logo
home ஆன்மீகம் ஏப்ரல் 12, 2016
ஜீவசமாதிகள் !!! அருமை, பெருமைகள் !!! மற்றும் வழிபடவேண்டிய முறைகள்
article image

நிறம்

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில் இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள். எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரும்பாலான மகான்களும்,சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான சிலர் விநாயகரையும், முருகக்கடவுளையும், சக்தியையும்,முனீஸ்வரரையும், கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின்றனர். அதனால்,அந்த ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய தெய்வங்கள் சமைக்கப்பட்டு,கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு முருகக்கடவுளின் வழிபாடு ஆகும். அதனால்,பழனிமலையில் முருகக்கடவுளின் கோவில் உருவானது. நாம் பழனி முருகக்கடவுளை தொடர்ந்து, முருகக்கடவுளின் வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து, நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் பிரச்னைகளைத் தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார்; துன்பங்களை நீக்குவார்; ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்? முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு குறையாமல் டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள்,கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும்,கொட்டைப் பாக்கும், சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி,தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.