வளையல்கள் திருமணமான பெண்கள், திருமண ஆகாத பெண்கள் என்று அனைவரும் அணிந்து கொள்வது பழங்காலத்தில் இருந்து நடை முறையிலிருந்து வரும் பழக்கமாகும். கண்ணாடி வளையல்கள் அணிவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. கண்ணாடி என்பது மணல் மற்றும் சிலிகானால் செய்யப்படுவதாகும். வளையல்கள் ஒரு அணிகலன் மட்டும் அல்ல. அவை நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அவைகளை அணிவதின் மூலம் பெண்கள் அழகாக இருப்பது மட்டும் இல்லை அதையும் தாண்டி பல நன்மைகள் உள்ளன. பெண்களுக்கு கண்ணாடி வளையல் அணிவது அவர்களுக்கு இயல்பாகவே சந்தோஷத்தை கொடுக்கும். இதில் ஒரு ரகசியம் இருக்கிறது, அது கண்ணாடி வளையல்கள் மூன் (நிலவு) மற்றும் வீனஸ் ( சுக்கிரன்) கிரங்களூடன் நேரடியாக தொடர்புடையது. இந்த கண்ணாடி வளையல்கள் கிரகத்தின் மீது ஒரு சிறப்பு தொடர்பு கொண்டிருக்கிறது. கண்ணாடி வளையல் அணிந்திருக்கும் போது சந்திரன் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்கிறது. ஒரு கண்ணாடி வளையலை நீங்கள் அணிந்து கொள்ளாதபோது சந்திரனின் தாக்கம் குறைகிறது. சுப நிகழ்ச்சி நாட்களில் பெண்கள் நிச்சயம் ஒரு கண்ணாடி வளையலை அணிந்து, சந்திரனுடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஒரு புனித வேலை செய்யப்படும் போதெல்லாம், பெண்கள் கண்ணாடி வளையலை அணிவார்கள், ஆனால் இந்த கண்ணாடி வளையல்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதனால் உங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷம் பெற பெண்கள் ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு கண்ணாடி வளையங்களை அணிய வேண்டும். சந்திரனின் செல்வாக்கினால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். ஒரு கண்ணாடி வளையலை அணிந்துகொள்வது பெண்களுக்கு முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும். அதே சமயத்தில், எப்போதும் தங்கள் வீட்டில் சந்தோஷம் இருக்கும். கண்ணாடி வளையல்களில் இரண்டு நிறங்கள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகின்றன. அவை சிவப்பு மற்றும் பச்சை. பச்சை நிற வளையல், தேவியின் தத்துவம். இதை அணிவதன் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது. மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத்திறத்தைக் குறிக்கிறது. சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்லனவற்றை அதிகம் கிரகிக்கக்கூடிய சக்தியும் கொண்டது. மு.கிருஷ்ண மோகன் 8526223399 9843096462
நிறம்