logo
home ஆன்மீகம் மே 23, 2016
ருத்ராட்சத்தின் முகங்களும், அவற்றை அணிவதால் ஏற்படும் புண்ணியம் மிகுந்த பலன்களும்
article image

நிறம்

ஒரு முக ருத்ராட்சம்: , அனைத்து முக ருத்ராட்சங்களின் அரசனாக ஒரு முக ருத்ராட்சமே கருதப்படுகிறது. இது சிவபெருமானின் முகம். ஒருமுக ருத்ராட்சத்தை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும். சூரியனின ஆசி கிடைக்கும். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்து அமையும். இரண்டு முக ருத்ராட்சம்: தேவதேவி ஸ்வரூபம். இது பாவங்களை அத்தனையும் அடியோடு போக்கும். தேவியின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும். இரண்டு என்பது சந்திரனுக்குரிய எண்ணாக இருப்பதால், அறிவு திறன், மதிநுட்பம் மேம்படுத்தும். முகம் பொலிவு பெறும். அம்பிகையின் அருள் நிச்சயம். மூன்று முக ருத்ராட்சம்: அக்னி ஸ்வரூபம். தோஷங்களையும், பாவங்களையும் நெருங்கவிடாமல் அதை எரித்துவிடும் ஆற்றல் கொண்டது. மூன்றாம் எண் குருபகவானின் எண் என்பதால் சுபநிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற வழி பிறக்கும். கல்வி சிறப்பு தரும். வித்தைகள் கைக்கூடும். நான்குமுக ருத்ராட்சம்:பிரம்மதேவனின் வடிவம். வேதங்கள், புராணங்கள் கற்ற புண்ணிய பலன்களை இரட்டிப்பாக்கும். இது இராகு பகவானின எண் என்பதால், நல்ல செல்வ வளத்தையும், ஜாதகத்தில் இராகு பகவானின் தோஷம் இருந்தாலும் தீரும். நாகதேவதைகளின் அருள் கிடைக்கும். ஜந்து முக ருத்ராட்சம்: சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறது. இதற்கு பெயர் காலக்னி. உணவால் ஏற்படும் தோஷத்தை போக்கும். அத்துடன் ஐந்தாம் எண் புதனின் எண்ணாக இருப்பதால், தடைபடும் கல்வி தொடரும். நல்ல ஞானத்தை பெறுவார்கள். கலைதுறையில் முன்னேற வழி பிறக்கும். பலரின் உதவிகள் கிடைக்கும். செயல்கள் வெற்றி அடையும். ஆறுமுக ருத்ராட்சம்: முருகப்பெருமானின் அம்சம். முருகப்பெருமானின் ஆசியை பெறுவார்கள். விரோதிகள் வீழ்வார்கள். எதிலும் வெற்றி கிட்டும். சொந்த வீடு – மனை வாங்குகிற சிறப்பை தரும். ஆறாம் எண் சுக்கிரனை குறிப்பதால் எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தரும். ஸ்ரீமகாலஷ்மி யோகம் அமையும்.. ஏழுமுக ருத்ராட்சம்: மன்மத ஸ்வரூபம். தெரிந்தோ தெரியாமல் செய்த முன் ஜென்ம பாவத்தை போக்கும். பாவங்கள் நீங்கினாலே யோகங்கள் தேடி வரும்தானே. இது கேது எண்ணாக இருப்பதால் உடல் பிணி நீங்கும். கல்விதடை அகலும். ஞானம் பிறக்கும். எட்டு முக ருத்ராட்சம்: விநாயகபெருமானின் சொரூபம். சனிஸ்வரால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெற வழி கிடைக்கும். விநாயகர் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். எட்டாம் எண் சனி பகவானின் எண்ணாக இருப்பதால், எட்டு முக ருத்ராட்சத்தை அணிந்தவர்களுக்கு தொல்லை தந்தால், தொல்லை தந்தவர்களை சனி பிடிக்கும். எட்டு முக ருத்ராட்சம் அணிந்தவர்ளுக்கு சனிஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். ஆனால் நியாய – தர்மபடி நடக்க வேண்டும். ஒன்பது முக ருத்ராட்சம்: பைரவ வடிவம். நூறு பிரம்மஹந்தி தோஷத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. சிவபெருமானின வாகனம் என்பதால் சிவபெருமானின் ஆசியும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால், தைரியம் ஏற்படும். பணவரவு பெருகும். இன்னல் இல்லாத வாழ்க்கை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோஷங்கள் பாவங்கள் தீரும். போலீஸ் – இராணுவத்தில் உயர் பதவி கிடைக்கும். பத்து முக ருத்ராட்சம்: விஷ்ணு சொரூபமாக அமைகிறது. இதனால் ஜாதக தோஷங்கள் நீங்கும். தோல் வியாதி தீரும். கண்திருஷ்டி – செய்வினை பாதிப்புகள் நீங்கும். பத்தாம் எண் சூரியனை குறிப்பதால், அரசாங்க பணிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக இருக்கும். கண் நோய் குணமாகும். பதினோரு முக ருத்ராட்சம்: ஏகாதச ருத்திர வடிவம். ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தால் என்ன பலனோ, அந்த பலனை கொடுக்கும். கோடி பசு தானம் செய்த புண்ணியமும் கிட்டும். இந்த பதினோரு எண் சந்திர பகவானுக்குரிய எண்ணாக இருப்பதால் அறிவு தெளிவு பெறும். இதை தலையில் சிறிது நேரம் வைத்திருந்தால், புத்தி நன்றாக வேலை செய்யும். பன்னிரண்டு முக ருத்ராட்சம்: துவாதச ஆதித்த ஸ்வரூபம். இது பயத்தை போக்கி மன தைரியத்தை கொடுக்கும். புண்ணிய பலனை அள்ளி தரும். பன்னிரெண்டாம் எண் குரு பகவானின் ஆதிக்கம் கொண்டதால், ஆற்றலும், செல்வ வளமும் தந்திடும். திருமண தடை விலகும். பதின்மூன்று முக ருத்ராட்சம்: முருகப்பெருமானை பூஜித்தால் என்ன பலனோ அந்த பலனை எளிதாக கொடுக்கும். பெற்றொருக்கு அறியாமல் செய்த பாவத்தை போக்கும். பெற்றொர் மேல் அன்பு ஏற்படும். பதிமூன்றாம் எண் இராகுபகவானை குறிப்பதால் திடீர் யோகத்தையும் ஏற்படுத்தும். பதினான்கு முக ருத்ராட்சம்: சிவபெருமானாகவே கருதப்படுவார்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். செல்வந்தர்களாக திகழ்வார்கள். இன்னும் பல நல்ல பலன்களை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுபிக்ஷத்தை தரும் ஆற்றல் கொண்டது. இதில் ஒன்று முக ருத்ராட்சமும், பதினான்கு முக ருத்திராட்சமும் கிடைப்பது அரிது. குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com