இன்றைய விஞ்ஞான உலகில் காணப்படும் மருந்து மாத்திரைகளை கண்டிராத அந்தக் காலத்தில், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாகவும், பொதுவான மருந்தாகவும், சித்த மருத்துவத்தில் மிக அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ஒரே மூலிகையாகவும் திகழ்ந்தது, விநாயப்பெருமான் வழிபாட்டிற்கு உகந்த அருகம்புல் மட்டுமே. இந்த அருகம்புல்லை காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அறுகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அறுகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிககிக்கச் செய்வதில் சிறந்தது அறுகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அறுகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. எல்லா இடங்களிலும் கிடைக்கும் இந்த புல்லினத்தையும், அதன் மருத்துவ குணத்தின் சிறப்பையும் வெளிப்படுத்தவே விநாயகருக்கு உகந்ததாக இந்த அருகம்புல்லை நமது முன்னோர்கள் மாற்றி வைத்திருந்தனர். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்