நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னை முதுகு வலி சரியான முறையில் அமர்ந்து வேலை செய்தால், முதுகு வலியைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். தலையை நேராக வைக்க வேண்டும்: கணிப்பொறியின் திரைக்குச் சரியான உயரத்தில் தலை (பார்வை இருக்க வேண்டும் தலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ, திரையைப் பார்க்குமாறு உட்காரக் கூடாது. எனவே, அதற்கேற்ற வகையில் மேசையும் சாய்வு நாற்காலியும் இருக்க வேண்டும். கழுத்துக்கு அழுத்தம் தருவது முதுகு வலிக்குக் காரணமாகிவிடும். சற்றுசாய்ந்து உட்கார்வது சிறப்பு: நாற்காலி 1600 டிகிரிஅளவுக்கு சாய்வாக இருக்கட்டும். இருக்கைக்கு ஏற்றவாறு இடுபுக்கு அழுத்தம் தராமல் சற்று சாய்ந்து உட்கா‘ர வேண்டும். கணிப்பொறி இருக்கும் பக்கம் முன்னோக்கி சாய்வதோ, அளவுக்கு அதிகமாகப் பின்நோக்கிச் சாய்வதோ கூடாது. பிரத்யேக சாய்வு நாற்காலியைப் பெற வேண்டும்: கணிப்பொறியில் அமர்வதற்கு ஏற்ற, பிரத்யேக சாய்வு நாற்காலி (கம்ப்யூட்டர் சேர்) இருக்க வேண்டும். எழுதுவதற்கு, சாப்பிடுவதற்கு என மற்ற செயல்களுக்கு இந்த நாற்காலியைப் பயன்படுத்தக் கூடாது. மேசையின் உயரத்துக்கும் உங்களின் உயரத்துக்கும் ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்யும் வசதியுள்ள சாய்வு நாற்காலிகளைப் பயன்படுத்த வேண்டும். உடல் எடைக்கு தகுந்த, முதுகைக் குறிப்பாக கீழ்முதுகைக் தாங்குவது போன்ற நாற்காலியைத் தேர்வு செய்வது அவசியம். கைப்பிடிகளைப் பயன்படுத்த வேண்டும்: நாற்காலிகளில் இருக்கும் கைப்பிடி யின் மேல் கைகளை வைக்க வேண்டும். கைப் பிடிகளின் உயரத்துக்கு இணையாக விசைப் பலகை (கீபோர்டு) இருக்க வேண்டும். கைப்பிடிக்கு உயரமாகவோ அல்து கைப் பிடிக்கு கீழாகவோ விசைப் பலகை இருக்கக் கூடாது. தொடைகளுக்குப் பக்க பலன் அவசியம் : நாற்காலியின் நுனியில் உட்காரக் கூடாது. தொடைகள் முழுவதுமாக நாற் காலியில் இருக்குமாறு அமர வேண்டும். தொடை களைத் தொகப்போடக் கூடாது. தரைக்கு இணயாக தொடைகள் இருக்க வேண்டும். என்பதைக் கவனத்தில்கொள்ளவும். பாதங்களை தொங்கவிடக் கூடாது: பாதங்கள் சாய்வாக இருக்க வேண்டும். பாதங்கள் தொண்டைக்கு செங்குத்தாகவோ, கெண்டைக்காலை மடக்கி உள் இழுத்தோ வைக்கக் கூடாது. பாதங்கள் மற்றும் கெண்டைக்கால் சரியான நிலையில் இல்லை எனில், இடுப்புப் பகுதியில் அழுத்தம் ஏற்படும்.
நிறம்