logo
home ஆன்மீகம் பிப்ரவரி 01, 2019
பிரதோஷ காலத்தில் சிவனின் 11 பெயர்களை உச்சரித்து வழிபட்டால் பாவம் விலகும்
article image

நிறம்

அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்களின் தோஷத்தை நிவர்த்தி செய்து வைக்கும், மிகப் பெரும் தோஷ நிவர்த்தி பூஜையாக கொண் டாடப்படுவது பிரதோஷ பூஜையாகும். இந்த தினத்தில் சிவபெருமான் குறிப்பிட்ட காலத்தில் மக்களின் ஒருசில செய்கையால் விளைந்த பாவங்களை போக்கி அருளுகிறார். அந்த புனித வேளையில் மக்கள் சிவனை வழிபட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளில் ஒன்றுதான் சிவனின் முக்கிய 11 பெயர்களால் அவரை வணங்கும் சிவ வழி பாடாகும். 1. பவன், 2. ருத்திரன், 3. மிருடன், 4. ஈசானன், 5.தானு, 6. சம்பு, 7. சருவன், 8. உக்கிரன், 9. பர்க்கன், 10. பரமேஸ்வரன், 11.மகாதேவன் ஆகிய திருநாமங்களில் சிவனை பிரதோஷ தினத்தில் துதித்து வழிபட்டால் மிக அற்புதமான பலன்களை பெறலாம். மேற்கண்ட ஒவ்வொரு பெயருக்கும் உள்ள சிறப்பை பார்ப்போம். 1. பவன்: பிரதோஷ காலத்தில் சிவனை வேண்டிக் கொள்ளும் போது பவனே என்னைக் காப்பாற்று என்று வேண்டிக் கொள்ளுதல் வேண்டும். எல்லாவற்றையும் தன்னிடமிருந்து தோற்றுவிப்பவன் சிவனே. இதுவே பவன் என்ற பெயரின் பொருளாகும். ஒரு குருவை சீடன் இதற்கு விளக்கம் கேட்டான். தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வைரம், ரத்தினம், நீலம், புஷ்பராகம், வைடூரியம் இவைகள் எங்கே கிடைக்கின்றன? என்று குரு கேட்டார். அதற்கு அந்த சீடன் பூமியில்தான் என்றான். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் எங்கே தோன்றுகிறது? பிறப்பு, மரணம் எங்கே நடைபெறுகிறது? என்று குரு கேட்டார். அதற்கு அந்த சீடன் எல்லாம் பவனே அனைத்தும் அங்கிருந்தே வருகறது என்றான். ஆகவே பிரதோஷ தினத்தில் பவனை வணங்கினால் பாவம் தொலைந்து நல்லது நடக்கும். 2. ருத்ரன்: இது சிவபெருமானின் இரண் டாவது பெயராகும். ருத்ரன் என்ற பெயர் மிகவும் சிறப்பானதாகும். பிரதோஷ காலத்தில் பக்தர்கள் ருத்ரனின் பெயரைச் சொல்லி வணங்க வேண்ம். பிறப்பு ஒரு நோய் என்றார் தத்தாத்ரேயர், பிறந்த பின்பும் உடம்புக்கு நோய் வருகிறது. பந்தம், பாசம், இவைகளால் மனிதன் ஆண்டவனை மறக்கிறான். அதனால் பந்த பாசம் ஒரு நோயே என்றார் தத்தாத்ரேயர். கோபம், பொறாமை, காமம் அனைவரையும் வாட்டுகின்ற ஒரு பெரிய நோய். இதனால் பிறப்பு இறப்பு நோய்களை போக்கும் சக்தி ருத்ரனுக்கு உண்டு. பிரதோஷ காலத்தில் ருத்திரனை வழிபட்டால் குற்றங்கள் எல்லாம் மனித சிந்தனையிலிருந்து மறையும். 3. மிருடன்: இது சிவபெருமானின் மூன்றா வது சிறப்பு பெயராகும். எல்லோரையும் சுகம் அடையச் செய்து உரிய இடத்தில் சேரும்படிச் செய்பவன் சிவபெருமானே இதுவே மிருடன் என்ற பெயரின் பொருளாகும். பிரதோஷ காலத் தில் பக்தர்கள் மிருடனே சுகம் கொடு என்று கேட்டால் துன்பத்தைப் போக்கி விடுவான் இதுவே மிருடன் தரும் பலன் ஆகும். 4. ஈசானன்: சிவபெருமானின் நான்காவது தோற்றம் ஈசானன். ஆங்கிலத்தில் கார்னர் என்றால் மூலை என்று பெயர். எந்த இடத்தில் அமர்ந்து கொண்டால் நீ புகழ் அடைவாய் என்று யோசி அந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள் அதுவே ஈசான்ய மூலை ஆகிவிடும் என்கிறார் சிவன். சிவலிங்கங்கள் இருக்கின்ற இடங்களெல்லாம் ஈசான்ய மூலைகளே. கடவுள் எல்லா இடங்களிலும் வைத்து மனிதன் புகழ் கொடி நாட்ட வேண்டும். இதுவே இதன் கருத்தாகும். சிவனை வழிபட்டு இதை அடையுங்கள் தனக்கு மேற் பட்டோர் ஒருவரும் இல்லாதவன் இதுவே ஈசானன் என்ற சொல்லின் கருத்தாகும். 5.தானு: இது சிவபெருமானின் ஐந்தா வது பெயர். சிறிது அசைவின்றி நிலை பெற்றிருப்பவன் தானு என்ற பெயரின் பொருள் இதுவே தானுலிங்கம் என்றும் சிவதானு என்றும் சிவனுக்குப் பெயருண்டு பக்தியுடன் சிவனை ஓரிடத்தில் வைத்தாலும், பக்தியின்றி சிவனை ஓரிடத்தில் வைத்தாலும் கடவுள் அங்கேயே நிலைத்து விடுவார். அவனை அசைக்க முடியாது. பக்தர்களே, பிரதோஷகாலத்தில் நீங்களும் தானுலிங்கத்தை வழிபட்டு வெற்றி பெறுங்கள். 6. சம்பு: சம்பு சிவபெருமானின் ஆறாவது திருஉருவமாகும். இப்பெயர் ஞான மூர்த்தியாக விளங்கிய முருகனுக்கு ஒரு தனிச் சிறப்பினைத் தந்தது. சம்பு என்ற கடவுள் உயர்வு அடைவதற்குத் தேவையான பொருளை அனைவருக்கும் உடனே தருவார். அதனால் சிவனுக்கு சம்புப் பிரசாத் என்றும் பெயருண்டு. சம்பு மகாதேவன் என்பது சம்போ மகாதேவா என்று ஆகியது. சம்போ மகாதேவா என்று ஒரு முறை கூவ அழைத்தால் விவபெருமான் மனிதனுக்கு எல்லாத் துறைகளிலும் உடனே உயர்வினை தருவார். 7. சருவன்: சருவன் என்பது சிவபெருமா னின் ஏழாவது பெயராகும். இப்பெயரைச் சொல்லி இத்திருவுருவத்தைப் பிரதோஷ வேளையில் வழிபட வேண்டும். வழிபட்டால் உலகத்திற்கு மிகப் பெரிய நன்மை விளையும். சருவன் என்றால் கொடியவர்களைத் தண்டித்துக் கொள்பவன் என்று பொருள். மிக கொடியவர்களை சிவபெருமான் தண்டித்து மக்களை காக்கிறார். 8. உக்கிரன்: இது சிவபெருமானின் பதினொரு திருஉருவங்களில் எட்டாவது உருவத்தின் பெயராகும். எண் தோள் வீசி ஆடும் சிவபெருமானின் பதினொரு திருஉருவங்களுக்கு ஏகாதச ருத்திரங்கன் என்று பெயர். உக்கிரன் என்றால் எதிலும் நின்று ஆட்சி செய்பவன் என்று பெயர் ஆட்சியாளன் என்று பெயருண்டு. இவ்வுக்கிரன் பூஜை செய்தவுடன் உடனே மகிழ்வார். அதேபோல் தவறு செய்தவுடன் உடனே கோபிப்பான். 9. பர்க்கன்: பர்க்கன் இது சிவபெருமானின் ஒன்பதாவது அவதாரம் அப்பொழுது ஒரு சிறப்பான உருவம் அவருக்குக் கிடைக்கிறது உலகில் எல்லா துறைகளிலும் தகராறுகள் வரும். தவறுகள் வரும். தவறு இழைப்பதனால் இவைகள் வருவதில்லை. அனைத்துமே அறியாமையினால் நிகழ்கின்றன. அறியாமையைப் போக்கி எல்லா உயிர்களையும், அறிவு உள்ளவர்களாய் ஆக்குவதே பர்க்கன் என்ற கடவுளின் வேலையாகும். 10. பரமேஸ்வரன்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் ஒரே சமயத்தில் செய்கின்ற சிவபெருமானுக்கு பரமேஸ்வரன் என்று பெயர். இது இறைவனுக்குக் கிடைத்த பத்தாவது திருநாமமாகும். இச் சமயத்தில் இறைவன் முழு மகிழ்ச்சி அடைந்து கூத்தாடினான். அப்பொழுதே அவனுக்கு நடராஜன் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவனது திருக்கோயில் சிதம்பரம். பிரதோஷ கால பூஜையில் ஒருநாள் அனைவரும் நடராஜனை வழிபடுதல் வேண்டும். பரமேஸ்வரன் சிந்தனை உள்ளவர்களே நாட்டியம் ஆடுவார்கள். பற்பல அபிநயங்களைப் பிடித்துக் காட்டுவார்கள் நடராஜனின் உருவம் இதுவே என்பதை அறியுங்கள். சிவன் கோயிலில் இருக்கின்ற மற்ற உருவங்கள் எல்லாம் பூஜை செய்து வழிபடும் உருவங்கள். அங்கு நடராஜப் பெருமான் ஒருவனே நித்திய தரிசனத்திற்குரிய கடவுள். காரணம் நூற்றுக்கு நூறு தொழிலில், வேலையில் வல்லவர்களே நாடு தரிசிக்க விரும்பும். 11. மகாதேவன்: சிவபெருமானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் திடீரென்று ஏற்பட்டது. இது பக்தர்களுக்காகத் தோன்றிய ஒரு அற்புதத் தோற்றம் ஆகும். இது இறைவனின் பதினொன்றாம் பெயராகும். எல்லையில்லாத பேரொளியுடன் அமர்ந்து இருந்தார் சிவபெருமான் இதுவே மகாதேவன் என்ற பெயரின் பொருள். ஹர ஹர மகாதேவா என்றால் எத்திசையிலும் இப்பேரொளி எல்லையில்லாமல் இருக்கும். தற்காகவே மகாதேவன் தோன்றினார். ஒளிக்கு பின் பக்தன் விரும்பினால் தனது உருவத்தையும் காட்டுவார். சிவபெருமானிடம் இருட்டைக் காண முடியாது. பிரதோஷ பூஜையின் போது சிவபெருமான் பதினொரு வடிவங்களை எடுக்கிறார். பிரதோஷ பூஜையின்போது மேற்கண்ட பதினொரு வடிவங்களையும் நாம் நினைத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள் விலகி சிவபெருமானின் அருள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது நிதர்சனமான உண்மை.