விநாயகருக்குப் பல வழிபாடுகள் வித்யாசமான முறையில் இருப்பதை காண பத்ய முறையிலும் விநாயகப் புராணத்திலும், காணலாம். சகங்ரநாமம் என்கிற ஆயிரத்தெட்டு நாமங்கள் தொகுப்பில் கணபதியின் பூரண அருளைப்பெற்றிட சதுர் லட்ச ஜபம் எனனும் நான்கு லட்சம் மூலமந்திர உச்சரித்தல் வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கணபதி சகஸ்ரநாமத்தில் உள்ள 1016-வது நாமா வளியில்லும் சதுர்லட்ச ஜபப்ரீதாயை நம என்று வருகிறது. அடுத்ததாக வரும் 1017-ம் நாமாவனியில் ஓம் சதுர்வசட்ச ஜபப்ரகாசிதாய நம: என்று வருகிறது. அதாவது நான்கு லட்சம் மூல மந்திர ஜபம் செய்பவர்களுக்கு விநாயகர் கனவில் ப்ரசன்னமாகி வேண்டும் வரங்களை அருள்வார் என்று பொருள். சதுராவர்த்தி தர்ப்பணம் என்ற விதிப்படி இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் மங்களங்கள் உண்டாகும் என்பது பெரியோர்கள் மற்றும் கணபதி உபாசகர்களின் கருத்து. சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை செய்முறை: விநாயகர் வழிபாடு மட்டும் அல்லாமல் மற்ற எல்லா தெய்வங்களுக்கும் விசேஷ வழிபாடுகள் செய்யும் பொழுது ஹோமம் செய்வது முதல் அங்கமாக விளங்குகிறது. விநாயகருக்குச் சதுராவர்த்தி என்கிற நான்கு லட்சம் ஜபம் செய்கின்ற போது முதலில் அஷ்ட திரவியம் என்ற எண் வனகக் கலவையால் ஹோமம் செய்தல் வேண்டும். மோதகம், அப்பம், கரும்பு துண்டு, அவல், எள், வாழைப்பம் சத்துமாவு, நெல்பொறி, ஆகியன மேலும் இந்த வகை ஹோம பூஜையின் போது சமர்ப்பிக்கப்படுகிற சமித்துக்களுக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கின்றன. அந்தவகையில் சமித்து (ஓம குச்சிகள்)களால் ஏற்படும் பலன்கள். அத்தி குச்சியால் ஓமம் செய்ய - பிள்ளைப் பேறு உண்டாகும். நாயுருவி குச்சி- மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். எருக்கன் குச்சி- எதிரிகள் இல்லாத நிலை உருவாகும். அரசங்குச்சி- அரசாங்க நன்மையை எதிர்பார்க்கலாம் கருங்காலிக் கட்டை- ஏவல்கல் பில்லி சூன்யங்கள் விலகிவிடும். வன்னிக்குச்சி- கிரஹத் கோளாறுகள் நீங்கி விடும். புரசங்குச்சி- குழந்தைகளின் கல்வி வளர்ச்சி வில்வக்குச்சி- செல்வம் சேர வாய்ப்பு உண்டாகும் அருகம்புல்- விஷபயம் நீங்கும். ஆலங்குச்சி- புகழைச் சேர வைக்கும். நொச்சி- காரியத்தடை விலகி வழக்குகளில் வெல்லச் செய்யும். யக்நத்தைச் செய்த பிறகு தர்ப்பணம் செய்தல் வேண்டும். மகாகணபதியின் மூல மந்திரத்தைக் கூறி 108 தடவைகள் அல்லது 54 முறை, ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதியே சர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா சித்தலட்சுமி சமேத ஸ்ரீமகா கணபதிம் தர்ப்பயாமி மிகச் சிறிய மகாகணபதி சிலையை இரு தட்டில் வைத்து அதில் இந்த யந்திர கேசை வடிவை போட்டு மகா கணபதியைப் பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து இந்த 54 தர்ப்பண வழிபாட்டைச் செய்ய வேண்டும். கணேசருக்கு தர்ப்பணமிடும் போது கடைசியில் கிழுள்ள பிரார்த்தனையை மனதுக்குள் மானசீக மந்திரமாகச் சொல்லிக் கொள்ளலாம். 1. எனது சங்கடங்கள் அனைத்தும் விலகிடச் செய்வாய் ஸ்ரீகணபதியே 2. நவக்கிரகங்கள் ஒன்பதும் நன்மையே அருளச் செய்வாய். 3. சகல விதமான தோஷங்களும் என்னை விட்டுப் போகட்டும் 4. எல்லா விதமான வருத்தங்களும் என்னை விட்டு அகல வேண்டும் 5. துக்கங்களிலிருந்து நிவாரணம் எனக்குக் கிடைக்கட்டும். 6. என்னுடைய தாபங்கள் தீர்ந்து விட அருள் செய்வாய். 7. பாவங்கள் என்னிடம் நெருங்காமல் போகட்டும். 8. என்னை வாட்டுகிற நோய்கள் உடலை விட்டு ஓடிவிடட்டும் 9. எதிரிகள் என்னை விட்டு விலகிப் போவார்களாக 10. உடல் சார்ந்த நோய்கள் தீர்ந்து போகட்டும் 11. என்னைச் சுற்றுகிற பீடைகள் மறைந்து விடட்டும் 12. எனக்கு பயம் என்பதே இல்லாமல் போக வேண்டும். 13. எனக்கு சத்ரு உபாதைகள் தொந்தரவுகள் அகலட்டும் 14. கெட்ட சம்பவங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும். 15. கெட்ட கனவுகள்வராமலேயே நசிந்து போகட்டும். 16. தரித்திரம் என்ற சொல்லுக்கு இடமின்றி போக வேண்டும். 17. தீய சக்திகள் நெருங்காமல் விலகியே இருக்கட்டும். 18. என்னைக் கடும் விஷம் பாதிக்கப்படாமல் இருக்கட்டும் 19. எல்லா வகையிலும் லாப நிலைகள் வந்து அடையட்டும். 20. நெருங்குகிற போதே நோய்கள் நசிந்து குலையட்டும். 21. தீய நினைவுகள் என்னிடம் வராமல் போகட்டும். 22. சம்பத்துக்கள் மலைபோல வளரட்டும் 23. மனம் போல விருப்பங்கள் நிறைவேறட்டும் 24. நான் வசிக்கும் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகட்டும். 25. உலகத்திற்கு உரிய நலன்களைக் கொடுப்பாயாக. 26. எனக்குள் அபூர்வ சக்திகள் வந்து சேரட்டும். 27. என் வாழ்வில் பேரன் பேத்திகள் உருவாக வேண்டும். 28. எப்போதும் சுப நிகழ்வுகளையே அருளுவாய். 29. கல்வி அறிவு அபரிமிதமாக வளர்ந்து விடட்டும் 30. எங்கும் எப்போதும் சாந்தி நிலவிட அருள்க. 31. நான் சொல்லும் மந்திரங்கள் சித்தியாக வேண்டும். 32. எனது சொல்லும் வாக்கும் பலருக்கும் பயனாக அருள்வாய். 33. நான் செய்யும் யந்திர பூஜை சித்தியைத் தரட்டும் 34. நான் பயின்ற தந்திர சாஸ்திரங்கள் வெற்றியைத் தரட்டும் 35. முழுமையான வாழ்நாளை எனக்குத் தந்தருள்வாய் 36. என் நினைவுகளில் நல்லதே வந்து உதிக்கட்டும். 37. மனதில் தோன்றும் விருப்பங்களை வெற்றி அடையச் செய்வாய். 38. எனக்கு எப்போதும் மன நிம்மதியைக் கொடுப்பாயாக. 39. எனக்கு விருப்பம் எனத் தோன்றுவதைத் தந்து விடுக. 40. திரியும் விலங்குகள் எனக்கு வசமாக வேண்டும். 41. அனைவருக்கும் சுகாதாரத்தை வளரச் செய்வாய். 42. மனதில் வைராக்கியத்தை வளரச் செய்திடுக. 43. உலகில் எல்லா யோக பாக்யங்களும் சேர்ந்திட அருள்வாய். 44. என் ஆத்மா புனிதத்தன்மை அடைந்து விடட்டும். 45. என் குருவிடம் நான் அதிகமான பக்தி கொள்ச் செய்வீராக. 46. எனது சுயரூபத்தைப் பிரகாசமடையச் செய்வீராக. 47. கலிகாலத்தின் தோஷம் எங்களை விட்டு அகல வேண்டும். 48. தனம், தான்யங்கள் வளர்ந்து செழிக்க வேண்டும். 49. குடும்பத்தில் சூன்யங்கள் பிறரால் வைக்கப்படாமல் போகட்டும். 50. மனவருத்தங்கள் கணவன- மனைவியரிடையே வராமல் இருக்கட்டும். 51. மனக்கிலேசம் விலகி அன்பு பெருகட்டும். 52. வேண்டாத பயம் என் மனதை விட்டு நீங்கி விடட்டும் 53. அனைத்து பூத ப்ரேத பிகாச உபத்திரவங்கள் விலகி விடட்டும். 54. வழக்கு வெற்றி முதல் சகல காரியங்களிலும் வெற்றியே தொடரட்டும் மகா கணபதியே! தர்ப்பண பூஜை முடிந்த பிறகு சுற்றுப்புறங்களில் அங்கு வைக்கப்பட்ட கலசத்தில் உள்ள நீரை பார்ஜனம் என்ற வகையில் தெளித்தல் வேண்டும். பொதுவாக ஒரு பூஜை செய்யும் வகைகளில் விநாயகர் வழிபாடு முதல் கலச பூஜை, அக்னி ஓமம் என்று வகைப்படுத்தப்படும் பூஜாவிதி இச்த சதுராவர்த்தி தர்ப்பண பூஜையில் மட்டும் விநாயகர் வழிபாடு. வரிசையாக ஜெபம். யக்ஞம், தர்ப்பணம் (நீர் வார்த்தல்), மார்ஜனம் (தெளித்தல்), என்று அமைகிறது. இங்கே அபரிமிதமான பலன்களைத் தரக் கூடிய சதுர் ஆவர்த்தி தர்ப்பண பூஜை எளிமையாக உலக நலன் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பலர் கூடிப் பலன் பெற செய்ய நினைப்பவர்கள் விநாயகர் கோவில், மற்ற ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதி மண்டபங்களில் பொதுவாகச் செய்யலாம். விரிவாகக் செய்யும் இந்த வழிபாட்டு முறையில் நான்கு லட்சம் ஆவர்த்திகள் (தடைகள்) மூலமந்திர ஜெபமும் 40,000, ஆவர்த்திகள் அக்னி ஹோமமும். 4,000 ஆவர்த்திகள்- தர்ப்பண முறையும் 400 ஆவர்த்திகள் மார்ஜனம், என்ற தெனித்தல் நிகழ்வும் அடங்குகின்றன. அதாவது 4,444 என்று மொத்தம் 16 ஐக் காட்டுகிற இதன் எண்ணிக்கை முறை 16 லட்சுமி தேவிகளையும் அதன் மூலமாக வரும் வளங்களையும் காட்டுகின்றன. என்ன பலன் கிடைக்கும்? கணபதி வழிபாட்டு முறைகளில் இதுவரை வெளியிடப்படாத ரகசியமாகவே இருந்து வந்த சதுராவர்த்தி விதி இன்று எல்லோரும் அறியும்படி வெளியிடப்படுவதற்குக் காரணம் நாட்டில் எல்லோருக்கும் கடன் தொல்லைகள் அதிகமாகி விட்டது. இந்த வழிபாட்டைச் செய்வதால் கடன் தொல்லை தீர்ந்து விடும். தொழில் வியாபாரம் அமோகமா நடைபெற, இந்த பூஜையை பல தொழில் அதிபர்கள் சேர்ந்து செய்வதால் பலன் கிடைக்கும். வியாபார எதிரிகள் போட்டியிடுவோர் கோர்ட்டு, வழக்குகளில் சிக்க வைப்போர்களிடமிருந்து விடுதலை, தீர்வு, வெற்றிகள் கிடைக்கும். சர்வ சம்பத்துகளும் உண்டாகும். அம்பிகையைக் குறித்து செய்யப்படுகிற சண்டியாகங்கள் பெரும் பொருட்செலவில் பல திருத்தலங்கள், மடங்கள் பீடங்களில் உற்சவ காலங்களில் செய்யப்படுவதை போன்று விநாயக சதுர்த்தி விழாக்கள் தொடங்கும் இக்கால கட்டத்தில் சதுராவர்த்தி தர்ப்பண வழிபாட்டைப் பலன் வேண்டுவோர் செய்து கொள்ளலாம். விநாயகருக்கு செய்யவேண்டிய வைவேத்தியங்கள் அவல், பொரி, சோளம், விளாம்பழம், நாவல்பழம், வடை, சுண்டல், மோதகம், வாழப்பழம், ஆப்பிள், கரும்பு. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம்,காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.காரிய சித்திமாலை துதியை 3 வேளைகள் அதாவது காலை,மதியம்,மாலை உரைப்பவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும். - மு.கிருஷ்ண மோகன், ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் போன்: 08526223399 / 09843096462
நிறம்