மேஷம்: சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திர நாட்களில் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். ஏழை மாணவர்களது கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள். வருமானம் உயரும். ரிஷபம்: திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க நாதரை மனமுருக வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்; சுபிட்சம் ஏற்படும். மிதுனம்: பூரம் நட்சத்திர நாளில், உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள பரிக்கலுக்குச் சென்று, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும். கடகம்: திங்கள் அல்லது பூரம் நட்சத்திர திருநாளில் காஞ்சிபுரம் சென்று, ஸ்ரீகாமாட்சி அம்மனை வழிபடுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்; மகிழ்ச்சி பொங்கும். சிம்மம்: சுவாதி நட்சத்திர திருநாளில் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரிக்கு சென்று, ஸ்ரீராகவேந்திரரை வணங்கி வாருங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள்; நிம்மதி கிடைக்கும். கன்னி: சதயம் நட்சத்திர திருநாளில், திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் அருளும் ஸ்ரீவக்ரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்; நிம்மதி கிட்டும். துலாம்: ரேவதி நட்சத்திர திருநாளில் விருத்தாசலம் சென்று, ஸ்ரீவிருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆழத்து விநாயகரை அருகம்புல் சார்த்தி வழிபட்டு வாருங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும். விருச்சிகம்: அசுவினி நட்சத்திர நாளில் மருத மலைக்கு சென்று, அங்கே பாம்பாட்டி சித்தருடன் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். விதவைப் பெண்ணுக்கு உதவுங்கள்; எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். தனுசு: ஞாயிற்றுக் கிழமை அல்லது உத்திர நட்சத்திரம் நடைபெறும் நாட்களில், கும்பகோணம் அருகில் உள்ள திருபுவனம் சென்று, அருள்மிகு சரபேஸ்வரரை வழிபடுங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள். மனதில் அமைதி நிலைக்கும். மகரம்: விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூவராகவப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றவர் களுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும். கும்பம்: திருச்சி- சமயபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமாரியம்மனை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று விளக்கேற்றி வணங்குங்கள். திருந்தி வாழும் கைதிகளுக்கு உதவுங்கள். செல்வம் பெருகும். மீனம்: திருவண்ணாமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் கிரிவலம் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள்
நிறம்