கர்ப்பமாக இருக்கும் போது செய்யும் செயல்களில் இருந்து, உண்ணும் உணவு வரை கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் மிகவும் எச்சரிகையுடன் நடக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் தான் அதிக கவனம் அவசியம். ஏனெனில் ஒருசில உணவுகள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்து நேராமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணிகளும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள் மீன்களை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மீன்களில் மெர்குரி அதிகம் உள்ளது. இவை சிசுவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மீன்களை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முட்டை, சிக்கன், மட்டன் போன்றவற்றை உட்கொள்ளும் போது அவற்றை நன்கு வேக வைத்து உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவற்றில் உள்ள சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா சிசுவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அன்னாசிப்பழம், பப்பாளிப் பழம் போன்றவற்றை கர்ப்பிணிப் பெண்கள் அறவே தொடக்கூடாது. ஏனெனில் இவை உடலின் வெப்பத்தை அதிகரித்து, கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். எந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் முன்பும் நீரில் நன்கு கழுவிய பின்னரே உட்கொள்ள வேண்டும். அப்படி கழுவாமல் சாப்பிட்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்தும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவற்றை சாப்பிடும் போது, அவற்றை சுடுநீரில் கழுவி, பின்னர் சமைத்து சாப்பிட வேண்டும். முக்கியமாக கடைகளில் விற்கப்படும் ஜுஸ்களை வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் பாதிப்பு ஏற்படும். எனவே ஜூஸ் வேண்டுமானால், பழங்களை வாங்கி வந்து வீட்டிலேயே செய்து குடியுங்கள். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com
நிறம்