logo
home ஆன்மீகம் மார்ச் 17, 2016
சித்திரகுப்தர் உருவான விதம் பற்றிய சுவையான சம்பவம்
article image

நிறம்

மனிதன் ஒவ்வொருவரின் பிறப்பையும் பிரம்ம தேவன் பார்த்துக்கொள்கிறார், ஒவ்வொரு மனிதன் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்றார் போல் பலனைத் தருபவர் எமதர்மராஜா, இவர் நீதி, தர்மம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டு அனைவருக்கும் சரியான பலனை தருவதால், இவரை தர்மராஜன் என்று கூறுகின்றனர். உலக உயிர்கள் அனைத்துக்கும் நீதி வழங்குவதால் தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்பதை உணர்ந்தார் எமதர்மராஜா. உடனே சிவபெருமானை சந்தித்து தனக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், சிவபெருமானும் எமதர்மனின் பணியைக் குறைக்க அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் சூரியனுக்கும், நீலாதேவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறக்கும் போதே ஒரு கையில் எழுத்தாணியும், மற்றொரு கையில் சுவடியும் ஏந்தியவாறு பிறந்தது. சூரியதேவனின் விருப்பப்படி அக்குழந்தை இமயமலையில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தது. அவரின் தவத்தை ஏற்ற சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, அவரை எமதர்மனின் உதவியாளராக நியமித்தார். அவர்தான் சித்திர குப்தர், எல்லா உயிரிணங்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் கூறுவதுதான் இவரின் பணி.