ஆஸ்துமா என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். மருத்துவத்தில் மிகப் பெரும்பாலான உடல் நோய்களுக் கான சொற்கள் கிரேக்க மொழி சொற்களாகும். ஆஸ்துமா எனும் கிரேக்கச் சொல்லுக்கு மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல் என்று பெயர். நுரையீரல் மூச்சு குழல்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளே ஆஸ்துமாவை உண்டாக்குகிறது. மூச்சுக் குழல்கள் சளியால் அடைப்போ, சினியா எனப்படும் சவ்வில் ஏற்படும் அழற்சி யினாலோ ஆஸ்துமா ஏற்படலாம். ஆஸ்துமாவில் பலவகைகள் உண்டு. ஆஸ்துமாவை முழுமையாகக் குணப் படுத்தும் அற்புதத்திறன் கண்டங்கத்தரிக்குஉண்டு. "நித்திய கண்டம் பூரண ஆயுள்' -இந்தப் பழமொழிக்கு ஏற்ப இந் நோய் பாதித்தவர்கள் அவதிப்படுவர். அதாவது தான்படும் தினசரி வேதனையானது மரணத்திற்கு ஒப்பானது. ஆனால் பூரண ஆயுளுடன்இருப்பதாகவும் அர்த்தமாகிறது. இவ்வளவு வேதனையான இந் நோய்க்கு நமது முன்னோர் எளிமையான வைத்தியத்தை கடைப்பிடித்துள்ளனர். கண்டங்கத்திரி இலை, பூ, காய், வேர் ஆகிய வற்றை வகைக்கு 20 கிராம்எடுத்துக் கொள்ள வும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்த ரத்தை,அதிமதுரம், சீரகம், சோம்பு, கடுஞ்சீரகம், ஜாதிக்காய், சடாமாஞ்சில்,சதகுப்பை, ஓமம், மாசிக்காய், கற்கடகசிருங்கி, ஏலக்காய், கடுக்காய்,இந்துப்பு, பச்சைக் கற்பூரம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) போன்றவற்றை வகைக்கு பத்து கிராம் கலந்து,அனைத்தையும் தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவுபொடியை எடுத்து இரண்டு டம்ளர் (400 மிலி) நீருடன்சேர்த்து கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து சிறிது பனங்கற்கண்டுசேர்த்துச் சுவை யாக, காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர,சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தலைவலி, தலைபாரம், தும்மல்,மூக்கடைப்பு, பசியின்மை போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கி, நித்தியசௌக்கியம் மற்றும் பூரண ஆயுளுடன் வாழலாம். ஆஸ்துமா நோய் பல்வேறு வகையில் பிரிக்கலாம் அதில் முக்கியமானவைகள்: 1. காற்றுக் குழல் ஆஸ்துமா ((Bronchial Asthma) மூச்சுக் குழாயின் அளவு குறுகி விடுவதால், சளி அடைப்பு ஏற்பட்டு, மூச்சு இரைபப்பு உண்டாகும். 2. இருதய ஆஸ்துமா ((Cardiac Asthma): இருதயத்தின் இடது வென்டி ரிக்கிள் குறைபாடுகள் காரணமாக தோன்றுகிறது. 3. வெளி ஆஸ்துமா (External Asthma): தூசி, புகை, வாசனை திரவியங்கள், இரசாயனங்கள் போன்ற வைகள் காரணமாக அழற்சி ஏற்பட்டு தோன்றும் மூச்சிரைப்பு. 4.உள் ஆஸ்துமா (Internal Asthma): கோபத்தை அடக்குதல், பயம், உடலுறவுக்குப் பின் மூச்சிரைப்பு, தன் குடும்பத்தினரிடம், விருப்பமானவர்களிடம் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாமல் அடக்கி வைப்பது, மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டு பயப்படுதல், சில மருமகள்கள் மாமியாருடன் இருக்கும் போது ஏற்படும் மன பயம், அல்லது மாமியாருக்கு மருமகளைக் கண்டு பயம் என பலவித உணர்ச்சி தடுமாற்றத்தால் ஆஸ்துமா வருவதுண்டு. மேலும் பரம்பரைத் தன்மையினாலும் ஆஸ்துமா தோன்றும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு உணவு கட்டுபாடு தேவை. ஆஸ்துமா நோயாளி களுக்கு சீரணமண்டலத்தில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மிக குறைவாக சுரக்கின்றது. எனவே சீரணத்தன்மை பாதிப்பு ஏற்படுவதால் அதிக உணவு உண்பதால் சீரணமாகாது. வாந்தி மற்றும் வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பொதுவாக இரவு நேரங்களில் சீரணமண்டல செயல்கள் மிகவும் குறைவாக இருக்கும். ஆஸ்துமா நோயாளி கள் இரவு நேரங்களில் எளிதில் சீரணமாகக் கூடிய எளிய உணவுகளை, குறைவாகவே உண்ணவேண்டும். குறிப்பாக தயிர், மோர் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நிறம்