logo
home ஆன்மீகம் ஜனவரி 08, 2019
நோய் வருவதற்கும், விலகுவதற்கு கூட காரணமாக அமையும் கிரகங்கள்
article image

நிறம்

பொதுவாக, ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், எங்கோ வெகு தொலைவில் இருக்கின்ற கிரகங்கள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும். எதற்காக அது ஒருவனுக்கு நன்மையையும், இன்னொருவனுக்கு தீமையும் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். அந்த கேள்வி சரியானதாகவும் நமக்கு தோன்றும். ஆனால், ஒரு விஷயத்தை மிகச் சுலபமாக நாம் மறந்துவிடுகிறோம். பூமி மேல்பரப்பின் மீது உயிர்கள் ஒட்டிக் கொண்டிருப்பதற்கும், அயன வெளியில் கிரகங்கள் ஒழுங்கு முறையில் சுற்றுவதற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு வித ஈர்ப்பு சக்தி காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்வதை நாம் அறிவோம். பூமியில் உள்ள தாவரங்கள், ஒளிச் சேர்க்கையினால், தங் களது உணவை தாங்களே சமைத்துக் கொள்வதை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிரூ பித்து காட்டுகிறது. சூரிய ஒளியை சின்னஞ்சிறிய செடிகள் எப்படி ஈர்த்து கொள்கிறதோ? அதற்கு எந்த விதமான சக்தி தாவரங்களுக்குள் மறைந்திருந்து செயலாற் றுகிறதோ அதே போன்ற சக்தி அல்லது அதை விட சற்று மேம்பட்ட சக்தி மனித சரீரத்துக்குள்ளும் மறைவாக இருந்து செயலாற்றுகிறது. அப்படிப்பட்ட மறைபொருளான ஈர்ப்பு சக்தி, கிரகங்களின் சுபம் மற்றும் அசுப தன்மைகளை மனிதனுக்குள் கொண்டு வந்து, பல காரியங்களை செய்கிறது. செய்விக்கிறது. சரி அப்படி செய்வதாக இருக்கட்டும். எதனால், இந்த கிரகங்கள் மனிதனுக்கு நல்லதையும், கெட்டதையும் செய்ய வேண்டும். அதன் மூல காரணம் என்ன? என்ற அடுத்த கேள்வி நம் மனதிற்குள் எழும். இந்த இடத்தில் நமது விஞ்ஞான புத்தியை சற்று தூரவைத்து விட்டு, மெய்ஞானத்தை நாட வேண்டும். உலகில் வேறு எந்த மதமும் சொல்லாத அல்லது அறியாத கர்ம கொள்கையை நமது இந்து மதம் சொல்கிறது. இந்த கர்ம கொள்கைக்கு எளிமையான விளக்கம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு செயலுக்கான பலனை பெறுவது என்று சொல்லலாம். அதாவது, நன்மை செய்தால், நன்மையான பலனும் தீமை செய்வதினால் தீமையான பலனும் அடைவது இதன் அடிப் படையாகும். மனிதன் தனது வாழ்நாளிலும், வாழ் வுக்கு முந்தைய நாளிலும், நல்லதும் கெட்டதுமாக பல செயல்களை செய்கிறான். அதனுடைய விளைவுகளையும் வாழ்நாளை தாண்டியும் அனுபவிக்கிறான். அப்படி என்றால் நன்மை செய்தவனுக்கு நன்மையையும், தீமை செய்தவனுக்கு தீமையும் வகையறிந்து வழங்க சக்தி மிக்க நீதிபதி வேண்டும். அந்த நீதிபதியை தான் ஆத்திகன் கடவுள் என் கிறான். நாத்திகன் இயற்கை என்கிறான். நீதிபதியின் தீர்ப்பை செயல் வடிவமாக்க சில புறக்கருவிகள் வேண்டும். அதே போலவே, கடவுளின் தீர்ப்பையும் மனிதனுக்கு கொண்டு வந்து சேர்க்க சில புறக்கருவிகள் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஜோதிட சாஸ்திரம் நுழைகிறது. கடவுளின் தீர்ப்பை செயல்படுத்தும் கருவிகளே கிரகங்கள் என்கிறது. அதாவது கர்மாவின் பயனை மனிதனுக்கு நேரடியாக கொடுப்பது கிரகங்கள் தான். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, மனிதன் அனுபவிக்கும் எல்லாவிதமான அனுபவங்களுக்கும், கிரகங்கள் என்பது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் காரண மாக இருக்கிறது. அதாவது, மனிதனுக்கு நோய் வருவதற்கும், விலகுவதற்கும் கூட கிரகங்கள் காரணமாக இருப்பதை அனுபவப் பூர்வமாக உணரலாம். சின்னஞ்சிறிய குழந்தை என்ன பாவம் செய்தது? அதற்கு ஏன் இத்தகைய பிணிகள் வந்து துயரத்தை கொடுக்க வேண்டும் என்று நமது இளகிய பணம் சிந்திக்கும். இப்போது கண்ணெதிரே குழந்தையாக இருக்கும் இந்த சிறிய குழந்தை நேற்று அதாவது முற்பிறப்பில் பெரியவனாக இருந்து தான் மாண்டிருக்க வேண்டும். அந்த கால கட்டத்தில் செய்த வினைகளுக்கான பலனை இப்போது அனு பவிக்க வேண்டிய சூழல் இருக்கலாம். அதன் விளைவுதான் பல குழந்தைகள் நோய்களாலும், வறுமையாலும் துன்பப் படுவது. - யோகி ஸ்ரீ ராமானந்த குரு போன்: 09442426434