
இந்துக்களின் புனித புத்தகங்கள் பல இருந்தாலும், பன்னிரு திருமுறைகள் கொண்ட தேவாரம் பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில் தேவார பாடல் முதன்மை பெற்றிருக்கிறது. சிவபெருமானை கண்முன் கணும் வகையில் மிக அழகிய நடையோடு, மிகுந்த நயத்தோடு நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரத்தின் திருமுறைகளும், அவற்றை இயற்றியவர்கள் பெயரையும் ஆன்மீக அன்பர்களுக்கு, ஆன்மிக மலர்.காம் வழங்குவதில் பெருமைப்படுகிறது. முதல் திருமுறை (சம்பந்தர் அருளியது) இரண்டாம் திருமுறை (சம்பந்தர் அருளியது) மூன்றாம் திருமுறை (சம்பந்தர் அருளியது) நான்காம் திருமுறை (அப்பர் அருளியது) ஐந்தாம் திருமுறை (அப்பர் அருளியது) ஆறாம் திருமுறை (அப்பர் அருளியது) ஏழாம் திருமுறை (சுந்தரர் அருளியது) எட்டாம் திருமுறை (திருவாசகம், மாணிக்கவாசகர் அருளியது) ஒன்பதாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது) பத்தாம் திருமுறை (திருமூலர் அருளிய திருமந்திரம்) பதினொன்றாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது) பன்னிரண்டாம் திருமுறை (சேக்கிழார் அருளிய பெரியபுராணம்)