logo
home ஆன்மீகம் மார்ச் 29, 2016
சபரி மலை செல்லும் ஐயப்பன் மார்கள் கடைபிடிக்க வேண்டிய ஐயப்ப விரத விதிமுறைகள்
article image

நிறம்

முதன் முறை மாலை அணியும் பக்தர் கன்னி ஸ்வாமி என அழைப்பார்கள்.2-ஜந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்குச் சென்றவாராயும், ஜயப்பனின் விரதமுறையை நன்கு உணர்ந்தவராயும்,பொறுமையும் ஆசாரசீலராகவும் உள்ள ஒருவரை குருஸ்வாமியாய் ஏற்று தாய்,தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும். ‎கார்த்திகை 1ம் தேதி மாலையணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதியஉணவை ஜயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ணவேண்டும். விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கவேண்டும். மனதால் ஜயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும். உருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி,அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். விரதகாலத்தில் கறுப்பு,நீலம்,பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும்.கன்னி ஸ்வாமிகள் கறுப்பு மட்டும்தான் அணியலாம். காலை,மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனிற்கு துளசி,பால்,பழம்,கற்கண்டு போன்றவற்றில் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபடவேண்டும். விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. மது அருந்துதல்,பொய் பேசுதல்,மாமிசம் உண்ணுதல்,கோபம் கொள்ளுதல்,கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது. விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும் பேசி முடிக்கும் போதும் “ஸ்வாமி சரணம்” கூறவேண்டும். விரதகாலத்தில் பகலில் தூங்ககூடாது.இரவில் பாய்,தலையணை என்பவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். மாலையணிந்த பின் சந்திக்கும் ஆண்களை “ஐயப்பா” என்றும் பெண்களை “மாளிகைப்புறம்” என்றும் சிறுவர்களை “மணிகண்டன்” என்றும் சிறுமிகளை “கொச்சி” என்றும் அழைக்கவேண்டும். இருமுடிக்கட்டு பூஜையை குருசாமி வீட்டிலோ,கோவிலிலோ நடத்தலாம்.கணபதியை பிரார்த்தித்து பெற்றோரை வணங்கி,ஐயப்பன் நாமத்தை சொல்லிக்கொண்டே கட்டு நிறைக்க வேண்டும். யாத்திரை புறப்படும் போது ஐயப்பன்மார்கள் போய் வருகின்றேன் என்றோ,தன்னுடன் வரும் ஐயப்பன்மார்களை வசதியாக அழைத்துச்செல்வதாகவோ,தன்னுடன் தைரியமாக வரலாம் என்றோ கூறக்கூடாது. யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி,வீட்டு வாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துக்கொண்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி, போய்வருகிறேன் என எதுவும் கூறாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும். பம்பையில் நீராடி,மறைந்த முன்னோர்க்கு பித்ருதர்ப்பணம் செய்யலாம்.யாத்திரை முடிந்துதும் பிரசாதங்களை ஏந்தி வந்து,வீட்டு வாசலில் தேங்காய் உடைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று பூஜை அறையில் பூஜை செய்து கற்பூர ஆராத்தி காட்டி,இருமுடி அரிசியை பொங்கி எல்லோருக்கும் கொடுக்கவேண்டும். 12 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளலாம். யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்ற வேண்டும்.