logo
home ஆன்மீகம் ஜனவரி 23, 2016
கண்டகி நதியின் கடும் தவத்தால் உருவான சாளக்கிராம கல்
article image

நிறம்

கங்கை, யமுனை நதி களுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் தனக்கு இல்லையே என கண்டகி நதித்தாய் வருத்தம் கொண்டாள். தன்னுடைய எண்ணத்தைபெருமாளுக்கு தெரியப்படுத்த தவத்தில் ஆழ்ந்தாள். பெருமாள் அவள் முன் தோன்றியதும், தனக்கும் பெருமாளுடன் சம்பந்தம் வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்தாள். பெருமாளும், சாளக்கிராமக்கல்லாக இந்நதிக்கரையில் உற்பத்தியா„ர். மகாவிஷ்ணு ‘வஜ்ரகிரீடம்’ என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமக் கல்லைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்தார். பலவிதமான சுருள்ரேகைகளையும், சக்கரங்களையும் வரைந்து, விஷ்ணு, நாராயண, நரசிம்ம, வாமன, கிருஷ்ண அம்சக் கற்களாக உருமாறினார். நேபாளத்திலுள்ள ஹரிபர்வத மலையில் சக்கரதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தப்பகுதியில் இருந்து கண்டகி நதி உற்பத்தியாகிறது. தற்போது இந்த இடத்திற்கே ‘சாளக்கிராமம்’ என்ற பெயர் வந்துவிட்டது. விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படும் சாளக்கிராமக்கற்கள் இங்குதான் உற்பத்தியாகின்றன.