logo
home மருத்துவம் பிப்ரவரி 08, 2020
கரோனா போன்ற வைரஸ்களிடமிருந்து காக்க முன்னோர் அறிமுகப்படுத்தியுள்ள சடங்கு சம்பிரதாயங்கள்
article image

நிறம்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் Carona வைரஸ், இதற்கு முன்பு தோன்றிய பல்வேறு வைரஸ்களின், பாதிப்பு அதிகம் இந்தியா, குறிப்பாக தமிழகத்தை அவ்வளவாக தாக்காமல் இருப்பதற்கு காரணம், நமது முன்னோர் சொல்லிக்கொடுத்துள்ள பழக்க வழக்கங்களும், இயற்கை நமக்கு அளித்த அற்புத வாழ்வியல் முறைகள் மட்டுமே வைரஸ் கிருமிகளை அவ்வளவாக தமிழகத்தை தாக்காமல் இதுவரை காத்துக்கொண்டிருக்கிறது. இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.... சீனாவில் கரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பற்றியே அனைத்து ஊடகங்களிலும் மிரட்டலுடன் செய்தியாக வருகிறது.. பல ஊடகங்கள் தங்களின் T R P அதிகரிக்கவேண்டும் என்பதற்காக இந்தியாவில் இந்த வைரஸ் நோய் வரவேண்டும் என்பதுபோல் தான் செய்திகளை வெளியிடுகின்றனர்! உண்மையில் அவர்களின் எண்ணம் பலிக்காது.. இதற்கு பல காரணங்கள் உள்ளன! 1.கோடை காலம்... அடுத்து வரும் கோடை காலம் நமக்கு மிகவும் பாதுகாப்பானது எந்தவித வைரஸ் மற்றும் தொற்றுநோய் கிருமிகளால் நமது கடும் வெப்பத்திற்கு முன் தாக்குப்பிடிக்க முடியாது.. 2. உணவு முறை... சீன மக்களைப்போல் கண்ட கண்ட உயிரினங்களையும் அதுவும் அரை வேக்காட்டுடன் உண்ணும் பழக்கம் இந்தியர்களுக்கு இல்லை! பெரும்பாண்மையாக சைவ உணவு சாப்பிடுவது நமக்கு பலம் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட நன்கு வேக வைக்கப்பட்ட அசைவ உணவுகளையே உண்கின்றனர் அதனால் தான் முன்பு தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய பறவைக்காய்ச்சல் கூட நம்மை அதிகமாக தாக்கவில்லை! 3 மரியாதை தருவது... பொது இடத்தில் மற்றவர்களை சந்திக்கும் போது கை கொடுப்பதை தவிர்த்து வணக்கம் கூறுவதால் பெரும்பாலான வைரஸ்கள் தடுக்கப்படுகிறது, இதனால் கைகொடுப்பதால் பரவுகின்ற கிருமிகள் பரவுவதில்லை! 4.இறுதி சடங்குகள்.... இறந்தவர்களின் வாய் மூக்கு மற்றும் கழிவு துவாரங்கள் வழியாக கிருமிகள் வெளியேறாமல் இருக்க மூக்கு வாய் அடைத்து கால்விரல்கள் போன்றவற்றை கட்டுப்போடுவதால் இறந்தவர்களின் உடலிலிருந்து கிருமிகள் வெளியேறுவதில்லை. அதேபோல் இறந்தவர்களின் உடல் மீது போர்த்தப்படும் கோடித்துணி மீது கிருமிநாசினியான மஞ்சள் அறைத்து இறைப்பதால் சவத்தை எடுப்பவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது! இறப்புக்கு சென்று வந்தவர்கள் குளித்தபிறகுதான் வீட்டிற்க்குள் செல்வது சம்பிரதாயம் இதனால் கிருமிகள் எதுவும் வீட்டிலுள்ள வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பில்லை! 5.வளைகாப்பு போன்ற சடங்குகள் பெரும்பாலும் மென்மையானவர்கள் பெண்கள், இவர்களை பாதுகாக்கவே, தாலி என்ற சடங்கு உருவாக்கப்பட்டது, தாலியை தங்கத்தில் அணிவதைவிட கயிறு மூலம் அணிவரு சிறப்பு, குளிக்கும்போது இந்த கயிற்றிற்கு மஞ்சள் தேய்து குளிப்பதால், அந்த மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தி பெண்களின் உடலில் நிரந்தரமாக இருக்க உதவி செய்கிறது, அதுபோன்று குழந்தைப்பேறு அடையும் பெண்ணிற்கு குறிப்பிட்ட மாதத்தில் வளைகாப்பு போன்ற சடங்குகளை செய்யும்போது பூசப்படும் மஞ்சளின் சத்துக்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கூட காக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும தன்மையுடையது. இதுபோன்ற தற்காப்பு முறைகளால்தான், ஆப்ரிக்காவைத்தாக்கிய எபோலா வைரஸ், ஆசியாவின் பல பகுதிகளை தாக்கிய பறவைக்காய்ச்சல் போன்றவை இந்தியாவை தாக்காததற்கு முக்கிய காரணமாக இருந்தது. நமது முன்னோர் பாரம்பரிய தற்காப்பு முறைகளை சடங்குகளாக வைத்திருப்பதே காரணம். 6. இயற்கை மருந்துகள்... நோய் வந்தபின் மருத்துவமனைக்கு ஓடுவதை விட நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கான ஏராளமான மூலிகைகள் மற்றும் சித்த வைத்திய முறைகள் நமக்கு ஏராளமாக உள்ளன! நிலவேம்பு கசாயம், பப்பாளி இலை கசாயம், இன்னும் ஏராளமான கசாயங்களை அருந்தியதால் தான் கடந்தமுறை பல இடங்களில் டெங்கு முதலான காய்ச்சல்களை கட்டுக்குள் வைத்துள்ளது! 7தற்காப்பு முறை.... வெளியில் சென்று வரும்போது கை கால்களை தண்ணீரைல் கழுவும் பழக்கமும், சாப்பாட்டிற்கு முன் கை, கால்களை சுத்தப்படுத்தும் பழக்கத்தையும், தரையில் அமர்ந்து குனிந்து சாப்பிடும் பழக்கத்தையும், உடல்உழைப்பு உடற்பயிற்சி மூச்சுப்பயிற்சி யோகாசனம் போன்றவற்றை கடைபிடிப்பதையும் தொடர்ந்து செய்து வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.. அவற்றினை முறையாக பின்பற்றினாலே வியாதிகள், புதிய புதிய வைரஸ்கள் வருவது குறைந்து உடல் நலம் மேம்படும்!