logo
home மருத்துவம் ஜனவரி 24, 2016
அல்சரைப் போக்கும் அருமையான காய் பீட்ரூட்
article image

நிறம்

அழகிற நிறம் மற்றும் நிறைய சத்துகளை கொண்ட காய் பீட்ரூட். நிறைய மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். 2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். 3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும். 4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். 5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். 6. இரத்த சோகையை குணப்படுத்தும். 7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும். 8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும். 9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.