logo
home ஆன்மீகம் மார்ச் 25, 2016
நித்தம் ஆறுமுறை சண்முக கவசத்தை பாடு பவர் கள் எத்தகைய நோயில் இருந்தும் விடுபடுவர்
article image

நிறம்

முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன் சுவாமிகள். இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்தசஷ்டி கவசம் போல இது பயமும், நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை. பாம்பன் சுவாமிகள், சென்னை தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது. 73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள், அவர் அருகே அமர்ந்து சண்முக கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க” என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால்கள் குணமானது. அப் போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார். தமிழிலுள்ள உயிர் எழுத்துகள் பன்னிரண் டையும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டையும் முதலெழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம். தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தை பாடு பவர் கள் எத்தகைய நோயில் இருந்தும் விடுபடுவர்என்பது நம்பிக்கை. குறிப்பாக, முருகன் பிறந்த வைகாசி விசாகத் தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.