logo
home ஆன்மீகம் பிப்ரவரி 02, 2016
எண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு
article image

நிறம்

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்..இன்று இரவு 8.55 மணி முதல் ஆரம்பித்துவிடுகிறது உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்க முடியாது...! தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.இதன் உள் அர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் ஆகும்.. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் ... நம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.சித்தர்கள் கூடும் திருவண்ணாமல்,சதுரகிரி போன்ற ஆலயங்கள் மிக சக்தி நிரம்பி வெளிப்படும் கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்....