பூரண சரணாகதி என்றால் என்ன ?? அதை அடைய என்ன செய்ய வேண்டும் ?? அது என்ன பலன் தரும் ?? சரணாகதி என்றால் இறைவா உன்னிடம் சரணடைந்துவிட்டேன் என்று சரண்புகுவது !! அந்த சரன்புகுவதில் கூட, நான் உன்னிடம் சரணடைகிறேன் என்று இறைவனை வேறாக ? நாம் வேறாக கருதி சரணடைகிறேன் என்பது உன் விருப்பதால் நிகழும் செயலாக கருதி சரண்புகுவது ??!! அதுவே பூரண சரணாகதி என்பது, நான் என்று பிரித்து நினைக்ககூட எதுமில்ல எல்லாம் நீ நிறைந்ததை, உன்னால் ஆனதை, உன்னாலே அளிக்கப்பட்டதை, உன்னுடையதை தான் !! நான் என்றும், எனது என்றும், என்னுடையது என்றும், எனக்கானது என்றும், நினைத்துக்கொண்டு வாழும் மடமையில் இருந்தேன் ??!! நீயே அனைத்துமாகி என்னையும் ஒருவன்போல, எனக்கு என்று ஏதோ இருப்பதுபோல, எனது சொந்தம்போல, எனது உடமைபோல, காட்டிக்கொண்டு வாழும்படி ?? வாழ்வித்து கொண்டு இருக்கும் மாபெரும் கருணையை உன்னாலே உணர்ந்த பின், நான், எனது என்று நினைக்ககூட ஏதுமில்லை என்ற மெய்யை உணர்ந்து !!?? என்று என்னை உன்னில் தொலைக்கிறேன் என்று நீங்கள் அற்று இருப்பது !! அதை அடைய என்ன செய்யவேண்டும் ?? ஏது செய்தாலும், நடந்தாலும், நிகழ்ந்தாலும், அனுபவித்தாலும், அனுபவபட்டாலும் !! அதில் உங்கள் செயல் என்ற ஒன்று இருப்பதாக நினைத்தாலும், அதையும் மீறி உங்களைகொண்டும், மற்றவைகொண்டும், உங்களுக்காகவே வடிவமைத்து நிகழ்த்துகிறான் இறைவன் என்று உணர்ந்து, அந்த நிகழ்வு வழியே கிட்டும் உணர்வை கொடுத்தவனுக்கே சமர்பித்துவிட்டு அனுபவியுங்கள் !! இப்படி சமர்ப்பணம் நிகழ நிகழ, நிகழ்த்துபவன் அதில் இதில் என்று இல்லாது எதிலும் புலப்படுவான்!! அப்படி புலப்படுவதும் அவன்தான் என்று உன்னுள் இருந்து அறிவிப்பதும் அவனே என்று தெளிவை அனுபவிக்க !! நீங்கள் என்று கருதகூட ஏதுமில்லாதவன் என்ற மெய் வெளிப்பட !! சரணாகதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பூரண சரணாகதி நோக்கிய பயணம் தொடங்கும் !! இதனால் என்ன பலன் ?? உன்னுடையது எதுவும் அல்ல என்ற தெளிவு !! வருத்தமும், சந்தோஷமும், பொறுப்பும், அக்கறையும், மானம், ரோஷம், காப்பதும், வாழ்விப்பதும் என்று எல்லாம் இறைவன் நடத்த அவன் எப்படி என்னையும் கொண்டு நடத்துகிறான் என்று அனுபவிக்கவே வாழ்க்கை என்ற தெளிவு, அதில் வருவதும் போவதும் என்னையும் ஓர் பொருளாகி நடக்கும் போது கிட்டும் ஆனந்தமே !! இவன்வரையில் உணர்த்தியது, உங்கள்வரையில் உணர்வாடி பாருங்கள், மேலும்மேலும் உணர்த்துவான் !!
நிறம்