-
விநாயகர் சதுர்த்தி உலகெங்கும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, உலகில் உள்ள அனைத்து மதத்திற்கும் முன்னோடி விநாயகர் என்று சொன்னால் மிகையில்லை...
-
ஆனால், இன்று நமது தமிழகத்திலேயே விநாயகரை வணங்கினால், ஒருசில ஜந்துக் கூட்டம் விநாயகர் வட இந்தியக் கடவுள், தமிழர்க் கடவுள் இல்லை என்ற புரளியை கட்டவிழித்துவிட்டு திரிகின்றனர்.
-
இந்தக் கூட்டத்திற்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, தமிழ் பெயரைச் சொல்லி சுக வாழ்வு வாழும் மிருகங்களுக்கு தெரியாது, விநாயகப் பெருமான் தமிழ்க் கடவுள் என்ற உண்மை.
-
ஒருசில பிரிவினைக்கூட்டமும், ஜாதிக்கூட்டம், மதக்கலவரம் தூண்டும் கூட்டமும் விநாயகரை தமிழ்க்கடவுள் இல்லை என்று ஓலம் விடுவதை ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் கண்கூடாக பார்க்கலாம்...
-
அதுபோன்ற கூட்டத்திற்கு, விநாயகர் தமிழர்களின் ஆதி மூலக் கடவுள் என்ற உண்மையை நமது புராண இதிகாசங்கள் வாயிலாக தெளிவுபடுத்தலாம்.
-
பொங்கலன்று சூரியனுக்கு படையலிடுவதற்கு முன்பு விநாயகருக்கு படையலிட்டு வழிபட்டவர்கள் நமது ஆதி தமிழர்கள்.
-
திரு அருட் பிரகாச வள்ளலார் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து நடத்தியுள்ளார்.
-
முருகப்பெருமானின் பரம பக்தரான அருணகிரிநாதர் முருகனைப் பாடுவதற்கு முன்பு விநாயகப் பெருமானை பாடிய பின்பே முருகனைக் குறித்த பாடல்கள் துவக்கியுள்ளார்.
-
தமிழ் கிழவி என்று அழைக்கப்படும் முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் விநாயகரிடம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழை யாசகமாகக் கேட்டு பெற்றதுடன், தனது அழகிய உருவத்தை வெறுத்து, தனக்கு வயதான உருவத்தை மாற்றித்தருமாறு விநாயகரிடம் கேட்டுப் பெற்றுள்ளார்.
-
கம்பன் காலத்திலேயே விநாயரைப் பற்றி குறிப்பிட்ட பின்பே கம்பன் காவியங்களை படைத்துள்ளார்.
-
ஒவ்வொரு ஆழ்வார்களும், ஒவ்வொரு நாயன்மார்களும் விநாயகரை குறித்து பதியாமல் வேறு எந்தப் பாடல்களையும் பாடியதில்லை.
-
சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் விநாயகரைப் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளனர்.
-
பல ஆயிரம் வருடங்கள் பழமையைனவர் வீரபுரத்து விநாயகர்.
-
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
-
விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டாரத்தில் அமைந்துள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்துடன் கூடிய பிள்ளையாரின் புடைப்புச் சிற்பம் கல்வெட்டு ஆய்வாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதியரால் கண்டறியப்பட்டது. இந்தச் சிற்பம் பலகைக் கல்லில் செதுக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிள்ளையார் சிற்பங்களிலேயே இந்தப் பிள்ளையார் சிற்பமே காலத்தால் முந்தையது என்றும் இந்தத் தம்பதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு சிறு குன்றைக் குடைந்து உருவாக்கிய குடைவரைக் கோவிலில் வடக்கு நோக்கியவாறு காட்சிதரும் கற்பகவிநாயகர் (வலம்புரி விநாயகர்) சிற்பம் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட சிற்பமாகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாகக் கருதப்படும் இந்த விநாயகரை செதுக்கிய சிற்பி ‘எக் காட்டூரு- க் கோன் பெருந் தசன்’ என்ற பெயருடையவர் என்று வட்டெழுத்தின் தொடக்க நிலையில் உள்ள கல்வெட்டு சான்றாக விளக்கிக் கூறுகிறது.
-
இதுபோன்று விநாயகர் தமிழர்க் கடவுளாக திகழும்போது வாதாபியிலிருந்து பரஞ்சோதி ஏழாம் நூற்றாண்டில்தான் விநாயகரை தமிழகத்துக்குக் கொண்டுவந்தார் என்று பிழையான சான்றை ஒருசில வரலாறு தெரியாத முட்டாள்கள் கூறிவருகின்றனர்.
-
விநாயகரை வணங்கி எந்த காரியத்தை செய்தாலும் எளிதாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிதைக்கவேண்டி, ஒருசில முட்டாள் கூட்டம் விநாயகர் குறித்த தகவல்களை தவறாக திரித்தும், பிரித்தும் கூறி திரிகின்றனர்.
-
உண்மையில் விநாயகர் தமிழர்களின் கடவுள் என்ற ஆராய்ச்சி முடிவுகள் ஒருசில இடங்களில் இன்னும் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.
-
இனியாவது விநாயகரைப் பற்றி தவறான கருத்தை கூறும் மூடர் கூட்டத்தைக் கண்டால் தமிழ்க்கடவுள் விநாயகருக்கு வந்தனம் செய்து, குறைக்கும் கூட்டத்தை ஒவ்வொரு தமிழனும் நிந்தனை செய்வோம்.