தற்போதைய இயந்திரமயமான உலகில் வாழும் நாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்கிறோம், அதில் ஒன்றுதான் தூக்கம். இரவு பணி, மற்றும் அலுவலகம், வீடு போன்றவற்றில் பணிபளுகாரணமாகவும், மன சஞ்சலம் காரணமாகவும் தூக்கத்தை இழக்கும் நமக்கு தூக்க மாத்திரைதான் ஓரளவு கை கொடுத்தாலும், அதனால் பிற்காலத்தில் பக்கவிளைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனைக்கு சரியான தீர்வு... எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ,இரவு உறங்குவதற்கு முன்பாக இரண்டு கால்களையும் முழங்கால் முதல் பாதம் வரை கழுவுங்கள். இரண்டு கால்களையும் ஒரே சமயத்தில் வைக்கும் அளவு ஒரு பாத்திரம் அல்லது பக்கெட் எடுத்து பாதங்கள் முட்டிவரை நனையும் அளவு,தாங்குகின்ற அளவு சுடுநீர் ஊற்றுங்கள். பத்து கால்விரல் நகங்களிலும்,நகக் கணுக்களிலும் பசு வெண்ணையை தடவுங்கள்.பாதம் அடிப்பக்கம் முழுவதும் விளக்கெண்ணையை தடவுங்கள்.நன்றாக ரிலாக்ஸ் ஆக உட்கார்ந்து கொண்டு,கால்களை சுடுநீர் வைத்துள்ள பாத்திரம் அல்லது பக்கெட்டில் ஒரு பத்து நிமிடம் வைத்து,கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் என்றால், கண்களின் மீது,நல்ல குளிர்ந்த நீரில் நனைத்த சுத்தமான பஞ்சு வைத்துகொள்ளலாம். பத்து நிமிடம் கழித்து கால்களை வெளிய எடுத்து துடைத்து விடவும்.முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.பாதத்தில் சிறிது விளக்கெண்ணை தடவி,உடனே உறங்க செல்லவும்.நன்றாக உறக்கம் வரும். காலை எழுந்திருக்கும் போது, மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www. aanmeegamalar.com எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com
நிறம்