், குடும்பப் பற்று மிக்கவர்கள், பாதுகாப்பான சூழலை விரும்புபவர்கள். வளமான நினைவாற்றலையும், வியக்கத்தக்க காட்சிகளில் மகிழ்ச்சி அடைவதையும் வீரதீர மிக்கவர்கள். மற்றவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப அவர்களின் யோசனைகளை கிரகித்துக் கொள்வார்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் மிகவும் புண்படக்கூடிய உணர்வுகள் உள்ளவர்களாக இருப்பர்.
உணர்ச்சிப்பூர்வமானவர்கள், ரகசியமானவர்கள், விடாமுயற்சி மற்றும் ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள். விருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.
சுதந்திரத்தை விரும்புபவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், ஆன்மீக மற்றும் தத்துவ சிந்தனை உடையவர்கள். மூலம் பூராடம் உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் சிறு வயதிலுருந்தே கல்வி, ஞானம். கொண்டவர்களாகவும் நல்ல சகவாசங்களையும், நீதி நேர்மை பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிறருடைய குற்றங்களை, குணங்களை,வெகு எளிதில் கண்டு கொள்வார்கள்.
லட்சியம் மிக்கவர்கள், ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். உத்திராடம் 2,3,4, பாத்ங்கள்,திருவோணம்,அவிட்டம் 1,2, பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்களாகிய மகர ராசியில் பிறந்தவர்கள், கல்வி,கேள்விகளில் பிரகாசத்தையும்,ஆசார அனுஷ்டானங்களில் சிறந்தும், இருப்பார்கள். தனக்கு நிகர் யாரும் கிடையாது என்ற நோக்கத்துடன் இருப்பார்கள். பிற்காலத்தில் பெரிய அந்தஸ்தையும், செல்வ சுகங்கலையும், ஸ்திரசொத்துக்கலையும் பெறுவார்கள்.
சுதந்திரமானவர்கள், சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்கள், புதிய சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உடையவர்கள். அவிட்டம் 3,4, பாதங்கள், சதயம்,பூரட்டாதி 1,2,3- பாதங்களில் பிறந்தவர்கள், கல்வியில் ஊக்கமும்,தெய்வீக வழிபாடுகளில் சிறந்தும் இருப்பார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் மேதைகளாக இருந்தாலும், பிரபலமாக அமைவது கடினம். தன்னைப்பற்றி பெருமையாகத் தாங்களே பேசிக் கொள்வார்கள்.
கற்பனை வளம் மிக்கவர்கள், இரக்க குணம் உடையவர்கள், ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்கள். பூரட்டாதி 4-ம் பாதம்,உத்திரட்டாதி ரேவதி ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் செய்யப் போகும் காரியங்கள் எதையும் வாய்விட்டு சொல்லமாட்டார்கள். எவரிடமும் மனம்விட்டுப் பழகமாட்டார்கள். பயந்த சுபாவங்களுடன் இருப்பார்கள். முன் ஜாக்கிரதையுடன் கூடினவர்களாக இருப்பார்கள். புத்திர சந்தானங்கள் நிறைந்து இருப்பார்கள்
ஆன்மீகமலர் இ-புத்தகம்
1-15 ஜூலை 2026
திருப்பாச்சேத்தி அழகியநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக சிறப்பு மலர்
மானாமதுரை சித்திரை சிறப்பிதழ் 2026
மதுரை சித்திரை சிறப்பிதழ் 2026
வழிவிடு முருகன் பங்குனி உத்திரம் சிறப்பிதழ் 2026
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனிப் பெருவிழா சிறப்பு மலர் 2026