மணத்தக்காளி கீரையை வேகவிட்டு அந்த நீரை தினமும் ஒரு குவளை குடித்து வந்தால் இடுப்புப்பிடிப்பு நீங்கிவிடும். இக்கீரைக்கு வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி உண்டு. நன்கு கூர்மையாக கண்பார்வை கிடைப்பதற்கு இக்கீரை பயன்படுகிறது. தீராத தலைவலியாய் இருந்தால் சிறிது சீரகம், ஒரு கிராம்பு, இரண்டு மிளகு இவற்றைப் பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசிக்கொண்டால் தலைவில பறந்து போய்விடும். சாப்பாட்டில் தினசரி பச்சை வெங்காயம் சிறிது சேர்த்துக் கொண்டால் காது, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. பல் ஈறு வீங்கிக் கொண்டு வலி இருந்தால், படிகாரத்தை சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டு வாயைக் கொப்பளித்தால் அது மறையும். படிகாரத்தூளை வெந்நீரில் போட்டு நகக்கணுக்களை வீங்கி உள்ள விரல்களை சிறிது நேரம் வைத்தால் வலி போகும். சிலருக்கு பானைத் தண்ணீர் பருகினால் சளி பிடித்துக் கொள்ளும். இவர்கள் அந்தத் தண்ணீரில் சிறிதளவு துளசி இலையைப் போட்டு அருந்தினால் நீர் கோவை ஏற்படாது. கொதிக்கும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு ஆற வைத்துக் குடித்தால் செரிமானம் ஏற்படும். வாழைப்பூவை பொரியல் செய்து அதைத்தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிலக்கின்போது வரும் வலி, உதிரப்போக்கு இருக்காது. பச்சை வெந்தயத்தை நல்ல கெட்டித் தயிரில் போட்டு மென்று சாப்பிட சூடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண் தீரும். முள்ளங்கியைச் சாறெடுத்து தடவி வந்தால் தோல் நோய் தீரும். கண்களைச் சுற்றிக் காணப்படும் கருவளையம் முக அழகைக் குறைக்கும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி பத்து நிமிடங்களுக்கு பிறகு குளித்துவர கருவளையம் மாறிவரும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்துவிட்டு ஓரிரு மணி நேரங்கழித்துக் குளிக்க தோல்வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலைகளை உலர்த்திப் பொடியாக்கி மஞ்சள்தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்துவந்தால் தோல்வியாதி நீங்கிவிடும். அந்தப் பொடியை நெருப்பில் போட்டு வீடு முழவரும் புகையைப்பரவவிட, விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைப்பூச்சித் தொல்லைகள் ஒழிந்துவிடும். பெண்களுக்கு மாதவிலக்குக் காலத்தில் ஒன்று மாற்றியொன்று ஏதாவது ஒரு தொந்தரவு இருந்துக் கொண்டிருக்கும். இந்தக் கோளாறுகளுக்காக மருந்து மாத்திரை என்று அலைய வேண்டாம். வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இந்தக் கோளாறுகளில் இருந்து மீளலாம்.
நிறம்