logo
home மருத்துவம் ஜூன் 16, 2016
உடல் சோர்வு மற்றும் சக்தி இழப்பு, இரத்தசோகை, வியர்வை துர்நாற்றம் போன்றவற்றிற்கு அரிய இயற்கை உணவுகள்
article image

நிறம்

1. உடல் சக்தி பெற:
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

2. முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

3. முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

4. வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

5. இரத்த சோகையை போக்க:
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.

6. பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.       

7. சேற்றுபுண் குணமாக:
காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

8. வெட்டுக்காயம் குணமாக:
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. பற்கள் உறுதியாக இருக்க:
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

10. தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

11. தும்மல் நிற்க:
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

12. படர்தாமரை போக்க:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

13. வயிற்று வலி நீங்க:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

14. அஜீரணசக்திக்கு:
சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

15. அறிவு கூர்மை அடைய:
வல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் .

16. சிலந்தி கடிக்கு:
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

17. வயிற்று நோய் குணமாக:
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

18. உடல் வலிமை பெற:
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

19. சீதள பேதியை குணப்படுத்த:
100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

20. சுகப்பிரசவம் ஆக:
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

21. வீக்கம் குறைய:
மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.

22. குடல் புண் ஆற:
வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

23. நரம்பு தளர்ச்சி நீங்க:
தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

24. காய்ச்சல் குணமாக:
செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

25. நாக்கில் புண் ஆற:
அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.



குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
     

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com