logo
home ஆன்மீகம் ஏப்ரல் 05, 2020
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை.... விளக்கேற்றி கொரானாவை அழிக்க இறைவனை வேண்டுவோம்
article image

நிறம்

உலகை அச்சுறுத்தும் கொரானா நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், உயிரிழப்பு பல ஆயிரத்தை தாண்டி, பாதிப்பு லட்சத்தை தாண்டிக்கொண்டிருக்கிறது. வளர்ந்தநாடு, வளரும் நாடு, ஏழைநாடு, பணக்காரன், அதிகாரம் படைத்தவன், பாமரன் என்று எந்த பாகுபாடும் பாராமல், உயிரைப் பறிக்கும் கொடிய கண்ணுக்குத் தெரியாத அசுரனாக உலகில் உலா வருகிறது கொரானா என்ற வைரஸ். இதற்கு உலக நாடுகளில் மருந்தோ, மாத்திரையோ கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. எதை திண்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தற்போது உலக நாடுகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வைரஸ் எப்படி உருவானது என்பதைப் பற்றி தற்போது எந்த ஆராய்ச்சியும் தேவைப்படவில்லை, அதற்கு மாறாக எப்படி அழிப்பது என்பதைப்பற்றி முழி பிதுங்க தீவிரமாக யோசித்து வருகிறது. இந்த நிலையில் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள், 5.4.2020 அன்று இரவு 9.00 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டிலுள்ள மின்விளக்குகளை அனைத்து விட்டு, வீட்டில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் ப்ளாஷ் லைட் போன்றவற்றில் ஒன்றை ஒளிரவிட்டு இறைவனை பிரார்த்திக்க அறிவுறுத்தியிருக்கிறார். மருந்து மாத்திரை கண்டுபிடிக்க முடியாமல் அறிவியல் உலகம் கைவிட்ட நிலையில், இறைசக்தியின் உதவியை நாடுவதை தவிர எந்த வழியும் இல்லை. இந்நோயை எதிர்த்து உலக அளவில் போராடும், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமான 22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கை தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்க பாரத பிரதமர் அறிவுறுத்தினார். உலக நாடுகளே அந்த நிகழ்வை பாராட்டியது, இதன் பின் பிரிட்டன், அந்தமான், சிங்கப்பூர் போன்ற ஏனைய நாடுகள் பாரதப் பிரதமரின் வழியை பின்பற்றினர். ஆனால், துரதிருஷ்டவசமாக ஒருசில முட்டாள்கள், திருடர்கள் கூட்டம் இந்த நிகழ்வை கேலியும் கிண்டலும் செய்தனர், கை தட்டினால் கொரானா போய்விடுமா? என்று சாத்தான்கள் போன்று கூவி திரிந்தனர், தொற்று நோயாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்களது உயிரை துச்சமென மதித்து, வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்ட வாழும் தெய்வங்களுக்கு, கைதட்டி முதன் முதலில் பாராட்டு தெரிவித்தது இந்திய மக்களே. இதற்கு பின் தான் உலக நாடுகளும், மருத்துவர், செவிலியர், சுகாதாரப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். வைரஸ் கிருமியை அழிக்கும் உலக நாடுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இறை சக்தியை நாட பாரத பிரதமர் முயன்றிருப்பது வரவேற்க தக்கதுதான், அரசன் கைவிட்டாலும், தெய்வம் கைவிடாது என்ற நம்பிக்கையை மெய்பிக்க இந்திய மக்களை மிகச்சிறந்த ஜோதிட ஆற்றல் நிகழும் நேரத்தில் இறைவனை நாட மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். தீபம் ஏற்றுவது சா்வகிரகதோஷ நிவாரணி என்று பிரதமரின் அறிவிப்பு குறித்து, வேதவாக்கு இதழின் ஆசிரியரும், பிரபல ஜோதிடருமான ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருப்பது. சனி பகவான், குரு பகவான் இருவரும் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் கிரக நிலையில்தான் 9 நிமிடங்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். தீபம் ஏற்றுவது என்பது ஜோதிட அடிப்படையில் சூட்சுமம் நிறைந்த பரிகாரம். நெய் தீபம் அல்லது நல்லெண்ணெயின் தீபத்தின் ஒவ்வொரு துளிக்கும் மகத்தான சக்தி உள்ளது. அதனால்தான் தீபம் ஏற்றுவதை சா்வகிரகதோஷ நிவாரணி என்று பெரியவா்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ளனா். தீப ஒளிக்கும் மின்சார ஒளிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு அறையில் தீபத்தை வைத்துவிட்டு தியானம் செய்தால் ஒருமைப்பட்டு கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். மனம் இறைவனிடம் ஒன்றியிருக்கும். ஆனால் மின்சார விளக்கு நமது கவனத்தை திசைத் திருப்பும். எனவேதான் மின்விளக்கை அணைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆத்ம பலம்தான் நம் நாட்டை காப்பாற்றி வருகிறது. அதை மேலும் மேலும் வலுப்படுத்தி வருவது தீபம். எனவேதான் குறிப்பிட்ட அந்த நேரத்தில் தெய்வீக ஒளி மட்டுமே இருக்க வேண்டும். நமது நாடு இதுபோன்ற பல இருண்ட காலங்களைக் கடந்துள்ளோம். இப்போது மேலும் ஒரு இருண்ட காலம் வந்துள்ளது. அதை அனைவருடன் இணைந்து செயல்பட்டு வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார். இந்தியாவில் பொதுவாக பல சமயத்தினர் வாழும் நாடாக உள்ளதால், தீபம், மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் லைட் போன்றவற்றை பயன்படுத்த கூறியது, அடுத்தவர் மதத்தை மதிக்கும் நோக்கமாகும். பொதுவாக தீபத்தை இந்துக்கள் மட்டுமே ஏற்றுவார்கள், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றும் வழக்கம் கொண்டவர்கள், இஸ்லாமியர்கள் இதை ஏற்கமாட்டார்கள் ஆனாலும் அவர்களும் இந்த நிகழ்வில் இறை நம்பிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக டார்ச் லைட், செல்போன் ஒளி போன்றவற்றை பயன்படுத்தி, வைரஸ் கிருமிக்கு எதிராக அனைத்து மதத்தினரும் ஒன்று திரளவேண்டும் என்பதற்காகத்தான் தீபத்தை மட்டும் குறிக்காமல் மற்றவற்றையும் கூறியுள்ளார். 1720ல் PLAGUE, 1820ல் CHOLERA, 1920ல் SPANISH FLU 2020ல் CORONA VIRUS 1720 ஆம் ஆண்டில் புபோனிக் பிளேக்கின் கொடிய தொற்றுநோய் இருந்தது. இது மார்சேயில் தொடங்கியது, பின்னர் அது "மார்சேயின் பெரும் பிளேக்" என்று அழைக்கப்பட்டது. இறப்புகளின் எண்ணிக்கை 100,000 என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். 1820 ஆம் ஆண்டில் ஆசியாவில் காலரா தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியநாடுகளில் மிகுதியாக இருந்தது. இந்த தொற்றுநோய் சுமார் 100,000த்திற்கும் மேற்பட்ட இறப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்து. 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலால் அரை பில்லியன் மக்களைப் பாதித்து 100 மில்லியனைக் கொன்றது. ஸ்பானிஷ் காய்ச்சல் வரலாற்றில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது இதுபோன்று தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நோய் கிருமிகளில் தற்போதைய 2020ல் அச்சுறுத்தி வருவது கொரானா நோய். மேற்கண்ட நோய்களுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை, அறிவியலில் வழியில்லாததால், ஆன்மிக சக்தியை நாடுவதில் எந்த தவறும் இல்லை, உலக நாட்டு தலைவர்களே தற்போது தங்களது மதத்தைச் சேர்ந்த இறைவனை பிரார்த்தித்து வரும் இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் உள்ள அதித பகுத்தறிவு பேசும் முட்டாள்களும், இந்து மதத்தையும், பிரதமரையும் விமர்சிக்கும் ஒருசில மாக்களின் அறிவைப் பெற்றவர்களும் சமூக வலைதளத்தில் வெறுப்பு பேச்சை உமிழ்ந்து வருகிறார்கள். ஒருசில மூடர்கூட்டம், முட்டாள்தனமாக தான்தோன்றித்தனமாக பிரதமரின் அறிவிப்பையும், மத நம்பிக்கையும் இழிவு படுத்துகின்றனர். இக்கட்டான இந்த கால கட்டத்தில் வீட்டிற்குள் அடைபட்டு வெளியே வர பயந்து பதுங்கியிருக்கும் கொட்டை எடுத்த பல புலிகளும் அறிக்கை என்ற பெயரில் இறை நம்பிக்கையை கேலி செய்வது வேதனையாக இருந்தாலும், இந்த முட்டாள் கூட்டத்தினரை இந்திய மக்கள் பொருட்படுத்துவதில்லை. தற்போது நமக்கு தேவை நோய்கிருமிகளிடமிருந்து விடுதலை, அறிவியலையும் நம்புவோம், நம் முன்னோர்கள் வழியில் இறைவனையும் நம்புவோம், இந்த கொடிய அரக்கனிடமிருந்து இறைவன் நம்மை காப்பதற்கு உலக அளவில் இன்று விளக்கேற்றி, இறைவனிடமி ஒன்றுசேர பிரார்த்திப்போம். கண்டிப்பாக இறை சக்தி நம்மை காக்கும்.