logo
home ஆன்மீகம் மார்ச் 13, 2022
செய்களத்தூரில் அரிவாள் மீது நின்று சாமியாடிய பக்தர்கள்
article image

நிறம்

செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே செய்களத்தூர் ஸ்ரீ கடம்பவன காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற மாசிவருடாந்திர திருவிழாவில் 11.03.2022 வெள்ளிக்கிழமை அன்று இரவு பக்தர்கள் கரகம் சுமந்து சாமியாடி வந்து அரிவாள் மீது நின்று  நேர்த்திகடன் செலுத்தினார்கள். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் குடிமக்கள் கோயிலில் இருந்து மாலையில்  பூஜைப் பெட்டிகளுடன்  அருகே உள்ள வைகை ஆற்றுக்கு புறப்பட்டனர். இரவு வைகை ஆற்றிலிருந்து கரகம் சுமந்து சாமி ஆடியபடி பக்தர்கள் மேளதாளம், வாணவேடிக்கையுடன் கோயிலுக்கு புறப்பட்டு வந்தனர். கோயிலிலுக்கு அருகே சாமியாடிகள் அரிவாள் மீது நின்று சாமியாடி வழிபட்டனர். 

அதைத்தொடர்ந்து  காமாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று உள் பிரகாரத்தை சுற்றி வந்தனர். அததன்பின் மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவில் 12.03.2022 சனிக்கிழமை காலை கோயில் பெண்ணடி மக்கள் காமாட்சி அம்மனுக்கு பால் குடங்கள் எடுத்து செய்களத்தூர் கிராமத்தை வலம் வந்து கோயிலுக்கு வந்தடைந்தனர். அதன்பின்னர் மூலவர் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

இரவு திருவிளக்குபூஜையும் காமாட்சி அம்மன் ரதத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்த்தர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மூன்று வேளை சிறப்பு உணவு வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தலைவர் நாகு பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள்  நாகராஜன்,  அன்புக்குமார், யாழ் முருகன், முத்துப்பாண்டியன், திருஞானம், மகா சரவணன், இராஜா, பழனியப்பன் மற்றும் கோயில் பங்காளிகள் செய்துள்ளனர்.