வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த பழங்களில் ஒன்று ஸ்ட்ராபெர்ரி. ... ஸ்ட்ராபெர்ரி என்றால் நம் நினைவுக்கு வருவது நம் கண்களை கவரும் அழகும், சுகந்த மணமும், கருஞ்சிவப்பு நிறமும் ஆகும். இவை கோடைகாலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன. மேலும் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன,
நிறம்