1. உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும். 2. முகப்பொலிவிற்கு: உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. முடி உதிர்வதை தவிர்க்க: நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். 4. வேர்க்குரு நீங்க: சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம். 5. இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும். 6. பசி உண்டாக: புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 7. சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும். 8. வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். 9. பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். 10. தொண்டை கம்மல் தீர: கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும். 11. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். 12. படர்தாமரை போக்க: அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும். 13. வயிற்று வலி நீங்க: வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 14. அஜீரணசக்திக்கு: சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும். 15. அறிவு கூர்மை அடைய: வல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் . 16. சிலந்தி கடிக்கு: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும். 17. வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும். 18. உடல் வலிமை பெற: அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். 19. சீதள பேதியை குணப்படுத்த: 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். 20. சுகப்பிரசவம் ஆக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். 21. வீக்கம் குறைய: மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும். 22. குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும். 23. நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 24. காய்ச்சல் குணமாக: செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும். 25. நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்