logo
home ஆன்மீகம் மார்ச் 25, 2016
இஸ்லாமியரான அன்வருதீன் நவாப் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்
article image

நிறம்

நெல்லையப்பர் கோவிலில் உள்ள அனவரதலிங்கத்தின் வரலாறு மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. அக்காலத்தில் அன்வருதீன் என்ற நவாப் இருந்தார், அவரின் மனைவி பெரும் நோயால் அவதிப்பட்டுவந்தார். பலவித மருந்துகள் சாப்பிட்டும் நோய் நீங்கவில்லை. அந்த சமயத்தில் அவரது நண்பர்கள் நெல்லையப்பரை வேண்டிக்கொண்டால் நோய் தீர்ந்து விடும் என்று அறிவுரை கூறினார்கள். நவாப் அன்வருதீனும் நண்பர்களின் ஆலோசனைப்படி நெல்லையப்பரிடம் வேண்டிக்கொண்டார். ஒரு சில நாட்களில் அவரின் மனைவியின் நோய் நீங்கியது. ஆச்சரியம் அடைந்த அன்வருதீன் நெல்லையப்பர் கோவியில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார், அத்துடன் இல்லாமல் பூஜைக்குரிய மானியமும் அளித்தார். அன்றுமுதல் `அன்வருதீன் லிங்கம்’ என்று அழைக்கப்பட்டு வந்து காலப்போக்கில் `அனவரதலிங்கம்’ என்று மருவியது, இந்த செய்தி நெல்லையப்பர் கோவில் பிரகாரச் சுவரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.