வெந்தயக் கீரைக்கு வெந்தயம், மேதி, வெந்தை என வேறு பெயர்களும் உள்ளன. கார்ப்புச் சுவை கொண்ட வெந்தயக் கீரை குளிர்ச்சியானது. சிறு நீர்ப் பெருக்கியாகச் செயல் படுவது. வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்து வர, வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம், நீர் வேட்கை, சீதக் கழிச்சல் போன்ற பிரச்னைகளைப் போக்கும். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், ரத்தச் சோகை வராமல் தடுக்கும். வயிற்றுப் புண் உள்ளவர்கள் அரை டீஸ் பூன் வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அருந்த, விரைவில் குணமாகும். பார்வைத் திறனை மேம்படுத்தும். உடலுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். வயிற்றுப் போக்கு, செரி மானப்பிரச்னைகள் மற்றும் இரைப்பை பிரச்னைகளுக்கு வெந்தயக் கீரை அருமருந்து. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸி டன்ட், வயதாவதால் ஏற்படும் தோற்றத்தின் முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. கோழிமுட்டை, தேங்காய்ப் பால், நெய் இவற்றுடன் வெந்தயக் கீரையை சேர்த்துச் சாப்பிட்டால், இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும். வெந்தயக் கீரையை அரைத்து, வெல்லம் சேர்த்து லேகியமாகச் செய்து சாப்பிட, கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள் குண மாகும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் கள் உணவில் வெந்தயக் கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும். மாதவிடாய் வலி, பிரச்னைகளைப் போக்கும். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு, அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். மனதுக்கும் உடலுக்கும் சக்தியைத் தரும். வெந்தயக் கீரையின் இலைகள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் விகிதம், (கிளைசெமிக் குறியீடு) குறைகிறது. கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சுருக்கங்கள் இருந்தால், வெந்தயக் கீரைச் சாற்றைத் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர, முகம் பொலிவு பெறும். பருக்கள் நீங்கும். ப்ரெஷ்ஷான வெந்தயக் கீரையின் இலைகளை அரைத்து, பேஸ்ட் செய்து, உச்சந்தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர, கூந்தல் நன்கு வளரும். முடி உதிரும் பிரச்னை குறையும்.
நிறம்