logo
home மருத்துவம் மே 15, 2016
என்றும் இளமையும், நோய் நொடியின்றியும் ஆரோக்கியமாக வாழ உதவும் சூரிய நமஸ்காரம்
article image

நிறம்

தொன்று தொட்டே பண்டைய மக்கள் பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரம் இது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது. மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்று இருகிறது. ஜிம்னாஸ்டிக், சன்பாத், என்ற பெயர்களில் சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய பயிற்ச்சிகள் செய்து வருகின்றனர். மேலை நாடுகளில் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு தனிப்பட்ட பயிற்சிக் கூடங்களும் செயல்பட்டு வருகிறது, இந்து மதத்தை கேலியும் கிண்டலும் செய்தவர்கள்கூட சூரிய நமஸ்காரத்தை கேலி செய்யாமல் அதை தனது வாழ்வின் ஒரு பகுதியாக்கிக் கொண்டு சூரியநமஸ்காரம் செய்து வந்துள்ளனர் என்பது உண்மை. சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலில் உள்ள எல்லா மூட்டுக்களும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் விட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய கதிர்களுக்கு உண்டு. கல்சியம் உற்பத்தியை கட்டு படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உறுப்புகளும் உறுதி பெறுவதால் காச நோய் அணுக்களின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கின்றன. தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயது முதிர்ச்சியையும் ஓரளவுக்கு தடுக்கலாம். மூட்டுக்கள் நல்ல லாபகம் அடைகின்றன. தொப்பை வயிறு வருவதை தடுக்க இயலுகிறது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது. சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். குளிர் நீரில் குளிக்க வேண்டும், காற்றோட்டம் உள்ள இடத்தில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் இறுக்கமான உடை அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com