logo
home ஆன்மீகம் மார்ச் 29, 2016
தோஷங்களை தீர்த்து செல்வத்தை அளிக்கும் வலம்புரி சங்கு, பூஜையும், பலனும்:
article image

நிறம்

1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும். 2. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். 3. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும். 4. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். 5.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும். 6. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும். 7. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.